புதன், 18 மே, 2016

Tagged Under:

குமுதினி ரமணன் எழுதிய சிறகிழந்த பறவைகள்

By: Unknown On: பிற்பகல் 12:08
 • Share The Gag

 • எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத

  கர்வம் மிகுந்த வீரப் பறவைகள்.
  வேடன் இட்ட சதி வலையில்,
  சிறகுகள் வெட்டப்பட்டு
  வேடன் வகுத்த தனி வழியில்
  குவியல் குவியலாக
  இறக்கை வேறு உடல் வேறு
  முண்டம் வேறு பிண்டம் வேறாக
  பாதை எங்கும் கண் பெற்ற பாவமாக காட்சிகள்.


  உடலோடு உயிர் மோதி துடிக்கும் வலியை
  அணுவணுவாக அனுபவத்தபடி, தன்
  உயிர் விட்டு விடும் இறுதி வழியும் தெரியாமல்
  தன் இரண்டு குஞ்சுகளும் தன் கண் முன்னே தொலையக்கண்டு
  பதறி துடித்து கதறி அழுதும் ஆறுதல் இன்றி
  நட்பும் பறவையும் நன்றிப் பறவையும் தம் நினைவற்றுப் போக
  துரோகம் தந்த வலியோடு புதைக்கப்படாத
  உடலோடு உயிர் வேண்டா வலியோடு
  இன்னும் கூண்டுகளில்.

  எமது தேச உர்வுடன்
  ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி:

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக