புதன், 18 மே, 2016

Tagged Under:

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய நீளட்டும் கரங்கள்...!

By: Unknown On: பிற்பகல் 12:20
 • Share The Gag
 • வழங்கிய கரங்களின்
  வாரிசுகள்...
  வீர மறவர்களின்

  தீப்பொறிகள்.
  சாவினைத் தழுவிய
  சந்தன மேனியரின்
  பிள்ளைகள்...!


  நாதியற்றோராய்
  வீதிக்கு விரட்டப்
  பட்டோராய்
  பட்டுப் போன தமிழ்
  சமூகத் தளைகளாய்
  எங்களால் கை
  விடப்பட்டோராய்.
  அடையாளம் இழந்த
  அநாதைகளாய்...!

  மாவீரர் குடும்பம்
  மாமனிதர் குடும்பம்
  நாட்டுப் பற்றாளர்
  குடும்பம் என
  நாமம் சூட்டி
  போற்றிப் பாடியவர்
  நாம் அவர்கள்
  நாமம் மறந்தவராகிட
  காவல் தெய்வங்களின்
  குடும்பம் தெருவில்..
  எல்லாம் மறந்தோம்.!

  அச்சத்துக்கு ஆணியடித்த
  மறவரால் விடுதலைக்கு
  அச்சாணியேறியது.
  துஞ்சாமல் துவளாமல்
  நெஞ்சை நிமிர்த்தி
  அணிவகுத்தோரின்
  அடையாளங்கள்
  அவமானதோ..!

  உறவுக்கு பிச்சை
  உணர்வுக்கு பிச்சை
  எழுச்சிக்கு பிச்சை
  அறிவுக்கு பிச்சை
  உயிருக்கும் பிச்சை
  வயிற்றுப் பசிக்கும்
  பிச்சை பிச்சையாகி
  பிய்ந்து போகின்றனர்.
  எங்கள் கரங்கள் நீண்டால்
  அவர்கள் கரங்கள் சுருங்கும்.


  எமது தேச உணர்வுடன் ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக