சனி, 30 ஏப்ரல், 2016

கவிஞர்சுபாரஞ்சனின் ஈரம் தோய்ந்த சித்திரை!

By: Unknown On: PM 2:34
  • Share The Gag
  • வியர்வைத் துளிகள்
    வழிகிற போது
    மனசு
    மழைக்கான
    சாத்தியங்கள் தேடி
    வானியை அறிக்கையில் 
    ஒன்றில்
    தொலைகிறது..........
    ______________________(சித்திரையில் )

    மயிர்க் கணுக்கால் 
    கூச்செறிந்து
    கூதல் கொண்ட மனசு
    ஈரம் தோய்ந்த சித்திரையை
    வழியனுப்பி வைக்கிறது ...
    .

    ஆக்கம் கவிஞைர்

    வியாழன், 28 ஏப்ரல், 2016

    கவிப்புயல் இனியவனின்

    By: Unknown On: AM 7:23
  • Share The Gag
  • ஆயிரம் முறை ....
    திரும்பி பார்த்தவள் ...
    இப்போ ....
    குனிந்தபடி செல்கிறாள்....!!!

    பூவை கொடுத்து ...
    பூவாக வர்ணித்து ....
    பூவையை காதலித்தேன் ....
    உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

    என் கவிதையை ....
    எல்லோரும் விரும்பவைத்த ....
    உன் வலிகளுக்கு நன்றி ....!!!

    ஆக்கம் கவிப்புயல் இனியவன்

    கவிக்குயில் சிவரமணியின் முகமூடி

    By: Unknown On: AM 4:20
  • Share The Gag
  • அசைபோட்டு 
    இரைமீட்கும் 
    நினைவுகளில் 
    அரிதாரம்பூசா
    அவதாரங்கள் அதிகமோ..???

    கருப்பொருள் எதுவாக
    மறைபொருள் தானாக
    பொறாமை தீயாக
    கடிமனம் மானிடராக
    இடைவிடாதுயறுரும் 
    இழிநிலை எதனாலோ ..???

    சொல் நேர்த்தி 
    செயல்நேர்த்தி
    சொல்லாடும் களம் நேர்த்தி 
    அகத்தோட்டம் நேர்த்தி 
    அதுவின்றிபானால் 
    ஆகுமோ நேர்த்தி ...??

    வேடத்தில் வெண்மை
    வெள்ளைத்துரை நேர்மை 
    தோற்றத்ில் குழைவு 
    தோண்டினால் குழவி
    குத்துவதும் குடைவதும் 
    விதைத்தின் கணக்குப்படி..!!

    ஆடத்தெரியாதவன்
    அரங்கை ஆராயலாமோ
    அகமதும் புறமதும் 
    அழுக்கானவர் 
    அன்பினர் ஆவாரோ
    ஆயிரம் முகமூடி..ஆங்காங்கே 
    முகமூடி நிரந்தரமில்லை புதுமொழியிங்கே...!!

    கனவு கண்டது ஆக்கம்  கவிக்குயில் சிவரமணி

    செவ்வாய், 26 ஏப்ரல், 2016

    குமுதினி ரமணனின்"தாலாட்டு"

    By: Unknown On: AM 11:00
  • Share The Gag


  • ஆராரோ ஆரிராரோ
    என் கண் மணியே கண்ணுறங்கு.

    பத்துத் திங்கள் என்னக்குள் வாழ்ந்த
    என் உயிரே நீயுறங்கு.

    உயிருக்குள் பொத்தி வைத்த
    உணர்வெல்லாம் நீதானே என் நினைவே நீயுறங்கு.

    அம்மா என்ற சொல்லில் என் வாழ்விற்கு 
    அர்த்தம் தந்த உணர்வே நீயுறங்கு.

    நீ காணும் கனவெல்லாம் 
    நினைவாகக் காத்திருப்பேன் வாழ்வே --நீயுறங்கு.

    உதிரத்தைப் பாலாய் உரமாக 
    ஊட்டிடுவேன் உறுதி பெற்று நீயுறங்கு.

    ஏழ்மையிலே வாழ்ந்தாலும்
    ஏற்றிடுவேன் உன் வாழ்வை என் செல்வமே நீயுறங்கு.

    வறுமை வந்து வாட்டினாலும் பொறுமை நான் காத்திடுவேன் என் சொத்தே நீயுறங்கு.
    நோய் வந்து தாக்கினாலும்
    நோகாமல் உனை காப்பேன் என் தெய்வமே நீயுறங்கு.

    ஊர் போற்றும் உத்தமனாய்
    உண்மையாய் வாழ்ந்திடனும் என் வாழ்வே நீயுறங்கு.

    பார் போற்றும் அறிவாலே
    பக்குவமாய் வாழ்ந்திடனும் 
    என் தவமே நீயுறங்கு.

    தமிழ் போற்றி தரணியிலே
    அற்புதமாய் மிளிர்ந்திடனும்
    வைரமே நீயுறங்கு.


    ஆக்கம்   
    குமுதினி ரமணன் யேர்மனி:

    திங்கள், 25 ஏப்ரல், 2016

    கவித்தென்றல்‬ எழுதிய•இன்பம் தரும் இரவு•••••

    By: Unknown On: AM 11:45
  • Share The Gag
  • விண்ணும் தன்னை மறந்து மண்ணை காணுதே
    வெட்டவெளியதை வேடிக்கை பார்க்குதே
    கண்ணைக் கவரும் மாயங்கள் வானில் நடக்குதே
    நள்ளிரவானால் உலக அழகில் மனம் பறிபோகுதே..!!

    வர்ண ஜாலம் போடும் வானமே
    வாழ்வில் நான் கண்ட புதினமே
    எண்ணி எண்ணி உனை தினமே
    ஏக்கம் கொள்ளுதே என் மனமே..!!

    மண்ணில் நான் பிறந்தேன் 
    உன் விந்தை கண்டு வியந்தேன்
    இயற்கை ஒரு வரமா இதம் தினம் தருமா
    இரவில் இத்தனை அதிசயமா இன்பம் கோடி அதில் நலமா.!!

    அமைதி எப்போதும் உன்னில் தஞ்சம்
    அழகுக்கு இல்லை இரவில் பஞ்சம்
    இரவை ரசித்தால் நீயும் கொஞ்சம்
    எல்லையில்லா மகிழ்ச்சி மனதையும் மிஞ்சும்..

    ஆக்கம்
    கவித்தென்றல் 

    ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

    கவித்தென்றல்‬ எழுதிய கயல்விழியே

    By: Unknown On: AM 4:26
  • Share The Gag
  • உன்
    கடைவிழியால் களவாடி
    கைதானேன்

    கயல்விழியே 
    இன்று உன்னால் 
    காதல் கடன் காரன்

    தினம் 
    நடை தொடர்ந்து
    உன் பின்னால் 
    உடன் வாரேன்

    ஒரு
    விடை கொடுவேன் 
    இந்நாள் -உன்
    உறவாவேன்

    நீ ....
    தடை விதித்தால் 
    எங்ஙனம் நான் 
    உயிர் வாழ்வேன்.

    ஆக்கம்
    கவித்தென்றல்




    வெள்ளி, 22 ஏப்ரல், 2016

    கவிஞர்சுபாரஞ்சனின் பூமியை காப்பது கடமை ......

    By: Unknown On: AM 4:55
  • Share The Gag
  • வனங்களை வளங்களை
    அழிக்க மனங்களும் சிதையும்
    வாழ்வும் தொலையும் ....

    நல்ல பழங்கள் காய்கள் உண்ண
    மரங்கள் நட்டு வளம் 
    பெற வேண்டும்......

    நிலவுலகை காக்க 
    நீர்நிலைகள் 
    வேண்டும்.......
    மாசுறாத வழியில் 
    நாம் விழிக்க வேண்டும் ..........

    அடுத்த தலைமுறை
    நிறைவாய் வாழ
    வளங்களை காத்து
    பரிசாய் கொடுக்க வேண்டும்.........

    ஆக்கம் கவிஞைர்
    சுபாரஞ்சன்

    (பூமியை பாதுகாப்போம் )

    குமுதினி ரமணனின் எனக்குள் உலகம்.

    By: Unknown On: AM 4:32
  • Share The Gag

  • அமைதியும் மௌனமும் உலகின் அழகிய விழிகளாகலாம். தூய்மையும் சுவாசமும் பிராண வாயுவாகலாம். ஒற்றைக்கல் தீப ஒளி அகல் விளக்காகலாம். இயற்கையின் பச்சையில் இனிமை காணலாம். தெளிந்த நீர் போல் கண்ணாடியாய் மனதைக் காணலாம். எனக்குள் உலகம். எனக்கேன் உலகம்.


    ஆக்கம் குமுதினி ரமணன் யேர்மனி:

      


     













    நயினை விஜயனின் .முல்லைமோகனின் பிறந்தநாளுக்கான வாழ்த்து.!

    By: Unknown On: AM 4:19
  • Share The Gag

  • மணிக்குரல் தந்த 

    மணிக்குரல் விந்தை 
    மனதை மயக்கும் 
    மாயக்குரல் 
    பொன்னிறத்தவன்
    பொன்மனத்தவன் 
    நாற்பது ஆண்டுகள் மேலாய் 
    மேடைகள் கண்டவன் !
    ஐரோப்பிய தமிழர் 
    தொலைக்காட்சியில் 
    முதலில் தோன்றியவன் !
    முத்தான மகளை பரதத்தில் 
    பதித்தவன் !
    கவினுறு மனையாளுடன் 
    விழாபல கண்டவன் !
    ஐிரிவி தொகுப்பில் 
    அனைவரையும் 
    இணைப்பவன் 
    இயமனை கண்டு 
    தன் குரல் கொண்டு
    மீண்டவன் !
    எங்கள் விழாக்கள் பலதையும்
    அழகுறத் தொகுத்து 
    அழியாப் புகழ் 
    கொண்டவன் !
    தமிழே உயிராய் மூச்சாய் 
    கொண்டவன் ! 
    மாருதப் பூங்கா எனும் 
    மனங்கவர் நிகழ்வை 
    முதலாய் கலைக்குத் 
    தந்தவர் ! 
    அன்புறு குழந்தைகள் 
    அரவணைப்பில் வாழ்பவர் !
    ஆக மொத்தம் 
    எல்லோர்க்கும் இனியவர் 
    பல்லாண்டுகள் வாழ 
    இதயத்தால் வாழ்த்துகிறேன் !

    - நயினை விஜயன் -

    வியாழன், 21 ஏப்ரல், 2016

    கவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஒலிக்கூடம்....!

    By: Unknown On: PM 4:51
  • Share The Gag
  • இசைச் சுரங்கம்
    நேர்த்தியான ராகம்
    சீரான சுருதி
    கட்டுக்குள் சுதி
    இந்தக் கூட்டுக்குள்
    லப் டப் எனும்
    தப்பாத தாளம்
    தப்பாமல் கேட்கும்..!.....

    நதி போன்று
    ஓடிக் கொள்ளும்
    குருதியை
    நாடி நாளம்
    எனும் இரு
    வழிப் பாதையால்
    வகுத்துச் செல்லும்
    நல்லது
    கெட்டதையும்
    நன்கறியும்...!

    இடையூறில்லாது
    நித்தம் கேட்கும்
    சத்தம்.! இதன்
    சத்தம் நின்றால்
    எல்லாமே சுத்தம்
    சுற்றம் சூழ்ந்து
    போடுவார் சத்தம்
    அன்றே ஒலிக்கூட
    வாழ்வுக்கு முற்று...!


    ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி




    மார்ஷல் வன்னி எழுதிய அம்மாவும் நானும் !

    By: Unknown On: PM 2:21
  • Share The Gag
  • பெளர்ணமி விரதமும் 
    அம்மாவும் நானும் !
    ஆண்டு தோறும் நீ வருவாய் என்று
    புன்னகை பூத்திருந்து காத்திருப்பேன் 
    பெளர்ணமி நிலாவே !

    தாகம் நாவை வாட்ட வயிற்றை பசி வாட்ட ஊர் உறங்கும் நேரத்தில் வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்-உன் ஆனந்த பவனிக்காய் !
    பதினைந்து ஆண்டுகளாக உன் வருகை கண்டு என் புன்னகையும் சுருங்கியது...என் மனமும் தடுமாற்றத்தில் திக்குமுக்காடியது !
    நீ வரும் பாதையை இழுத்து சாத்திக்கொண்டேன் நீயும் ஒவ்வொரு ஆண்டும் என்னை தேடி வருகிறாய் உன் வருகை கண்ட என் மனசு உன்னை உதறி தள்ளியது !
    அம்மா....
    மீண்டும் என்னோடு பேசினால் என்ன..?
    ஒரு தடவை என்னை வந்து பார்த்தால் என்ன என்று சின்னப்பிள்ளை தனமாக என்னுள் தோன்றும் ஆனால் நான் வீட்டில் கடசி என்பதலோ என்னவோ என்னால் தூக்கி காவி செல்ல முடியாத பாரத்தோடு தினமும் கேவி கேவி அழுகின்றேன் !

                                                           ஆக்கம் 
    மார்ஷல் வன்னி


    மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய பற்றுவை தாய் மண்ணின் மீது

    By: Unknown On: AM 8:11
  • Share The Gag
  • மூத்தோர் தம் முதுகு கூனல் போல்
    முத்தம்ழை முடக்க சதி நிகழ்கிறது

    பெற்றோர் பாசமீறி தாய்மண்ணுக்காய்
    வித்தானோரின் நினைவுகள் சொல்கிறது

    நாற்று நட்ட நிலத்தினிலே
    பற்று கொண்ட மரவர்கள்
    காற்றும் புகா கல்லறுக்குள்
    யாகம் தொடர்கின்றது

    தோற்றவர் நாமென தூற்றினாலும்
    பெற்ற வெற்றிகள் பறை சாற்றுகின்றது
    கற்றவர் மறவாதிருக்க புகட்டி பாடம்
    தடயங்களாய் ஆங்காங்கே தெரிகின்றது

    போற்றிப்பாடிட பேனாமுனை பெருமிதம் கொள்கின்றது
    பெருமை புகழ்ந்த புதுவைப்புலவனின்
    பெரும்வீரவரிகள் கடமையை நினைவுகூறுகின்றது

    மாற்றிட எவனால் முடியும் 
    மாற்றங்களால் எம்மனமா பணியும்
    முற்று வைக்க நினைத்தவனுக்கு
    முற்றத்தைக்காணது அவர் விழி

    பற்றுவை தாய்மண்ணில்
    சற்று விலகிநிற்பார் பகை உன் வழியில்

    ஆக்கம் மட்டுநகர்
    கமல்தாஸ்

    மீரா குகனின் கார்மேகம்

    By: Unknown On: AM 5:37
  • Share The Gag
  • பால்வெளி வீதியில்
    அந்தரித்த நிலையில்
    ஒரு கார்மேகம்
    இங்கும் அங்கும்
    திசை தெரியா திக்கில்
    அலைந்தபடியே
    அமைதியை தேடுகிறது.

    அல்லலுற்ற மனதை
    ஆசுவாசப்படுத்தியவண்ணம்
    பரந்து கிடக்கும் அண்டத்தில்
    தனக்கொரு இடம் கிடைக்குமோ
    என்ற ஒரு அழ்ந்த எதிர்பார்ப்பில்,
    சுடர் விடும் நிலவின் வெளிச்சத்தை
    மறைக்கவும் விரும்பாமல்
    தணல் என்று தகிக்கும்
    சூரியனின் வெப்ப கதிருக்கும்
    தன்னை இரையாக்காமல்....

    ஆனாலும் தனக்கென்று
    ஒரு இடம் தேடியே
    அமைதியின்றி பாவம்
    தடுமாறுகிறது
    உணர்வுகள் மட்டும்
    அதன் சொந்தம்
    கற்பனை தோற்றத்தின்
    மறு பிம்பம்
    இரவும் மங்கிய நேரத்தில்
    புன்னகையை இதழில் சுமந்தபடி
    காலமாய் காத்திருக்கிறது !
    ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

    வினோதனின் வெளிவரவிருக்கும் இயக்கத்தில் "மனசுக்குள் ஒரு மழைச்சாரல்"

    By: Unknown On: AM 5:05
  • Share The Gag


  • இயக்குனர் வினோதனின் இயக்கத்தில்
    விரைவில் வெளிவரவிருக்கும்
    "மனசுக்குள் ஒரு மழைச்சாரல்" திரைப்படத்திற்கு இலங்கை திரைப்பட தணிக்கை குழுவினரால் அனைவரும் பார்க்க கூடிய திரைப்படம் என்று தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
    இந்த திரைப்படத்தின் 2k தரத்திலான முன்னோட்டம் மிக விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் வினோதன் அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்
    இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைய
    படக்குழுவினருக்கு எமது வாழ்த்துகள் .

    புதன், 20 ஏப்ரல், 2016

    நெடுந்தீவு அரவிந்தின் மலட்டுக்கணவன்

    By: Unknown On: AM 11:27
  • Share The Gag
  • உருப்பெருக்கமுடியா
    நீட்சியற்ற என்னாண்மையில்
    முயன்று முயன்று தோற்றுப்போகிறேன்
    உனக்கான திருப்திப்படுத்தல்களில்.

    எள்ளளவும் என்னைவிட்டகலா
    உன் முதன்மையான நேசத்தில்
    ஒரு இஞ்சளவேனும் வெறுப்புக்காட்டா உன் முகதாட்சண்யமற்ற
    தலைமுடிய கலையா
    ஒவ்வொரு விடியலிலும்
    கூனிப்போகும் என்னை
    உன்னதமான உன் நெற்றி முத்தமொன்றே நிமிரச்செய்கின்றது.

    இந்த உடல்குடையும் உன் உணர்வுகளை
    தணிக்கை செய்யாதென் இயலாப்பக்கங்களை
    மூன்றாம் பேருக்கும்
    தெரியாதுன் மெய்யன்பின்
    கருவூலங்களின் பொக்கிசமாய்
    கிடைத்த தூய்மையின்
    தெய்வம் நீ.


    ஆக்கம் நெடுந்தீவு அரவிந்

    உங்களிகன் கொண்டாட்டங்களை கொண்டாடிமகிழ வூப்பர் மண்டபம் வாருங்கள்

    By: Unknown On: AM 2:29
  • Share The Gag

  • நற்பணி செய்து வரம் வூப்பர் மண்டபத்தின் நிர்வாகக்குழு சிறப்பாக எம்மவர்கள் கொண்டாட்டத்துக்கு வூப்பர் மண்டபம்
    அமைத்துள்ளதும் அதில்  கலைநிகழ்வுகள், திருமணக்கொண்டாட்டங்கள், பிறந்தநாள் என பல்வகைக்கொண்டாட்டத்துக்கு நற்பணி வெய்துவரும்
    நிங்கள் அறிந்ததே,

    வூப்பர் மண்டபம் குழுவினருக்கு  ஒழுங்காக நிர்வாகத்துடன் நல்ல உபசரிப்புடன் உங்கள் விழாவுக்கு வருபவர்களை தங்கள் கொண்டட்டமென நின்று கவனித்து நற்சேவை செய்யும் இயைஞகளை இணைத்துசிறப்பாக செய்துவருகிறதும் நிங்கள் அறிந்ததே,


    அதில் நீங்களும் இணைந்து உங்கள் கொண்டாட்டத்தை  அங்கு சென்று கொண்டாடி அவர்கள் சிறப்பை கண்றியுங்கள் ,

    உபசரிப்பின் சிறப்பே  விருந்தினரின் மகிழ்வு  அந்த மகிழ்வை வூப்பர் மண்டபம் நிர்வாக குழுவினர் அளிக்கின்றனர்



     வூப்பர்  மண்டபமானது அம்மன் ஆலயத்தினது என்று நீங்கள் அறிந்ததே  இந்த மண்டப்தில் இணைவதால் ஆலய வளச்சிக்கும் தாயக உறவுகளின் நற்பணிக்கும் இதில் வரும் நிதி  பயன்படுத்தப்பட்டுவருகிறது அதில் நீங்களும்  இணைய உங்கள் கொண்டாட்டங்களுடன்  வூப்பர் மண்டபம் வாருங்கள் என அழைக்கின்றார்கள் வூப்பர் மண்டபம் நிர்வாக குழுவினர்

    செவ்வாய், 19 ஏப்ரல், 2016

    வல்வெட்டிதுறையில் (22.04.16)இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இன்னிசை மாமழை

    By: Unknown On: PM 4:33
  • Share The Gag
  • எதிர்வரும்22திகதி இந்திரன்விழாவைமுன்னிட்டுவல்வெட்டிதுறை குச்சம்ஒழுங்கை சைனீஸ் விளையாட்டு கழக ஆதரவில்இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் "வவுனியாராகஸ்வரம்"இசைக்குழுவின் இன்னிசை மாமழையில் நனைந்திட எம் அன்பார்ந்த ரசிக சொந்தங்கள்,எமதுஇசைக்குழுவின்அன்புரசிகர்கள்,ஆதரவாளர்கள்,அன்பர்கள்நண்பர்கள்,எம் கறுப்புசரித்திரங்கள் எனஎமதுஏகோபித்த நல்உள்ளங்கள் அனைவரையும்
    அன்போடு வருக வருக என அழைத்து நிற்கிறோம்..

    ‎ஈழத்துப்பித்தனின்‬ ஒருநாள் யுத்த நிறுத்தமாம்

    By: Unknown On: PM 4:21
  • Share The Gag
  • அருவி ஊற்றென
    அழுது வடித்தவள்
    அடங்கிக் கிடக்கிறாள்

    பொருமி வெடித்திட
    புழுங்கித் தவிக்கிறாள்
    தழுவித் தகித்தவள்
    தயங்கி நிற்கிறாள்


    ஒற்றைநாள்
    ஒருதலைப்பட்ச 
    யுத்த நிறுத்தமாம்
    சத்தம் இன்றி
    சலனம் இன்றி
    இப்போதான்
    சற்று சிரித்துச்
    சிவக்கிறாள்

    சிவக்கிறாள்
    சிரிக்கிறாள் இவளென
    சிந்தை தெளிந்து
    சிரிக்க முடியவில்லை
    ஒருதலைப்பட்ச
    ஒருநாள்
    யுத்த நிறுத்தம் தானாம்

    யுத்தம் எப்பவும்
    சத்தத்தோடு வெடிக்கலாம்
    பாதிப்பு முன்னதை விட
    பலமாயும் இருக்கலாம்
    யுத்த நிறுத்தம்
    காலவரையற்று
    நீடிக்கவும் படலாம்
    எதற்கும் தயாராய்த்தான்
    இருப்பை நிலை நிறுத்த
    எடுத்தடி வைக்கிறேன்...

    ஆக்கம் ஈழத்துப்பித்தன்


    கவிஞர்சுபாரஞ்சனின் மின் மினிப் பூச்சியாய்.

    By: Unknown On: PM 4:01
  • Share The Gag
  • //இருள்மை// கொண்டு
    வரைந்த இரவில்.......

    //ஓளிர்மை//கொண்டு
    துடைக்கும்

    மின் மினிப் பூச்சியாய்........
    வெளிச்சக் கோடுகளை
    வரைகையிலே
    விடிந்து போகிறது.......

    அதிகாலையோ
    அவசரப்பட்டு நகர்கிறது
    வானவில் கனவுகளோடு.......

    கனவுகள் முடிக்கையிலே
    இரவு மீண்டும் 
    வரைகிறது..........


    ஆக்கம் 

    கவி
    ஞை சுபாரஞ்சன்