புதன், 18 மே, 2016

Tagged Under:

மஞ்சு மோகன் எழுதிய அப்பா வருவாரென்ற நினைவுடனே .....?????

By: Unknown On: முற்பகல் 11:46
 • Share The Gag
 • புரையேறிய தமிழர்நாம்,
  புலம்பெயர்ந்தோம் நாமெங்கும்.

  புரட்சி புரட்சி என்று கூவி,
  புலம்பி அலம்பி திரிகிறோமிங்கும்
  கொடிபிடித்து கோஷம் எழுப்பி !
  கோழைகளாய் வாழ்ந்து - இன்று
  பூசைகளும் புனஸ்காரங்களும்,
  புண்ணியமதைச் சேர்ந்திடுமா?  அப்பா வருவாரென்ற நினைவுடனே,
  அங்கே அன்புச் செல்வங்கள்.
  இருக்கிறாரா? இல்லையா? என்ற 
  எதிர்பார்ப்புடனே ஏங்கும் இதயங்கள் ! 
  இருந்தும் இறந்துகொண்டிருக்கும்,
  இளவுள்ளங்கள்தான் ஏராளம்.
  அனாதைகளாக இன்று தவிக்கும்,
  அவலங்கள் நாட்டில் தாராளம்.


  கொன்று குவித்தபோது - அந்த 
  கோரவலி கண்டோமா?
  நின்று தவித்தபோது - வந்து
  நிமிர்ந்து பார்த்தோமா? 
  கண்களிருந்தும் குருடர்களானோம்!
  கனவுகளிலேனும் வலிகள் கொண்டோமா? 
  காதுகள் கேட்டும் செவிடர்களானோம்!
  கதைகளில்தானும் துயரம் கண்டோமா?


  எத்தனை வலிகள்? உயிர்துடிக்க,
  எதனை உணர்ந்தோம் இங்கிருந்து?
  எத்தனை வடுக்கள்? உடல்நெரிய,
  எதனைப் பயனாய்ச் செய்தோம்
  தெரிந்து?
  எத்தனை விடுப்புக்கள் நாம் கேட்டோம் 
  அனைத்தையும் கடந்து வந்தவனை 
  கழித்து தானே விடுகின்றோம்

  நாங்கள் கடந்து பயணிப்போம் 
  மீண்டும் மீண்டும் பல வைகாசிகளை 
  அப்போதும் 
  பகட்டுக்கு ஒரு பூஜை 
  சகட்டுக்கு ஒரு அனுஷ்டிப்பு....


   தேச உனர்வுடன் மஞ்சு மோகன் 

  2 கருத்துகள்:

  1. இது மஞ்சு மோகன் அவர்களது கவிதை... தவறுதலாக சுபாரஞ்சன் அவ்ர்களது பெயரும் தலைப்பும் படமும் இணைக்கப் பட்டிருக்கிறது ... தயவுசெய்து கவனிக்கவும்

   பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   பதிலளிநீக்கு