சனி, 21 மே, 2016

Tagged Under:

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய குடும்பம் ஒரு சங்கீதம்...!

By: Unknown On: முற்பகல் 3:29
 • Share The Gag
 • விதண்டா வாதமும்\
  வீண் பிடி வாதமும்
  நான் என்ற அகங்காரமும்

  ஆண் என்ற ஆணவமும்
  குடும்ப ஆட்சிக்குள்
  நாற்காலி போட்டால்
  நடைப்பிணமாகிவிடும்..!


  சாதகம் பண்ணச்
  சாரீரம் சுத்தமாவது
  போல் சாதகமாய்
  அணுகுவதால் பாதகம்
  நிகழாது அமைதி
  ஆட்சி நடத்தும்.
  விட்டுக் கொடுப்பும்
  புரிந்துணர்வும்
  பரஸ்பரமும் காவாலரண்..!

  சுட்டெரிக்கும் வார்த்தைக்
  கலவை கொத்துக் குண்டுகளை
  விஞ்சிய பேரழிவாகும்.
  வருடிப் பார். வசந்தம்
  இதயத்தின் ஓரம் வீசும்.
  நெருங்கிப் பேசிப்பார்
  கோபமும் நொருங்கிப்போகும்...!

  சந்தோஷம் எனும்
  சாவி கொண்டு
  சந்தேகப் பூட்டினைத்
  திறந்து பார் ..! உன்
  நீண்ட மௌனத்தைக்
  கலைத்துப் பார் 
  மோகனம் கேட்கும்
  சமரசம் சாமரம் வீசும்
  குடும்பம் ஒரு சங்கீதமாகும்..!


   ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக