திங்கள், 23 மே, 2016

Tagged Under:

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கண்ணீருக்கு விலை...!

By: Unknown On: முற்பகல் 1:07
 • Share The Gag
 • உரிமை உண்மை
  நீதி நியாயம்
  விடுதலை சுதந்திரம்
  அமைதி மகிழ்ச்சி
  எனத் தொலைந்தவை
  எங்கள் மண்ணில்
  ஏராளம்... போர்
  எச்சம் தந்த மிச்சம்
  கண்ணீர் ஒன்று தான்.


  உண்ணாமல்
  உறங்காமல்
  உயிரோடு போராடி
  உயிர்ப்பான உறவாக
  பெற்றெடுத்த
  பிள்ளைகளைக்
  கணாமல் வீதிக்கு
  வீதி விம்மித் திரியும்
  அம்மாக்களின்
  கிடக்கைகளை யாரறிவார்.?


  கல்லறைக்கு காவு
  கொடுத்து கதறி
  அழும் கருவறைத்
  தெய்வங்களின்
  நம்பிக்கை நலன்
  கெட்டுப் போனதும்
  புரியாமல் புலம்பல்
  தாயக தேசத்தில்
  கேட்கின்றதே இவர்கள்
  கண்ணீருக்கு விலை.....?


   ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக