வியாழன், 12 மே, 2016

Tagged Under:

கவிக்குயில் சிவரமணியின் நீ......

By: Unknown On: முற்பகல் 6:17
 • Share The Gag
 • புரியாத உறவு 
  தெளியாத மனம் 

  வரமானபோதும்
  பேதமையில் நீ

  குழம்பிய குட்டை
  கலங்கிய மனம் 
  கள்ளமில்லகுணம்
  கண்மணி நீ

  வார்த்தையில் வாள்
  அர்த்ததில் தேள் 
  ஆனாலும் கனியும் மனம் 
  அன்பின் அறிவிலி நீ

  பாசத்தை கூறுபோட்டு 
  நேசத்தை அளவுபோடும்
  நிச்சிலம் இல்லா தினம்
  நிம்மதி இழப்பு நீ

  பழி எங்கோ 
  பாவம் எங்கோ 
  பரிதவிப்பில் ஒருமனமோ 
  பந்தாடுவது நீ

  நீ எப்படியோ 
  நான் இப்படியே 
  எப்பவும் இபபடியே
  இதுதான் நான்
  இயல்பாய் இல்லை நீ

  ஆக்கம்  கவிக்குயில்  சிவரமணியின்  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக