புதன், 28 டிசம்பர், 2016

யேர்மன் ஶ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில் ஶ்ரீபஞ்சமுகஆஞ்சநேயப்பெருமானின் ஜயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது !

By: Unknown On: PM 3:44
  • Share The Gag


  • ஶ்ரீகனகதுர்க்காஅம்பாள்அடியார்களே ! 28-12-2016  அமாவாசைத்திதியும் மூலநட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் ஆஞ்சநேயப் பெருமான் அவதரித்த ஜயந்திதினம் எமது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பஞ்சமுக ஆஞ்சநேயப் பெருமானுக்கு விஷேசபூஜை பஜனை மாலை 4 மணிக்கு  நடைபெறும் அனைவரும் இதில் கலந்து ஆஞ்சநேயப்பெருமானின் திருவருள் பெற்றுள்ளனர்  சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள்.தலமையில் சிறப்பா இன்றய விழா சிறப்பாக நிறைவேறியது 













    வியாழன், 15 டிசம்பர், 2016

    வேல் முருகன் ஆலயத்தில்16.12.16 வெள்ளி அபிசேகம்

    By: Unknown On: AM 5:23
  • Share The Gag
  • 16/12/2016 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 19.00 மணிக்கு முருகபெருமனுக்கு அபிசேகம் இடம்பெற்று கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்று 20.00 மணிக்கு விசேட பூசை இடம்பெற்று அன்னதானத்தொடு நிறைவடையும்
    .
    நாளைய திருவிழாவினை மகாலிங்கம் குடும்பம் (Hillerød ) உபயமேடுத்து சிறப்பிக்கிறார்கள்

    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    செவ்வாய், 13 டிசம்பர், 2016

    சுவெற்றாநகர் கனகதுர்க்கா ஆலயத்தில் விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது.

    By: Unknown On: PM 1:26
  • Share The Gag
  • சுவெற்ரா கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் இன்று 13.12.2016
    புகைப்படங்கள். தம்பி புவனேந்திரன்
    யேர்மனி சுவெற்ராநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் 12.12.16 இன்று விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது. சிறப்புற்ற பக்தர்கள் வருகையோடு நடந்தேறியுள்ளது

    இதில் பிரதான ஆலயக்குருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க

    அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாக சிறப்புறறதைப்பார்போம்


    எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமானபுவனேந்திரன்.தம்பிநாதரும் அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது

    வியாழன், 8 டிசம்பர், 2016

    உன்னோடும் காதல் ...!கவிதை பொத்துவில் அஜ்மல்கான்

    By: Unknown On: AM 9:12
  • Share The Gag
  • நிலையான காதல்
    கொண்டு,
    உயிரான உன்னை
    அனைத்து,
    என்னுயிரில் உன்னை
    வரைந்து,
    கனவுகளை களவு
    செய்து,
    உயிரை நமக்கன
    மாற்றினாய்,
    தனிமைகளை இனிமை
    ஆக்கினாய்,
    உணர்வில்லாத உடல்
    உன்னோடும் காதல்
    கொண்டதால்.... 


    ஆக்கம் பொத்துவில் அஜ்மல்கான்

    ஒரு தலைக் காதல்...! கவிதை ஏரூர் எழுதிய விவசாயம்

    By: Unknown On: AM 9:05
  • Share The Gag
  • ஏதோவொன்று
    சொல்லத் தோணுது
    உன் மோகம் - என்னை
    கொல்லத் தூண்டுது

    பாவம் பார்த்து
    காதல் வருமா..
    பாவை நெஞ்சை
    காதல் சுடுமா..

    கனவு காண்பது
    கண்களில் அல்ல
    காதல் என்பது
    புதுக்கவிதையல்ல

    உயிரை விடவும் தோன்றும்
    காதல் உயர்வானது
    உறவு கொள்ள தூண்டும்
    காதல் மிருகமானது

    ஒரு கை ஓசை தருவதில்லை
    இரு உணர்வுகள்
    ஒன்று பட்டால் காதல் சாவதில்லை

    எழுதி உணர்த்த
    நான் கவிஞனல்ல
    கவித்தென்றல் நானோ
    காதலிக்கவில்லை

    செவ்வாய், 6 டிசம்பர், 2016

    சங்கீதா முன்பள்ளியில் ஒளிவிழா05.12.16 நிழல் படங்களைப்பார்க்க...

    By: Unknown On: AM 9:43
  • Share The Gag
  • 05.12.2016 உண்ணாப்பிளவு சங்கீதா முன்பள்ளியில் ஒளிவிழா நிகழ்வும் பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாகஇடம்பெற்றது இந்த நிகழ்வு கலைஞர் கு.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றிருந்தது. முதல் நிகழ்வாக விருந்தினர் வரவேற்பு இடம்பெற்றது அதனை தொடர்ந்து அருட் தந்தை அமலதாஸ்
    ஆசியுரையினை வழங்கியிருந்தார் அதன்பின் வரவேற்பு உரையினை ஆசிரியர் செல்வி மேரி கீர்த்தனா வழங்கினார்
    தொடர்ந்து மாணவச் செல்வங்களின் கலை நிகழ்வு இடம்பெற்றது அதன் பின் சிறப்பு விருந்தினர் உரை
    கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழங்கினார் தலைமை ஆசிரியர்
    உரை தனராசா சத்திய லதா வழங்கினார் அதனை தொடர்ந்து நத்தார் பாப்பா வருகை தந்து மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் இனிப்பு பண்டம் வழங்கி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது ..

























    செவ்வாய், 8 நவம்பர், 2016

    "ஆன்மீகத்தென்றல்"சமூகஜோதி" தம்பிநாதர் புவனேந்திரன் பிறந்தநாள்வாழ்த்து 01.11.16

    By: Unknown On: AM 11:56
  • Share The Gag

  • "ஆன்மீகத்தென்றல்" "சமூகஜோதி" தம்பிநாதர் புவனேந்திரன்அவர்களின் பிறந்தநாளகிய இன்று
    இன்றுஆகும் இவரை சுவெற்றா கனகதுர்க்கா அம்பாள் ஆலயக்குருக்கள் ஐயா ஐெயந்திநாத சர்மா தம்பதிகள்்
    சீரும் சிறப்புடனும்வாழ
    அம்பாளின் திருவரளுடன் தமது நல் வாழ்த்துக்களும் ஆசிகளும் வாழ்க பல்லாண்டு
    வாழ்க வாழ்க வளமுடன் ! எனவாழ்தியுள்ளார்கள்

    வியாழன், 3 நவம்பர், 2016

    டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி நான்காம் நாள் விரதம் இன்று

    By: Unknown On: AM 7:51
  • Share The Gag
  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்
    கந்தசஸ்டி நான்காம் நாள் விரதம் இன்று வியாழக்கிழமை
    முருகபெருமனுக்கு விஷேட அபிசேகங்கள் இடம்பெற்று ஆறுமுகபெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருட்காட்சி தருவார்
    ஈசான சிவாச்சாரியார் கிரிதரக் குருக்கள் ( ஜெர்மனி ) தலமையில் ஆலயக் குருக்கள் சிவகாம பூசனம் சுபாஸ் சந்திரக்குருக்கள் .வினோத் சர்மா ஆகியோர் இணைந்து சிறப்பான பூசைகள் தொடந்து ஆறு நாட்களும் 
    மாலை 5,30 மணியில் இருந்து விஷேட பூசைகள் இடம்பெறும்
    இன்றையதினம் நாக ஜோதி குடும்பம் ( Helsingborg சுவீடன் ). கேதீஸ்வரன் Kokkedal , ஆகிய அடியார்கள் உபயமேடுத்து சிறப்பிக்கிறார்கள்
    ( ஏனைய நகரங்களை சேர்ந்த அடியார்களும் நீங்களும் தெப்பை போட்டு சங்கற்பிக்க விரும்பினால் இணைந்து சிறப்பிக்கலாம் )
    சரியாக இரவு ஒம்பது மணிக்கு திருவிழா அன்னதானத்துடன் நிறைவடையும்.
    நாளைய தினம் வெள்ளிகிழமை சூரன் தலை காட்டுதல்
    நாளை மறுதினம் பிற்பகல் 16,00 சூரன் போர் திருவிழா 
    ஆரம்பம்
    ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16,00 திருக்கல்யாணம் வைபவம் ஆரம்பம்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814


    செவ்வாய், 1 நவம்பர், 2016

    டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் ஆரம்பம்

    By: Unknown On: AM 2:36
  • Share The Gag
  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 31/10/2016 திங்கக்கிழமை கந்தசஸ்டி விரதம் ஆரம்பம் முருகபெருமனுக்கு விஷேட அபிசேகங்கள் இடம்பெற்று ஆறுமுகபெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருட் காட்சி தந்தார் ஈசான சிவாச்சாரியார் கிரிதரக் குருக்கள் ( ஜெர்மனி ) தலமையில் ஆலயக் குருக்கள் சிவகாம பூசனம் சுபாஸ் சந்திரக்குருக்கள் .வினோத் சர்மா ஆகியோர் இணைந்து சிறப்பான பூசைகள் தொடந்து ஆறு நாட்களும் மாலை 5,30 மணியில் இருந்து விஷேட பூசைகள் இடம்பெறும் நேற்றையதினம் கொல்பெக் அடியார்கள் உபயமேடுத்து சிறப்பித்தார்கள் இன்றையதினம் nykøbing –sj . sivinninge,Gislinge, Hagested. ஆகிய நகரங்களை சேர்ந்த அடியார்கள் இணைந்து சிறப்பிக்கிறார்கள் சரியாக இரவு ஒம்பது மணிக்கு திருவிழா அன்னதானத்துடன் நிறைவடையும். இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர் தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    ஞாயிறு, 30 அக்டோபர், 2016

    டென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்

    By: Unknown On: AM 7:14
  • Share The Gag
  • 30.10.16 ஞாயிறுகிழமை மாலை 17.00 மணிக்கு கௌரி விரதம்
    இன்று திருவிளக்கு பூசையும் இடம்பெறும் என்பதினை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்
    குத்துவிளக்கு பூசையில் கலந்து கொள்கின்ற அடியகள்
    அதற்குரிய விளக்குகள் பூக்கள் தட்டங்கள் எடுத்து வரவும்

    விசேஷ பூசையுடன் ஆரம்பமாகி கௌரிக்காப்பு கட்டும் வைபவம் இடம்பெற்று நிறைவுபெறும்
    அடியார்கள் அனைவரும் ஆலயம் வந்து இறையருள் பெற்று நலம்பெற வேண்டுகிறோம்
    இன்றயதினம் திரு. திருமதி நவரத்தினம் குடும்பத்தவர்கள் உபய காரர்களாக சிறப்பிக்கின்றார்கள்
    அத்துடன் வியாபார ஸ்தாபனம் வருகைதர இருக்கிறது

    புதன், 26 அக்டோபர், 2016

    டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் மாலை 19,00 மணிக்கு அபிசேகம்

    By: Unknown On: AM 7:09
  • Share The Gag
  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்எதிர் வரும் வெள்ளிக்கிழமை
    28/10/16 மாலை 19,00 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிசேகம் இடம்பெற்று
    கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்று 21.00 மணிக்கு நிறைவடையும்
    அன்றைய தினம் திரு திருமதி குணசிங்கம் யோகேஸ்வரி குடும்பத்தினர் (Dianalund) திரு திருமதி சுரேந்திரன் அனித்தா குடும்பத்தினர் (லண்டன் ) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    வெள்ளி, 14 அக்டோபர், 2016

    சனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !

    By: Unknown On: AM 4:22
  • Share The Gag
  • 15/10/2016 சனிக்கிழமை
    புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !
    காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
    அன்றைய விழாவை திரு திருமதி சிவகுருநாதன் குடும்பம் ,( SLAGELSE ) திரு திருமதி விஜியேந்திரன் குடும்பம் (GISLINGE) திருதிருமதிகருணாகரன் குடும்பம் ,( ballerup )திருதிருமதி மகேந்திரம் குடும்பம் (Ballerup) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
    அன்றையதினம் எள்ளெண்ணை எரிக்கின்ற அடியார்கள் எரித்துக் கொள்ளல்லாம்.
    .இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    செவ்வாய், 11 அக்டோபர், 2016

    யேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை மானம்பூ (11.10.16)நிழல்படங்கள்

    By: Unknown On: PM 2:50
  • Share The Gag
  • ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் சுவேற்றர ஜெர்மனில் மானம்பூ மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஆலயகுரு .சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக் குருக்கள் பிரம்மசிறி சங்கர்ஷண் சர்மா பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களின் அன்புக்கும் பண்புக்கும்
    அன்னை யின் புகழ் உரைக்க வார்த்தை ஏது
    கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம் பெற்றன.
    இன்று அன்னை நிகழ்வதை பதியும் பாக்கியம்
    பெற்றோ ம். வாழ்க ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் புகழ்











    தெய்வபக்தர் தம்பிநாதரும்
                                                     எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமான
    புவனேந்திரன். அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது