புதன், 11 மே, 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய மலையாள பொன்மயிலே

By: Unknown On: AM 7:58
  • Share The Gag

  • மலையாள பொன்மயிலே
    மச்சானை மயக்காதே பார்வையிலே
    சிரிச்சாலே சிதையுதடி என் வயசு
    சிவப்பாக மாறுதடி என் மனசு

    வெண்மை திரட்டி பிரம்மன் படைத்தானோ - உந்தன்
    வேர்வைத்துளிக்கும் வெளிச்சம் கொடுத்தானோ
    வீம்பு பண்ண உன்னை படைத்தானோ - அந்த
    பிரம்மன் உந்தன் மச்சானோ

    விலங்கிட்டு பார்வையிலே
    விறகிட்டு என்னை எரிப்பவளே
    விண் விட்டும் தாவுகிறேன்
    விடையொன்று தா என்னவளே 

    உசிர உருக்கும் வித்தைக்காரி
    உறையும் ரத்தம் கூட பித்துத் தான்டி
    உடல் முழுக்க முத்துத் தான்டி 
    உனை மணக்க சுத்து வேன்டி....


    ஆக்கம்கவித்தென்றல் a

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக