ஞாயிறு, 15 மே, 2016

Tagged Under:

முல்லைத்தீவில் 'சொற்கணை' 14.5.2016. வெற்றி பெற்றது வித்தியானந்தா.

By: Unknown On: PM 5:20
  • Share The Gag

  • முல்லைத்தீவில் 'சொற்கணை' 14.5.2016.
    வெற்றி பெற்றது வித்தியானந்தா.

    - வே.முல்லைத்தீபன்

    **************************************************

    மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினரால் 'சொற்கணை' எனும் விவாதப் போட்டி ஒன்று.. 
    மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில், முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்றுள்ளது. 

    வெற்றி பெற்ற அணிக்கு..
    எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் பா.விஜய், கவிஞர் தாமரை, ஆகியோரது வாழ்த்துக் கையெழுத்துடனான அவர்களது புத்தகங்களே வழங்கப்பட்டன. தொடர்ந்து 25 மாவட்டங்களிலும் வெற்றி பெறும் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

    அகில இலங்கை சொற்கணை ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன் கௌதமனின் தலைமையில்.. முல்லை மாவட்ட சொற்கணை ஒழுங்கமைப்பாளர் சசிவர்மன் மற்றும் மொ.ப.க.கழக மாணவர்களினால் இப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

    பிரதம விருந்தினராக முல்லை வலய கல்விப் பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் கலந்திருந்ததோடு.. அதிபர்களான செல்வநாயகம், இரவீந்திரன், ஏகாம்பரம் ஆகியோருடன் பல பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    மொ.ப.க.கழக 40 வருட தமிழ் இலக்கிய செயற்பாடுகளுடன்.. அதன் அண்மைக்கால நிகழ்வுகள் வீடியோ மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.

    வருடம் ஒன்றில்.. 
    * சொற்கணை விவாதப் போட்டி 
    * ஒளிச்சுவடி ஒளிப்படப் போட்டி 
    * இலக்கிய கலை விழா 
    என்பவற்றை இவர்கள் நடாத்தி வருகின்றனர். இம்முறை அகில இலங்கை ரீதியாக இப் போட்டிகளை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.

    சொற்கணை 2016 விவாதப் போட்டியில்..
    * 1ம் இடம் 
    மு/வித்தியானந்தா கல்லூரி 
    * 2ம் இடம் 
    மு/ முல்லைத்தீவு ம.வி
    * 3ம் இடம் 
    மு/ புதுக்குடியிருப்பு ம.க

    ஆகிய அணிகள் மேற்படி சொற்கணை விவாதப் போட்டியில் (14.15.2016) வெற்றி பெற்றிருக்கின்றன. 

    இறுதிப் போட்டி தவிர சகல சுற்றுக்களும் காலையிலிருந்து மாலை வரை 4,5 அமர்வுகளாக மூடிய அரங்கில் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது. 

    மிகத் துடிப்புடன் செயற்பட்ட இளவல்கள்.. முடிவுகளை திரைச்சீலை மூலம் உடனுக்குடன் அறிவித்தபடி போட்டிகளை வேகமாக நடாத்தியிருந்தனர்.

    மாணவர்களுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டதுடன்.. கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நடுவர்களுக்கான நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    தொடர்ச்சியாக இப்பேற்பட்ட அமைப்புக்களால், எமது மாவட்டத்தின் மாணவர்களிடையே கலை இலக்கியத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகள் நடைபெறுமானால்.. தேவையற்ற சிந்தனைகளிலிருந்து அவர்கள் விலகி இருக்கும் சூழல் தானாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக