ஞாயிறு, 8 மே, 2016

Tagged Under:

கவிஞை ரதிமோகனின் பனிவிழும் மலர் வனம்...அத்தியாயம்-9

By: Unknown On: பிற்பகல் 4:46
 • Share The Gag • மெல்ல மெல்ல நடந்து கதவருகே சென்றாள் மதுமதி. திறப்பின் துவாரத்தின் வழியே உற்று நோக்கினாள். அங்கே சங்கரின் நண்பர்கள் இருவர் சங்கரை கைத்தாங்கலாக தூக்கியபடி நின்றனர். ஒருகணம் மதுமதியின் இதயம் நின்றது போல் இருந்தது. மின்னல் வேகத்தில் ஓடிப்போய் கதவைத் திறந்தவள்
  " சங்கருக்கு என்னாச்சு நல்லாத்தானே இருந்தான் ஏதாவது அக்சிடென்ட்.. என இழுத்தவளை இடைமறித்த சங்கரின் நண்பன் சதீஷ் "" இல்லை மது என்ரை வீட்டிலைதான் சும்மா கதைச்சு கொண்டுருந்தம்... சங்கர் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டான்..எல்லா ரிங்சும் எடுத்துட்டான் .. நான் வேணாம் என்றேன் Carlsberg , vodka என தொடங்கி snaps வரை ஒன்றும் விடவில்லை...கடைசியா இப்படி மயங்கிற்றான்..அங்கை வீட்டை போனால் அம்மா கத்தி குளறுவா என்றுதான்... ஏன் சங்கீதா ரெலிபோன் பார்க்கலையோ... " என.. அப்போதுதான் தொலைபேசியை பார்த்தாள் பல தடவை அழைப்பு வந்து இருந்தது. அவள் தொலைபேசியின் சத்தத்தை நிறுத்தி இருந்ததையும் அப்போதுதான் அவதானித்து தன்னைத்தானே கடிந்து கொண்டாள் .

  நண்பர்கள் சங்கரை கட்டிலில் கொண்டுவந்து படுக்கவைத்தார்கள்.அவன் எந்தவித சலனமும் இன்றி கண்களை மூடி இருந்தான்..பார்க்க கோபம் ஒருபுறம். மறுபுறம் ஐயோ பாவமே என்ற பரிதாபம் அவன்மேல் அவளுக்கு இருந்தது.. எவ்வளவு கோபம் அல்லது வெறுப்பு இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது உதவும் மனப்பான்மை தானகவே வந்து விடுவது இயல்பே.. அது அவளிடமும் இருந்தது. அவனை அங்கே விட்டு விட்டு நண்பர்கள் சென்றபோது அதிகாலை 3.30 மணியை நேரம் தாண்டி இருந்தது.. சோபாவில் படுத்தபடி கண்களை மூடியபடி இருந்தபோதும் தூங்க எப்படி அவளால் முடியும். சங்கர் முனகியபடி இருந்தான் .. அதுவும் ஓர் ஆடவனுடன் தனியாக ஓர் அறையில் நினைக்கவே அவள் நெஞ்சம் பதறியது. சொந்தமோ பந்தமோ யாராக இருந்தாலும் பார்த்தவர்கள் என்ன நினைப்பார்கள் உள்ளூர பயம் அவளைக் கவ்விக்கொண்டது. இந்த ஐரோப்பிய சூழலை பொறுத்தவரை அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்காத தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் இந்த சமுதாயம். "ஐயோ கடவுளே ..இது எங்கள் நாடாக இருந்தால் கதை கட்டி விடுவார்கள்.. " மனதிற்குள் எண்ணி சிரித்துக்கொண்டாள்.காலைப்பொழுதும் வழமைபோல் புலர்ந்தது. வசந்தகால பறவைகளின் பாடும் ஓசையில் மனம் இறக்கை கட்டி பறக்க அவள் நீராடிமுடித்தபோது நேரம் காலை 6.39 ஐ காட்டியது. இளஞ்சூரியன் இதமாக வருகை சாளரத்தின் வழியே மஞ்சள்மேனியை மெல்ல வருடிப்போனது. அழகான நாரியுடன் வெட்டப்பட்ட கூந்தலை துவாயினால் துவட்டியபடி கைத்தொலைபேசியில் சங்கீதாவை வரும்படி அழைத்துவிட்டு.
  " சங்கர் சங்கர் ...விடிந்திட்டுது..எழும்புஅம்மா தேடுவா..." கண்களை கசக்கியபடி எழுந்தவன் திகைத்தான். " ஓ மை காட் எப்படி நான் இங்கை... எப்படி சொல்லுடி மது?"
  " கலோ கலோ இந்த டி போடுற வேலை வைச்சுக்காதை.. ஐயாவை கடத்தி வைச்சிருக்கேன் ... பெரிய வெள்ளைக்காரன் நினைப்பு மட்டும் மனசிலை... அடச்சீ.. ஆசை தங்கச்சி வந்து விபரம். சொல்லுவா... முகத்தை கழுவிவிட்டு இந்த காப்பியை குடி..." நையாண்டியாக அவனை பார்த்தபடி சோபா இல் காப்பி குவளையுடன்அமர்ந்தாள்..
  சங்கர் மௌனமாய் குளியலறைக்குள் நுழையவும் சங்கீதா வரவும் சரியாக இருந்தது. மதுமதியை கட்டித்தழுவியவள்"" மது நீ செய்த உதவியை என்னாலை மறக்க முடியாது... அம்மா அவனை இந்தக் கோலத்தில் பார்த்திருந்தால் பிரசர் கூடி கார்ட் நின்றிருக்கும்... அவா பாவம்.. தன்ரை பிள்ளை சுத்தத்தங்கம் என நினைச்சிட்டு இருக்காங்க மது..."" என பேசிக்கொண்டு போனவளை இடைமறித்த மதுமதி.. " சரி போகட்டும் விடு உன் அண்ணனுக்கு புத்தமதி சொல்லி திருத்தப்பார் என்றாள்.
  இவற்றை எல்லாம் கேட்டபடி நின்றிருந்த சங்கரின் முகத்தில் அசடு வழிந்தது. " சீ சீ போயும் போயும் இவளுக்கு முன் தலைகுனிந்து நிற்கிறேனே" என நினைத்துக்கொண்டான்.

  சங்கரை நோக்கி சங்கீதா கொட்டிய வார்த்தைகள் கேட்க முடியவில்லை... நாளை சமுதாயத்தில் ஒரு டாக்டராக வர போகிற சங்கர் அடிக்கடி இப்படி குடிபோதையில் மூழ்குவதை பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை. மதிமதிக்கு சங்கரை பிடிக்கவில்லை என்ற போதிலும் உறவு முறைக்கும் தன்னை ஆதரித்துவரும் மாமா குடும்பத்தின் மேல் நன்றிக்கடனும் பாசமும் எப்பொழுதும் அவளுக்கு உண்டு.
  சங்கர் முதன்முறையாக மதுமதி மேல் பாசமான அன்பான பார்வையை வீசியபடி அருகில் வந்தவன் " மது நான் உன்னை ஒருபொழுதும் வெறுக்கவில்லை... நீ தான் என்னை பொல்லாதவனாக பார்க்கிறாய்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இனி நான் குடிக்க மாட்டன் நம்பு" என்றவனை நோக்கி மதுமதி கொல் என சிரித்தாள். அவளுடன் சேர்ந்து சங்கீதாவும் சிரிக்க சங்கருக்கு கோபத்தோடு வெட்கமும் சூழ சட்டென வெளியே போனவனை பார்த்து" அட பார்ரா என் அத்தை பெத்த தங்கமே ... இப்படி எல்லாம் எங்கு பேச கற்றாய்...நல்லது சென்று வா" என இருகரம் கூப்பி அவள் வழியனுப்ப அண்ணனும், தங்கையும் விடைபெற்றனர்  ஆக்கம்கவிஞை 
  ரதிமோகன்


  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக