வெள்ளி, 27 மே, 2016

Tagged Under:

கவிஞை சுபாரஞ்சன் எழுதிய நேரமில்லை

By: Unknown On: முற்பகல் 3:18
 • Share The Gag
 • சோம்பல் தவிர்த்து
  சுகமாக வாழ்ந்தாலும்
  சுகம் விசாரிக்க
  நேரமில்லை........

  நாழிகை நிறைத்து
  நம் கவலைகள்
  தொலைத்து
  நகைத்துச் சிரிப்பதற்கும்
  நேரமில்லை.........

  நன்றாகப் பேசி
  நாவில் ஏதும் ஒட்டாமல் 
  நாடகம் போல் நடித்தாலும்
  அக்கம் பக்கம் உள்ள
  அயலவரை அறிய
  நேரமில்லை .....

  வேலியோரப் பொட்டுக்குள்
  வேடிக்கையாய்ப் பேசி
  வாடிக்கையாய் சிரித்து
  பாதி சோகத்தைப் பகிர்வதற்கு
  பக்கத்தில் யாரும் இல்லை
  நாதியற்ற வாழ்வு போல்
  தேதி அற்றுத் தொலைய
  நமக்கோ நேரமில்லை .....

  ஆக்கம் கவிஞை
  சுபாரஞ்சன் 

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக