ஞாயிறு, 8 மே, 2016

Tagged Under:

இரத்தினம் கவிமகன்.எழுதிய அம்மா...

By: Unknown On: முற்பகல் 5:17
 • Share The Gag

 • அம்மா... 

  உனக்காக எதையும்
  எழுத முடியவில்லை
  மன்னித்துக்கொள் அம்மா
  எண்ணிய வரிகள் 
  விரல்களில் வர மறுக்கிறது...
  நீ ஆவலோடு பாத்திருப்பாய் 
  நான் அறிவேன்... 
  உன் பாதம் பணிய 
  காத்திருந்த நாட்கள் பல
  உன் கை கோர்த்து 
  நடைபயின்ற பொழுதுகள் பல 
  உன் உருவம் என் நிழல் அம்மா 
  உன் நிழல் பற்றியே நான் 
  நகர்வேன்...
  இன்று உன் நாமம் உரைக்க 
  கூட மனசின் வலி விடுகுதில்லை... 
  உதிரும் வார்த்தைகள்
  உன்னை வதைத்திடுமோ? 
  அதிரும் மனசு உன்னை 
  சிதைத்திடுமோ? 
  தெரியவில்லை அன்பே...
  நான் உன் மேல் இன்று 
  அன்பு பொழியவில்லை... 
  அரவணைத்து மகிழவில்லை 
  அன்பாக ஒரு வாழ்த்து 
  எழுதவில்லை. 
  என் கனவு தகர்ந்து 
  கடலில் கரைந்து விட்டதம்மா
  நீ புரிந்து கொள்வாய் 
  என் மனதை...
  குடியிருக்கும் மனதின் உயிரை 
  நீ அறிவாய்... 
  இன்று அதன் இல்லாமை பற்றி 
  நீ அறியாய்.
  அம்மா... நீ வாழ வேண்டும் 
  என் அருகில் உன் இருப்பு வேணும் 
  என்றென்றும் உன் 
  இதய துடிப்பு எனக்கு வேணும்...
  வாழ்த்துகிறேன் நெஞ்சே...   ஆக்கம் இரத்தினம்
  கவிமகன்.

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக