சனி, 7 மே, 2016

Tagged Under:

தனுசின் என்னை பெற்ற அன்னையே !

By: Unknown On: முற்பகல் 11:21
 • Share The Gag
 • மன அறையில் ஓர் கனவு 
  கருவறையில் ஓர் கருவு 
  ஆணா ? பெண்ணா? தெரியாது 
  எதுவானலும் அது உனக்கானது 
  என ஏற்றுகொள்ள துணிந்தாய் ! 
  பத்து மாதத்தில் கரு 
  முழு உருவானது 
  உன்னுடல் விட்டு பிரிவானது ! 
  முதல் பிரிவே அழுகையோடு ! 
  நீயும் அழுதாய் நானும் அழுதேன் ! 
  நீ மட்டும் இருமுறை அழுதாய் 
  ஒரு முறை ஆனந்த கண்ணீர்! 
  மருமுறை பிள்ளை அழுகிறதே யென 
  வருந்தி வடித்த கண்ணீர் ! 
  என் அழுகையின் காரணம் 
  மீண்டும் போக முடியாத 
  சொர்கத்தை பிரிந்தோமே யென! 
  சேர்த்து வைத்த பெயர்களில் ஒன்றை 
  எனக்காக செலவு செய்தாய் ! 
  மூலதனம் இல்லாமல் நீ செய்த 
  முதல் செலவு ; அது 
  இன்றுவரை தொடர்கிறது -என் 
  அடையாளத்தின் மூலதனமாய் !

  என்னை பெற்ற அன்னையே !
  இன்றைய தினத்தில் உன்னைப் போன்ற அனைத்து அன்னையர்களுக்கும் என் பணிவான "அன்னையர் தின நல் வாழ்த்து" தெரிவித்துக் கொள்கிறேன் ! ! ! 
  உன்னை மட்டுமே என் கடவுளாய் 
  என்றென்றும் வணங்குகிறேன் !!!!!!


  ஆக்கம் இற்றாலியில் இருந்து
  தனு

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக