வியாழன், 18 பிப்ரவரி, 2016

Tagged Under:

வேதா. இலங்காதிலகதின் தன்னம்பிக்கை

By: Unknown On: முற்பகல் 7:48
 • Share The Gag

 • தன் உறுதிப்பாடு, தன் விசுவாசம், தன் நம்பிக்கை தோல்வி தோற்பதாம். தன் சிறகுகளை நம்பிப் பறக்கும் தன்னம்பிக்கைக்குக் குருவிகள் ஓர் எடுத்துக்காட்டு. அறிவெனும் ஆயுதம் நன்கு தீட்டு. குறியாக ஆகும் உன் காலெட்டு. கதிரவன் கடமையைக் கருத்தாக எண்ணு. கதியற்றவன் என்று யாருமில்லைக் கண்ணு.
  தன்னம்பிக்கை யானையின் தும்பிக்கைக்குச் சமம். இன்னொரு கையாகி எண்ணம் பல கைகளாகும். குதித்தோடிக் காடுகள், தடைகள் தாண்டும் நதியும் கருமத்தின் சிரத்தை பாடும். சோர்வை அகற்று! இலட்சியம் பெருக்கு! பார்வையைச் சிகரத்திற்கு உயர்த்து! சாதனையாக்கு! நெம்புகோலின் தரம் நம்பிக்கை வாழ்விற்கு. சம்பிரதானம் (கொடை) வாழ்வை செயித்தேகலாம் வெற்றிபுரத்திற்கு.
  அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம் நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும். அகங்காரம், வெறுப்பு, அலட்சியம், கோபம் சங்காரம் செய்யும் நம்பிக்கை ஆணிவேரை. இலையுதிர்க்கும் மரங்களின் பெரும் காத்திருப்பு இலை துளிர்த்தலுக்காய் அழகிய பூத்திருப்பு கலைமிகு எடுத்துக்காட்டு ஆறறிவு மனிதனுக்கு. விலையாம் தன்னம்பிக்கை வளருங்கள் உயர்வுக்கு.
  பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க்

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக