சனி, 24 செப்டம்பர், 2016

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் புரட்டாதிச்சனி விசேட பூசைகள்

By: Unknown On: AM 5:32
  • Share The Gag

  • இன்று 24/09/2016 சனிக்கிழமை புரட்டாதிச்சனி விரதத்தை முன்னிட்டு
    காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
    அன்றைய பூசையை திரு திருமதி Suhirthan Thiruchelvam ( suki ) குடும்பம் ( malmø சுவீடன் ) உபயமேடுத்து சிறபிக்கின்றனர்
    நீங்களும் புரட்டாதிச்சனி விரத பூசைகள் உபயமேடுத்து செய்ய விரும்பினால்
    எம்மோடு தொடர்பு கொள்ளவும்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
    நேற்றையதினம் ஆலயத்தில் பண்ணிசைப் போட்டிகள் வேல் முருகன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றன
    கீழ் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
    இரண்டாம் இடம் / ஸ்ருதிகா சுரேஷ்குமார்
    மூன்றாம் இடம் / செல்வி அபர்ணா தமிழ்ச்செல்வன்
    மேற் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன்
    இரண்டாம் இடம் / ஸ்வேதா சிறிதரன்
    மூன்றாம் இடம் / செல்வி ஜோதிசா ஜேயராசா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டார்கள்
    முதல் பரிசு பெறுகின்ற இருவரும்
    கீழ் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
    மேற் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன் ஆகியோர்
    வருகின்ற 01/10/2016 சனிக்கிழமை இடம் பெறும் வேல்முருகன் ஆலய கலைவிழாவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொள்வார்கள்
    போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பெருகின்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படும்
    போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வேல்முருகன் ஆலய சான்றிதழ் வழங்கி மேடையில் கெளரவிக்கப் பட இருக்கிறார்கள்








    சனி, 17 செப்டம்பர், 2016

    யேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் புரட்டாதி முதல் சனி பூஜை நடைபெற்றது.

    By: Unknown On: PM 4:38
  • Share The Gag
  • யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில்  இன்று புரட்டாதி முதல் சனி எள் தீபம் ஏற்றும் பூஜை நடைபெற்றது. ஆலயம் காலை தொடங்கி மாலை 7.00 மணிவரை அம்பாள் அடியவர்களுக்காக திறந்திருந்தது.
     ஆலயதரிசனம் செய்திருக்க முடியாதவர்கள் இந்த நிழல் படதரிசணம் நிறைவுதரும் என்ற வகையில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் அடியவர்களுக்காக இங்கே நிழல்படப்பிடிப்பாளர்






    தெய்வபக்தர் தம்பிநாதரும்
    எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமான
    புவனேந்திரன். அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது 

    மாபெரும் கலை இலக்கிய விழாவாய் அரங்கேறிய ‘தமிழ் மாருதம் 2016’

    By: Unknown On: AM 6:26
  • Share The Gag
  •  
    கலை இலக்கிய ஆர்வம் மிக்க இளைஞர்களின் ஒன்றிணைவில் மூன்று வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மாமன்றம், வன்னிப் பிரதேசத்தினுடைய கலை இலக்கிய வளர்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான விவாதப் பயிலரங்கு, கவிதைப் பயிலரங்கு, சித்திரப் பயிலரங்கு, நாடகப் பயிலரங்கு மற்றும் நூல் வெளியீடு, நூல் அறிமுகம், குறம்பட வெளியீடு, வாசிப்பும் அனுபவப்பகிர்வும், விளை நிலம் என்கின்ற மாதந்த நிகழ்ச்சி என தொடர்ச்சியான செய்ற்றிட்டங்களுடன், இயல் விழா 2014, தமிழ் மாருதம் 2015 போன்ற பெரு நிகழ்வுகளையும் கடந்த வருடங்களின் நாடத்தியிருந்த நிலையில், இவ் வருடத்திற்கான பெரு நிகழ்வாக ‘தமிழ் மாருதம் 2016’ மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந் நிகழ்வு இரண்டு நாட்கள் காலை மாலை என மூன்று அமர்வுகளாக வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் செப்டம்பர் 03 மற்றும் 04 ம் திகதிகளில் இந் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

    செப்டம்பர் 03 ம் திகதி மாலை 4 மணிக்கு, வவுனியா பொதுசன நூலக சரஸ்வதி சிலையிருந்து ஆரம்பமாகிய ஊர்வலத்துடன், வன்னியின் மிகப் பெரிய கலை நிகழ்வானதிழ் மாருதம் 2016 ஆரம்பமாகியது.

    மங்கல விளக்கேற்றல், தமிழ் வாழ்த்தை தொடர்ந்து, தலைமையுரையை தமிழ் மாமன்றத்தினுடைய தலைவர் வைத்தியர். சி. கிருபானந்தகுமாரன் அவர்கள் வழங்கினார். தொடக்கவுரையினை நகரசபைச் செயலாளர் த. தர்மேந்திரா அவர்கள் வழங்கினார். தொடர்ச்து முதலாவது கலை நிகழ்வாக நயினை ப.சிவமைந்தன் குழுவினர் வழங்கிய இசை அரங்கு அசை ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைந்தது.. அதனைத் தொடர்ந்து தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி, செல்வி. அ. கவிநயா அவர்களின் இசையும் அசைவும் நிகழ்வு இடம் பெற்றது.

    தொடர்ந்து பிராதான நிகழ்வாக, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களை நீதியரசராகக் கொண்ட வழக்காடு மன்றம் இடம் பெற்றது. கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன், இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரன், தமிழ் மாமன்ற உறுப்பினர்களான சி.துஷாரன், கி.நிக்ஷலன் வழக்காடு மன்றத்தில் வாதிட்டனர். ‘குற்றவாளிக் கூண்டில் குருநாதர்கள்’ என்ற வழக்கை இரு சாரரும் திறம்பட விவாதித்ததோடு, சம கால ஆசிரியர்களின் குறைபாடுகளையும் முன்னிறுத்தி வழக்கை கொண்டு சென்றனர்.

    இரண்டாம் நாள், செப்டம்பர் 04ம் திகதி, காலை 9 மணிக்கு காலை அமர்வு ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றல், தமிழ் வாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து, தொடக்கவுரையினை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன் அவர்கள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து, சிதம்பரேஸ்வரம் நடனாலய ஆசிரியர் செந்தூர்ச்செல்வன் மன்றும் நடனாலயத்தினுடைய மாணவிகள் இணைந்து வழங்கிய ‘தமிழ் மூச்சு’ எனும் நாட்டிய அளிக்கை முதலாவது நிகழ்வாக இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களின், நாட்டார் பாடல் இடம் பெற்றது.

    தொடர்ந்து, தமிழ் மாமன்றத்தின் ஓர் ஆவணப்படுத்தல் நூலக ‘தமிழ் மாருதம் 2016’ என்கின்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் மாமன்றதினுடைய உருவாக்கும், அதனுடைய கடந்த கால செயற்பாடுகள், எதிர்கால செயற்பாடுகள் என்பவற்றுடன், உறுப்பினர்களின் ஆக்கங்களும் அடங்கியதாக அந்நூல் வெளிவந்தது.

    நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, தேசிய மட்டத்தில் தமிழ் மொழித் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. அடுத்து, காலை அமர்வினுடைய இறுதி நிகழ்வாக, தமிழ் மாமன்றதினுடைய உறுப்பினர்கள் பங்கேற்ற, சுழலும் சொற்போர் நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு, தமிழாசிரியர் என்.கே.கஜரூபன் மற்றும் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரன் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றினர். ‘சிந்தையாலும் செய்கையாலும் எமைக் கவரும் எதிர் நிலைப் பாத்திரம்’ என்ற தலைப்பிலே இடம் பெற்ற சுழலும் சொற்போரில், கர்ணனே என கி.கிஷாந், துரியோதனே என கு.சிரஞ்சீதன், இந்திரசித்தனே என கஜிதா வரதராசா, கும்பகர்ணனே என க.பிரிந்தன், வாலியே என த.கிரிதரன், இராவணனே என ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ ஆகியோர் வாதிட்டனர். மிகச்சிறப்பாக இளைஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

    அன்றை மாலை அமர்வு மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றல், தமிழ் வாழ்த்தை தொடர்ந்து, தொடக்கவுரையினை புலம்பெயர் எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து மாலை அமர்வினுடைய முதலாவது கலை நிகழ்வாக பரத நர்த்தனாலய மாணவிகளின் கலச நடனம் இடம் பெற்றது. மண் பானைகளின் மீது நின்று அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் தங்கள் நடனத்தை அந்த மாணவிகள் வழங்கினர். அந் நடன நிகழ்வில் குழந்தைகளும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக கலை நிலாக் கலையகம் வழங்கிய ‘மறந்து போன சுவடுகள்;’ நாடகம் இடம் பெற்றது.. எம்மை நாம் எடை போட்டு பார்க்கின்ற வகையில் அந்த நாடகம் நடைபெற்றது. சிறப்பான நடிப்புத் திறனை அனைவருமே வெளிப்பிடுத்தியிருந்தனர். தொடர்ந்து, கவிஞர் ச.முகுந்தன் தலைமையிலான கவியரங்கம் இடம் பெற்றது. ‘குறுகத்தறித்ததில் நெஞ்சில் தெறித்தவை’ என்ற தலைப்பிவான கவியரங்கில் திருக்குறளின் அடிகளைக் தம் தலைப்பாகக் கொண்டு, வே.முல்லைத்தீபன், ஜெ.கோபிநாத், ஞானமாதங்கி செல்வராசா, இரா.இராஜேஸ்வரன், ச.கஜன், த.மோகனரங்கன், செ.மதுரகன் ஆகியோர் கவியரங்கில் கவிதை சமர்ப்பித்தனர். சம கால பிரச்சனைகளையும் அரசியல் சார்ந்த விடயங்களையும் தங்கள் கவிதைகளில் சொல்லி அவையின் கைதட்டல்களை நிறையவே வாங்கிச் சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து நிறைவு நிகழ்வாக, ‘என்றைக்கும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் தன்னிகரற்ற தலைவன்’ என்ற பொருளிலான பட்டிமன்றம் இடம் பெற்றது. கலாநிதி செ.சேதுராஜா அவர்கள் நடுவராக கடமையாற்ற, தருமனே என அ.வாசுதேவா, கு. அனுஜன் ஆகியோரும், இராமனே என, ந.ஜெனன், ஜெ.திருவரங்கன் ஆகியோரும், மனுநீதிச் சோழனே என சி.கிருபானந்தகுமாரன், ஜெசிதா ஆனந்தமூர்த்தி ஆகியோரும் தங்கள் வாதங்களை சிறப்பாக முன்வைத்தனர். தம் சார்பான வாதங்கள் எதிர் வாதங்கள் எனபவற்றை மிகச் சிறப்பாக முக்வைத்து அவையோரை கவர்ந்தனர்.

    மூன்று அமர்வுகளும் மிகச் சிறப்பாக நடந்தேறியிருந்தமை குறிப்பிடத்ததக்கது இரு நாட்களும், தமிழ் மாமன்ற உறுப்பினர் கனிஸ்கரின் ஓவியக்கண்காட்சி, பூபாலசிங்கம் புத்தக நிலையத்தினுடைய புத்தக மலிவு கண்காட்சி என்பவையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    வன்னிப் பகுதியில் ஒர் மாபெரும் கலை இலக்கிய பெரு விழாவாக நடற்தேறி முடித்திருக்கின்ற ‘தமிழ் மாருதம் 2016;’ அனைத்து கலைஞர்களினுடையதும், இலக்கிய ஆர்வலர்களினதும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் மிக ஆர்வமாக இம் மன்றத்துடன் இணைந்து கலை இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது பாரட்டக்குரியது. அதிகளாவான இளைஞர்கள், மன்ற வேலைகளில் தம்மை ஈடுபடுத்தி, ஆர்வமாக செயற்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. இளைஞர்களின் மிகப் பெரிய கனவாக இருக்கின்ற தமிழ் மாமன்றம் இது போன்ற பிரமாண்டமான சிற்பபான நிகழ்சிகளை எதிர்வரும் காலங்களிலும் தர வேண்டும் என இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றர்.





























    வெள்ளி, 16 செப்டம்பர், 2016

    ரதி மோகன் எழுதிய பாடி அழைக்கிறோம் வா அம்மா,..

    By: Unknown On: AM 4:03
  • Share The Gag
  • வெள்ளி மஞ்சள் நீராடி விரதமிருந்து
    தேவியே உனை சரணடைந்தோம்
    தோத்திரங்கள் பாமாலைகள்
    அபிஷேகித்து ஆராதனை செய்கின்றோம்...

    சிங்கத்தினை மேலேறி வருபவளே
    வீரத்தின் நாயகியே எம் தாயே
    திரிசூலத்துடன் எழுந்து வருவாயே
    தீயோரை அழித்து எமை காத்தருள்வாயே...

    மகிஷன் அசுரனை அழித்து
    பூலோக மாந்தரை காத்தவளே
    தேவரின் கோரிக்கையை ஏற்றவளே
    எம்மவர் அழும் ஓசை மட்டும்
    உன் செவியில் இன்னும் விழவில்லை...

    வாக்குமானவள் வாழ்வுமானவள்
    தோஷங்களை நீக்கியே அருளுபவள்
    பௌர்ணமி பூஜை உனக்கு சிறப்பாம்
    பாடி அழைக்கிறோம் வா அம்மா,...
     
    ஆக்கம்கவிஞை ரதி மோகன்