ஞாயிறு, 26 ஜூன், 2016

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் மனிதனின் எதிர்காலம்

By: Unknown On: PM 1:47
  • Share The Gag
  • இறைவன் அருவில்
    அற்புதம் தண்ணிர்
    இலவசம் என்பதை
    இடைக்கிடை எண்ணி
    இருப்பதை முழுவதும்
    இறைக்கிறான் மண்ணில்
    மகிமையை உணராது
    மடத்தனம் பண்ணி
    மனிதனின் எதிர்காலம்
    வேல் பாயும் புண்ணில் .....
    ஆக்கம் கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்

    சனி, 25 ஜூன், 2016

    ஈழத் தென்றல் எழுதிய இதயம் மரணத்தை தொட்டு மீள்கின்றது!

    By: Unknown On: PM 12:24
  • Share The Gag
  • மரணத்தின் வாசம் ஒவ்வோர் இரவும்
    என் சுவாசப் பையை நெருங்கி செல்கின்றது
    இருகிக் கொள்ளும் தோள்களும்

    திணறும் இதயம் மரணத்தை தொட்டு மீள்கின்றது!
    இதயத்தின் அதிவேக துடிப்பும்
    தனிமையும் பயமும் முடிவின்
    அண்மிப்பை சொல்லி செல்கின்றன
    இதுவும் உண்மை சத்தியம்!


    இருக்கும் வரையிலான பொறாமையும்
    வெறுப்பும், தானென்ன அகங்காரமும்
    கேலியுடன் சிரித்துக் கொள்கின்றன!

    இது கூட, உண்மை சத்தியம்

    என் மறைவுக்கு பின்னும்
    என்னை பழி சுமத்திய உலகம்
    தன்னை உணர்ந்து கொள்ளுமா?


    இல்லை தொலைந்தால் இனி தொல்லையில்லை
    என்றே நிறைவு கொள்ளுமா?
    இது என் உள்ளத்தில் ஒலிக்கும் வேதனை!


    ஆக்கம்

    ஈழத் தென்றல்

    வெள்ளி, 24 ஜூன், 2016

    கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய வெளிநாடு போன வெள்ளையனுக்கு

    By: Unknown On: AM 11:22
  • Share The Gag
  • வெளிநாடு போன
    வெள்ளையனுக்கு
    அம்மா எழுதுகின்ற
    அன்பான மடல் ....
    அப்பன் உன்னை விட்டு
    ஆறு வயதில் போனதுமே
    தப்பான தொழிலெதுவும்
    தரங்கெட்டுப் பார்க்காது
    எப்போதும் வயலுக்குள்
    எடுபிடியா வேலை செய்து
    அப்போது படிப்பித்தேன்.
    அல்லல்களை அனுபவித்தேன்.
    அரை வயிறு கஞ்சி குடிச்சி
    ஆகாரம் உனக்கே தந்து
    நிறையு மட்டும் பார்த்திருந்து
    நீங்காம கண்விழித்தேன் .
    நிழல் போல காத்த மகன்
    நிம்மதியா வாழனும்னு
    அலையாத இட மலைந்து
    அனுப்பினேன் வெளிநாடு.
    போன ஆறு மாதம் வரை
    போடியாரு கடனடைத்தேன்.
    ஆனா மற்றக் கடனடைக்க
    " அனுப்பியா" பணமின்னு
    ஆறு மாதம் காத்திருக்கேன்.
    வீணா வட்டி பெருகிடிச்சி
    விதை நெல்லும் கருகிடிச்சி.
    தூணா இருந்த உன்னம்மா
    தொந்தரவால் இளைத்திருக்கேன்.
    வட்டிக்காசு இப்போ
    ரெட்டிப்பா மாறி
    குட்டி போட்டுப் போட்டு
    குவிஞ்சி கிடக்கிறது.
    குட்டியோட நீயிருந்து
    குதூகலமா வாழுறதா
    புட்டிகளோட நீயும்
    குடித்து மகிழுறதா
    பட்டிக்காரன் மகன் வந்து
    பழி சொல்லிப் போகின்றான்.
    வயல் வேலை செஞ்சி செஞ்சி
    வருடங்களா நானுழைச்சி
    வட்டியை கட்டுகிறேன்.
    வாரி வாரிக் கொட்டுகிறேன்.
    வயசு போன தாய்க்கு இப்ப
    வயல் வேலை செய்யவொண்ணா
    பழசு பட்ட கண்ணிரண்டும்
    பார்வையன்றி மங்களாச்சி .
    இருந்தாலும் என் மகனே!
    இறப்பதற்குள் நீ வந்து
    இருக்கின்ற கடனையெல்லாம்
    இல்லாமல் பண்ணி விடு.
    இழுத்துப் பிடித்து என்னுயிரை
    இதுவரைக்கும் வச்சிருக்கேன்.
    இப்படிக்கு …உன் தாய்.

    ஆக்கம் கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்


    திங்கள், 20 ஜூன், 2016

    கவித்தென்றல் ஏரூர் எழுதிய நிலவு சிரித்தது மனிதர்களை கண்டு !

    By: Unknown On: PM 12:47
  • Share The Gag
  • என்னவென்பது இவர்கள் நிலையை..
    வருடம் ஒருமுறை இருக்கும் உபவாசம்
    பொருள் அறிந்து செயல் படுகின்றனரா?

    ஐம்புலன்கள் அடக்கும் செயல் நிலை 
    அது சொல்லும் அற்புதம் அறிந்தனரா?

    ஏழை வரியின் ஏற்றம் எதுவென்று 
    என்றேனும் இவர்கள் உணர்ந்தனரா?

    பெருநாள் என்ற ஒரு நாள் 
    எதற்கென்றாவது நினைத்தனரா?

    உபவாசம் சொல்லும் ஏழை பசியை 
    உணர்ந்து கொள்வீர் மானிடரே!

    புலன்கள் அடக்க அறிந்து கொண்டால் 
    வன்புணர்வுகள் மறையும் அறிவீரே!

    ஏழை வரியின் உன்னதமே 
    இல்லாதோர் வாழ்வு ஏற்றமுறவே!

    இறைவன் பொருத்தம் தேடி 
    பசித்திருப்பதிலும் இன்பம்..

    அவனை வணங்கி இரவுகளில் 
    விழித்திருப்பதும் இன்பம்..

    இறைவனை மனதில் இருத்தி 
    தனித்திருப்பதிலும் இன்பம்..

    பெயருக்காக கொடுக்கும் தானம். 
    இறை யச்சமில்லா வணக்க வழிபாடு,

    தொழுகை இல்லா பசித்திருந்த நோன்பு,
    கேளிக்கையில் திளைத்த வாழ்க்கை,

    பயனளிக்குமா என்று வானில் நின்று 

    ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    ஞாயிறு, 19 ஜூன், 2016

    கவித்தென்றல் ஏரூர் எழுதிய உத்தமனென்று சொல்ல யாருமில்லை..

    By: Unknown On: AM 2:54
  • Share The Gag
  • உத்தமனென்று சொல்ல யாருமில்லை..
    புத்தன் சொன்னதொன்றும் வேதமில்லை
    குத்தம் குறை காணும் உலகமிது...நீ
    சுத்தமென்று வாழ பழகிக்கொள்ளு...


    உறவு என்பது உலகில் உள்ளவரை..
    உயிர் துறந்துவிட்டால் உன் கூட யாருமில்லை
    இரவல் வாழ்வு நீ வாழும் வரை... நீ
    இறந்து போனால் உன் வாழ்வு என்ன நிலை...


    பொறுமை உலகில் புகழிடம் தரும்
    பெருமை உன்னை இழிவாக்கி விடும்
    அருமை பெருமை சொல்லும் ஒரு கூட்டம்
    திறமை இருக்கும் வரைக்கும் பாராட்டும்


    இரக்கமென்பது பிறப்பில் உள்ள குணம்
    இதயமின்றி வாழுதே சில குள்ள மனம்
    இறைவன் தந்த இந்த நல்ல வரம் - நீ்
    இரங்கி வாழ்ந்திட்டால் நன்மை தரும்


    பொறாமை, புகழ்ச்சி மனிதனின் இயல்பு
    பொய்யும் ,புரட்டுமின்றி வாழ்வது சிறப்பு
    உலகில் மனிதா ! நீ உன்னத படைப்பு.!
    உணர்ந்து வாழ்வதே இப்பிறப்பு..!!

    ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    வெள்ளி, 17 ஜூன், 2016

    கவித்தென்றல் ஏரூர் எழுதிய செப்புக்குடமெடுத்து

    By: Unknown On: AM 11:30
  • Share The Gag
  • செப்புக்குடமெடுத்து வந்தேன் 
    ஆத்து தண்ணி மொண்டு போக...
    எக்குத்தப்பா நனைஞ்சி நின்றேன் 
    ஐய்யா உன்னினப்பு வேக.....


    அன்பிருந்ததாலே வழுக்கி விழுந்தேன் நானே..
    வம்பிழுக்க வாயா உன் சிறுக்கி மவ தானே..
    தெம்பிருக்கும் வரை உன் தெப்பக்குளம் நானே..
    நம்பிருக்கும் நானுந்தன் மச்சமுள்ள மானே..

    முத்தெடுக்கும் வரைக்கும் வெட்கப்படுவேன் நானே...
    முக்குளித்து பாரேன் நான் சொக்கத்தங்கம் தானே....
    தத்தெடுக்க தவிக்கிறது தங்கக்குடம் தானா..
    குத்தகைக்கு நீயெடுத்து தேங்கிக் கொள்ளு தேனா..

    கும்பக்கரையோர கொய்யா கனி...
    இன்பம் சேர்க்க வந்து என்னை பறி..
    உப்புக்கரிக்காத இந்த தண்ணிக்கிளி...
    ஒப்புக்கொண்டு நீயும் வந்து என்னில் குளி..

    தப்பா தவிப்பா தெரியாது 
    தாமரையிலை தண்ணில மூழ்காது
    தண்ணில வேர்த்தா தெரியாது
    தனியா தவிக்கிறேன் நீ பாரு...

      ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    வியாழன், 16 ஜூன், 2016

    பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் திருக்குறள் விழா18.06.2016

    By: Unknown On: PM 2:47
  • Share The Gag
  • வரும் சனிக்கிழமை டோட்முண்டில் திருவள்ளுவர் விழா நடக்கவுள்ளது. திருக்குறள் சிறுகதை போட்டிகளின் முடிவுகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும். சிறுகதைப் போட்டிக்கான நடுவர் குழுவின் அமர்வில் நீண்ட நேர விவாதங்களின் பின்னர் ஒருமித்த முடிவுகள்  எடுக்கப்பட்டுள்ளது அத்தோடு இதில்
    திருவள்ளுவர் விழா சம்பந்தமான தயார்படுத்தல்களில் பற்றியும் கலந்துரையாடப்பட்டுது



    புதன், 15 ஜூன், 2016

    கவிச்சுடர் சிவரமணியின் ‘’அவள் ஒரு தனித்தீவு ‘’ கதையும் கவிதையும் நூல் வெளியீட்டு 12,06.2016

    By: Unknown On: AM 5:40
  • Share The Gag
  • கவிச்சுடர் சிவரமணியின் ‘’அவள் ஒரு தனித்தீவு ‘’ கதையும் கவிதையும் நூல் வெளியீட்டு 12,06.2016. ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் பி.பகல் 2,00 மணிக்கு,

    கவிஞர் எஸ். ஆர் தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது மங்களவிளக்கினை கோணேஸ்வரா ஆலய மு. சன்முகரெத்தினக்குருக்கள் ஏற்றி வைத்தார்.பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்பிரதம அதிதி உரையினையும் ஆற்றிவைத்தார், நூல்வெளியீட்டினை நடத்திவைத்து முதல் பிரதி பெற்றுக்கொண்டமையை படத்தில் காணலாம்

    தலைமையுரையினை. ஆசிரியர் தனபாலசிங்கமும் வரவேற்பு உரையினை /வி. குணபாலா கலாசார உத்தியோகத்தரும் சிறப்புரையினை கலைமகள் கிதாயா ரிஸ்வி ( தடாகம் கலையிலக்கியவட்டம் ) அவர்களும்.நூல் விமர்சனத்தை திருமலை நவம் சிரேஷ்ட ஊடகவியலாளர் அவர்களும் .மேலும் சிறப்பு உரையும் வாழ்த்துபட்டயமும் வவுனியா தமிழ்விருட்சம் கண்ணன் வழ்ங்கினார்.

    அடுத்து வவுனியா விரிவுரையாளர் பார்த்திபன் அவர்களும் வாழ்த்திப்பேசினர். சிறப்பு நிகழ்வாக ஆசிரியர் முல்லைத்தீபன் தலைமையில் கவியரங்கமும் இடம்பெற்றது.அடுத்து நூல் ஆசிரியரின் ஏற்புரையும் தாய்த்தேச கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆஞ்சலோவினால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.

    இந்தவெளியீடு சிறப்புற்றமைக்கும் கவிச்சுடர் சிவரமணி இதுபோன்று இன்னும் பலபடைப்புக்களை படைத்து எழுத்துத்துறையில் நிறந்து சிகரம் தொடவும் ஈழத்துக்கலைஞர்கள்சார்பில் நம்மவர் கலைஞர்கள் இணையம்எஸ்.ரிஎஸ். வாத்திநிற்கின்றது ,

    செவ்வாய், 14 ஜூன், 2016

    ஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பாமரனும் பார் ஆள்வோனும்

    By: Unknown On: PM 12:27
  • Share The Gag
  • பாமரனும் 

    பார் ஆள்வோனும் 
    ஒன்றாமோ?
    பரதேசியும் 
    பகட்டாய் வாழும் 
    தனவந்தனும் ஒன்றாமோ?

    இரத்தம் 

    ஒரே நிறமானாலும், 
    ஒருவன் 
    பிறப்பில் கீழானவன்
    மற்றவன் 
    மேலானவன்!

    மேல்குடிக்கும் 

    கீழ் குடிக்கும் 
    ஏணி வைத்தாலும் 
    எட்டாதென்பதை 
    அறியாதது 
    நீ செய்த பாவம்!

    குனியக் குனியக் 

    குட்டும் போது 
    குனிந்தே நின்ற மூடமே
    நிமிர்ந்திடாதே
    என்றைக்கும் 
    அப்படியே கிட!

    குட்ட குட்ட 

    குனிந்தவனை 
    குட்டியே தீர்த்தவனே
    அப்படியே உன் 
    கொடுமையை 
    நிலை நிறுத்திக் கொள்!

    உனக்கும் 

    அவனுக்கும் 
    கடைசியில் 
    கிடைப்பது 
    நிச்சயமாய் 
    ஒரே கேடு தான்!

    அவன் சுவாசித்த 

    அதே காற்றை
    சுவாசிக்கும் 
    உணர்ச்சியற்றவனே 
    மரணம் அண்மித்தால்,

    உனக்கும் ஆறடி 

    அவனுக்கும் அதே கதி 
    கேடு கெட்ட 
    இரண்டு ஜென்மமும் 
    போய் சேரப் போவது 
    ஒரே குழி!


    ஆக்கம் 

                                                                  ஈழத் தென்றல் கவிதைகள்

                                                    

    திங்கள், 13 ஜூன், 2016

    ஆக்கம் கவிப்புயல் இனியவன்நான் மட்டுமா ....?

    By: Unknown On: PM 3:13
  • Share The Gag

  • தென்றல் காற்றாய் ....

    வீசிய நீ 
    எதற்காய் கண்ணில்...
    தூசியை கொட்டினாய் ...?



    காட்டாறு வெள்ளம் -நீ 
    கொஞ்சம் இரக்கப்படு....
    சிறு படகாக உன்னில் ....
    மிதக்கிறேன் ....!!!



    எனக்கு நீ மட்டுமே ...
    உனக்கு நான் ...?
    நான் மட்டுமா ....?


    ஆக்கம் கவிப்புயல் இனியவன்



    வியாழன், 9 ஜூன், 2016

    சுதர்சன் எழுதிய அம்மா....

    By: Unknown On: AM 5:54
  • Share The Gag
  • அம்மா....
    பிஞ்சு விரல் எடுத்து
    பல் படாமல் அன்பாய் 
    கடிப்பவளே
    மார்பின் இரத்தமதை

    எனக்கு கொடுத்து
    உயிர் வளர்த்தவளே
    உறங்காமல் 
    விளி திறந்து
    எனை உறங்க 
    வைத்த தேவதையே
    காலம் ஓடி நான் 
    வளர்ந்தாலும்
    தலை முடி கோதி
    ஓடி அணைப்பவளே
    நீயல்லோ 
    நடமாடும் தெய்வம்

    யார் வஞ்சிப்பினும்
    சுடு சொல் 
    கூறாது
    மகவினை காக்கும்
    உளம் கடவுள் 
    கொடுத்தானா
    அல்லது உன் 
    உதிரத்தின் 
    உணர்வதுவா

    நோய் நொடி
    எனை சேரா வண்ணம்
    தன் நோயின் 
    கொடூரத்தை காட்டாமல்
    புண்ணகைத்து
    மனதால் அழுவாய் 
    எனக்காக....

    ஆக்கம் சுதர்சன்

    புதன், 8 ஜூன், 2016

    கனடாவில் எதிர்வரும் 12.06.16 பாடகர் நீருஜன்இசையரங்கம்

    By: Unknown On: PM 3:08
  • Share The Gag
  • கனடாவில் எதிர்வரும்  12.06.16
    மாலை 6:30க்கு ஸ்காபுரோ சென்ரானியல் கல்லுாரி கலையரங்கில்- CENTENNIAL COLLEGE ASHTONBEE CAMBUS. 75 ASHTONBEE ROAD, SCARBOROUGH. (WARDEN & EGLINTON) நடைபெறவுள்ள இசையரங்கத்தின் "இசைக்கு ஏது எல்லை" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்வின் மூலம் சர்வதேச ரீதியில் அடையாளம் காணப்பட்ட பாடகர் நீருஜன் பாடவுள்ளார் 

    ´உலகத்தமிழ் நாடக விழா-2016. பிரான்ஸ் -. 24, 25, 26.2016

    By: Unknown On: PM 1:49
  • Share The Gag
  • ´உலகத்தமிழ் நாடக விழா-2016. பிரான்ஸ் -
    செப். 24, 25, 26.2016 ம் நாட்களில் பாரிசில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் நாடக விழா ஏற்பாட்டுக்குழுவினர் சார்பில் திருவாளர்கள் பரா, அரியநாயகம், ஏலையா முருகதாசன், சுதா ஆகியோர் எசன் தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் நுண்கலைகல்லூரி இயக்குனர் தமிழருவி நயினை விஜயன் அவர்களைச்சந்தித்தபோது........!
    சமூக விடுதலைக்கு வலிமைமிக்க ஊடகமான,நாடகக் கலையை இளம் தலைமுறைக்குக் கையளிப்போம் ´` என்ற தொனிப்பொருளில் 
    எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24, 25, 26.9.2016, மூன்று தினங்கள் நடை பெறவுள்ளது.உலகத் தமிழ் அரங்கையும், அரங்கியலாளர்களையும்
    ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது அமையவுள்ளது.300 க்கும் அதிகமான கலைஞர்கள் 5 கண்டங்களிலிருந்தும் கலந்துகொள்ளவுள்ளதாக 
    தெரியவருகிறது.பிரபல நடிகர் திரு.நாசர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
    உலகத்தமிழ் நாடக விழாவுக்கான சிறப்பு மலருக்கான ஆக்கங்களை நீங்கள் அனுப்பி வைக்கலாம்.நாடகம் இசை, நடனம்,ஆகிய 
    ஆற்றுகையாளர்களின் படைப்புகள் பற்றிய உங்கள் பார்வைகள், பதிவுகள்,நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கான உங்கள் ஆக்கங்கள்,எமது தொன்மையான கலைவடிவங்களை ஊக்குவிக்கவேண்டிய எமது கடமைகள்,குறும்படங்கள் பற்றிய திறனாய்வுகள்,பதிவுகள்,வளர்ச்சிக்கான கருத்துக்கள்;உங்கள் ஆக்கங்களை அனுப்ப oudalmozhi@gmail.com எனும் முகவரிக்கு உங்கள் ஆக்கங்களை 30.6.2016 ற்கு முன்னராக அனுப்பிவையுங்கள். (info thamilaruvi-Germany)
    இன்டர்நேஷனல் தமிழ் நாடக விழா -2016.

    செவ்வாய், 7 ஜூன், 2016

    மீரா குகன் எழுதிய சிட்டுக்குருவி

    By: Unknown On: AM 5:38
  • Share The Gag

  • பட்டு வண்ண சிட்டுக்குருவி
    பச்சை மரத்தில் தத்திப் பறந்து
    பார்ப்பவர் மனதை கொள்ளை கொண்டு 

    பாடி மயக்கிறாய் என்னை இன்று


    சின்னஞ்சிறிய உருவில் வந்து 
    சிட்டாய் வானில் சிறகடிக்கிறாய் 
    சிந்தையை உடன் கவர்கிறாய் 
    சிக்கலற்ற வாழ்வை எனக்கு உணர்த்துகிறாய்

    கலக்கம் என்பதும் உனக்கில்லையா
    கடிகாரம் பார்க்கும் வேலையும் உனக்கில்லையா 
    கவலைகளை என்றும் உணராமலே 
    காற்றில் பறக்கிறாய் சுதந்திரமாகவே

    உன்னைப் போலவே நானும் 
    உயர பறக்க ஆசை கொண்டேன் 
    உள்ளத்தில் இடர்கள் நெருடாமல் 
    உவகையில் சிரிக்க வேண்டும் எந்நாளுமே

    ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி


    வெள்ளி, 3 ஜூன், 2016

    குறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி

    By: Unknown On: PM 12:17
  • Share The Gag

  • இருள்சூழ் வேளையில 

    இருளாது காக்கும சிறுஔி 
    அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு
    அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் 
    அணலிடையே ஒரு ஒருவாடாமலர்
    அத்தனையும் அன்பிலே.கண்டேன்.
    நீயாக நானாக ஆயிரம் அர்த்தமும்கொண்டேன்.



    சிவரமணி

    மீரா குகனின்எழுதிய காத்திருக்கிறேன்

    By: Unknown On: AM 8:22
  • Share The Gag

  • காத்திருக்கிறேன் 
    கண் வழி புகுந்தவனுக்காக அல்ல 
    கருணை உள்ளத்துடன் 
    காதலிப்பவனுக்காக
    கசங்கிய இதயத்தில் 
    கசியும் 
    கண்ணீரை துடைத்து 
    காவியமாக்குபவனுக்காக 
    காத்திருப்பதும் ஒருவகை 
    கடும் தவம் தான்
    கடந்து வந்த 
    காலங்களை 
    கதைகளாக்கி 
    கவிதைகளில் புதுமை காண 
    கனாக்கள் நிஜமாக 
    களிப்புடன் காத்திருக்கிறேன்

    ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

    வியாழன், 2 ஜூன், 2016

    கவித்தென்றல்‬ எழுதிய நீதான் எந்தன் பொன்வானே..!

    By: Unknown On: AM 4:53
  • Share The Gag
  • ஆரஞ்சி நிறத்தழகு பெண்ணே - என்
    ஆவியை அறுத்தெடுக்கும் கண்ணே
    பூவிழி பார்வை எரிக்குதடி என்னை
    பூமியிலே நானும் தவிக்கிறனே பெண்ணே

    ஒளிகள் கொண்டு உன் உருவம் செய்தானோ -பல
    விழிகள் கொய்யும் உந்தன் மெய்தானோ
    மொழிகள் கூட உதிரும் தேன் தானோ
    கிளியே நீதான் எந்தன் பொன்வானோ

    மரபுக் கவிதை சொல்லுது உன் ஜாடை
    அரபுக் கடலிலும் வீசும் நீ பெண் வாடை
    இரவுப் பொழுதில் உறைந்திடும் நீரோடை - என்
    உறவைக் கொண்டாடிட வா நீராட....

    பதுமை கொண்ட உன் வெண்பணி கழுத்து
    உவமை சொல்லிடும் செந்தமிழ் எழுத்து
    உரிமை கொண்டிட உன்னை நீ நிறுத்து -என்
    இளமை உண்டிட நீ தான் என் விருந்து


                               ஆக்கம் வித்தென்றல்