செவ்வாய், 17 மே, 2016

Tagged Under:

கவிஞர் ரி.தயாநிதியின் அனாவசிய முகங்கள்.

By: Unknown On: AM 2:37
  • Share The Gag
  • திசை மாறும்
    உலகில்
    தினம் மாறும்

    முகங்கள்.
    வசை பாடும்
    சில முகங்கள்
    மனம் முறிக்கும்
    சில முகங்கள்.


    நவரச நாட்டிய
    முகங்கள்
    களி நடன
    முகங்கள்.
    அன்பு கருணை
    சாந்த முகங்கள்.
    இரக்கம் ஈதல்
    கொண்ட முகங்கள்.!

    இன்று அடிக்கடி
    உருமாறும்
    பல முகங்கள்.
    கோபம் கொடூரம்
    வன்மம் அதர்மம்
    வஞ்சம் சூது
    காமம் குதர்க்கம்
    என நாற்றமெடுக்கும்
    திருமுகங்கள்...!

    அறியாத முகம்
    அறிமுகமாகும்
    இக்காலம்
    இன்னல்களின்
    அறுவடைக்காலம்
    இயல்பை விரட்டி
    இன்பம் இழக்கும்
    அநாவசிய முகங்கள்
    வசமானோம்.!

    ஆக்கம் கவிஞர் 
    எழுத்தாளர் ரி.தயாநிதி

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக