ஞாயிறு, 29 மே, 2016

கவித்தென்றல்‬ எழுதிய பாட்டெழுதும் பாவலன் கை.

By: Unknown On: AM 8:57
  • Share The Gag
  • பாட்டெழுதும் பாவலன் கை
    பழுதுபடா எழுத்தறியும், 
    பகுத்தறிவை பகிர்ந்தளிக்கும் 
    பாரினையும் ஆட்டுவிக்கும்!

    எழுத்தைக் கொண்டே எட்டுத் திக்கும்
    எழிலுறவே எத்தி நிற்கும், 
    எழுதி மண்ணின் விடுதலைக்கு 
    எழுச்சி, சுதந்திர வழி வகுக்கும்!

    அரசியல் சாக்கடை அழுக்குகளை 
    அன்றன்றே களமேற்றும்.. 
    அறம் தவறா எழுத்துக்களால் 
    அகிலத்தை ஆட்சி செய்யும்!

    கூலிக்கு விலை போகா,
    குற்றமற்ற பாவலன் கை.. 
    குல பேதம் பாராமல்,
    கோலோச்சி வெற்றி பெறும்!



                                                     ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    வெள்ளி, 27 மே, 2016

    ரூபன் எழுதிய ”ஆயுதப்பூ” சிவரமணிஎழுதிய”அவள் ஒரு தீவு”மலேசியாவில்வௌியிடப்பட்டுள்ளது

    By: Unknown On: AM 3:49
  • Share The Gag


  • 21-05-2016 அன்று மலேசியாவில் இனிய நந்தவனம் பதிப்பகமும் ஸ்ரீ முகவரி ஆரவாரியமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் மலேசியா சிங்கப்பூர் எழுதாளர்களுடன்கவிஞர்  ரூபன் அவர்களின் ஆயுதப்பூ என்ற சிறுகதை நூலும் கவிசுடர் சிவரமணியின் அவள் ஒரு தீவு என்ற நூலும் வெளியிடப்பட்டது
    என்பது சிறப்பான பதிவாகும்,

     எமது படைப்பாளிகள்  இப்படி ஓர்சிறப்புக்குகாரணம் என்பது எமது மண்ணுக்குப்பெருமை அந்தவகையில்  இந்தப்பெருமைக்கு வித்திட்ட  இருகலைஞர்களையும்  எமது உறவுகள் சார்பில் எம்மவர் இணையமான எஸ்.ரி.எஸ். இணையம்வாழ்தி நிற்கின்றது



    கவிஞை சுபாரஞ்சன் எழுதிய நேரமில்லை

    By: Unknown On: AM 3:18
  • Share The Gag
  • சோம்பல் தவிர்த்து
    சுகமாக வாழ்ந்தாலும்
    சுகம் விசாரிக்க
    நேரமில்லை........

    நாழிகை நிறைத்து
    நம் கவலைகள்
    தொலைத்து
    நகைத்துச் சிரிப்பதற்கும்
    நேரமில்லை.........

    நன்றாகப் பேசி
    நாவில் ஏதும் ஒட்டாமல் 
    நாடகம் போல் நடித்தாலும்
    அக்கம் பக்கம் உள்ள
    அயலவரை அறிய
    நேரமில்லை .....

    வேலியோரப் பொட்டுக்குள்
    வேடிக்கையாய்ப் பேசி
    வாடிக்கையாய் சிரித்து
    பாதி சோகத்தைப் பகிர்வதற்கு
    பக்கத்தில் யாரும் இல்லை
    நாதியற்ற வாழ்வு போல்
    தேதி அற்றுத் தொலைய
    நமக்கோ நேரமில்லை .....

    ஆக்கம் கவிஞை
    சுபாரஞ்சன் 

    வியாழன், 26 மே, 2016

    டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16சப்பறத்திருவிழா

    By: Unknown On: PM 3:24
  • Share The Gag

  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழா  தினம் 
    அன்று திருவிளக்கு பூஜை ! மாலை 19.00 மணிக்கு இடம்பெறும் 
    குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
    விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.

    காலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா பற்றய அஞ்சலிக் குறிப்பைபு.லெ.முருகபூபதி

    By: Unknown On: AM 3:42
  • Share The Gag
  • காலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா அவர்களுடன் வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றி இப்பொழுது Australiaவில் வசிக்கும் ஊடகவியலாளரும் பழம்பெரும் எழுத்தாளருமாகிய திரு.லெ.முருகபூபதி அவர்கள் அமரரைப் பற்றி எழுதி எனக்கு அனுப்பி வைத்த அஞ்சலிக் குறிப்பை இங்கு பதிவு செய்கின்றேன்.
    -----------------------------------------------------------------------------------
    அஞ்சலிக்குறிப்பு
    தமிழ் ஊடகப்பயணத்திலிருந்து விடைபெறும் வீ.ஆர். வரதராஜா
    வீரகேசரியின் படிகளிலிருந்து நீதிமன்ற படிகளுக்கு ஏறி இறங்கி செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளன்.
    யாழ்தேவி அன்றைய காலத்தில் யாருக்காக ஓடியது என்பதை வெளிப்படுத்திய செய்தியாளன்
    முருகபூபதி - அவுஸ்திரேலியா
    வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தில் எம்முடன் இணைந்திருந்த சிலர் படிப்படியாக எம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கின்றனர். விதி தனது கடமையைச் செய்துகொண்டிருக்கும் சூழலில் நாமும் அயற்சியின்றி அஞ்சலிக்குறிப்புகளை தொடருகின்றோம்.
    வீரகேசரி தனது நூற்றாண்டை அண்மித்துக்கொண்டிருக்கையில், அங்கு தமது கையில் பேனை ஏந்தி எழுதிக்குவித்தவர்கள் நினைவில் வந்து செல்கின்றனர். இன்று காலம் மாறியிருக்கிறது. காலம் கணினியில் எழுதிக்குவிக்கத் தூண்டியுள்ளது.
    இம்மாதம் 22 ஆம் திகதி ஜெர்மனியில் வீரகேசரியின் முன்னாள் ஊடகவியலாளர் வீ.ஆர். வரதராஜா மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை மின்னஞ்சலில் தாங்கி வந்தது அங்கு வதியும் எனது இலக்கிய நண்பர் ஏலையா முருகதாசனின் மடல். வரதராஜாவுக்கும் ஜெர்மனியிலேயே இவரை முந்திக்கொண்டு மறைந்துவிட்ட துணைஆசிரியர் சேதுபதிக்கும் சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் நாம் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் பிரிவுபசார விருந்து வழங்கி விடைகொடுத்தோம்.
    இருவரும் அன்று ஒன்றாகவே வீரகேசரியிலிருந்து விடைபெற்றனர்.
    இருவரும் ஜெர்மனிக்கே புலம்பெயர்ந்தனர். அப்பொழுது விசா கெடுபிடிகள் இருக்கவில்லை.
    வரதராஜா விடுமறை நாட்கள் தவிர்ந்த அனைத்து வேலை நாட்களிலும் கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் அமைந்த வீரகேசரி கட்டிடத்தின் படிக்கட்டுகளில் இறங்கி அருகில் இருக்கும் புதுக்கடையில் (ஹல்ஸ்டோர்ப்) அமைந்துள்ள நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி செய்தி சேகரித்துக்கொண்டு வரும் நீதிமன்ற நிருபராக பல வருடங்கள் இயங்கியவர்.
    இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்ட பலர் பிரபல சட்டத்தரணிகள் என்பது அறிந்த செய்தியே. அதனால் வரதராஜாவுக்கும் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு நீடித்திருந்தது. வரதராஜா எழுதும் செய்திகளினால் அந்தத் தமிழ் சட்டத்தரணிகளின் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தது.
    அவர்கள் வரதராஜாவுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்தனர். அக்காலப்பகுதியில், அல்பிரட் துரையப்பா கொலை வழக்கு விசாரணை, ட்ரயல் அட் பார் விசாரணை, வண. பிதா. ஆபரணம் சிங்கராயர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை, குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை விசாரணை உட்பட பல வழக்குகளில் தமிழர்களும் தமிழ்த்தலைவர்களும் தமிழ் சட்டத்தரணிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
    இவை தவிர போலின் டீ குரூஸ், வண. பிதா மத்தியூ பீரிஸ் சம்பந்தப்பட்ட சில கொலைச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் நடந்திருக்கின்றன. அதனால் வீரகேசரியின் தினசரி பதிப்புகளுக்கு வாசகர் மத்தியில் சிறந்த வரவேற்பிருந்தது.
    முதல் வெளியூர் பதிப்பில் வெளியாகும் வீரகேசரியின் உள்ளே சில பக்கங்கள் செய்திகளால் மாறியிருக்கும். அவை யாழ்ப்பாணம் பதிப்பு, கிழக்கிலங்கை பதிப்பு, மலையகப்பதிப்புகளுக்காக வேறுபட்டிருக்கும். அவை மாலை 7 மணிக்குள் அச்சாகிவிடும்.
    அந்தப்பதிப்புகள் இரவு புறப்படும் தபால் ரயில்களுக்காக அவசரமாக அச்சிடப்படும். ஆனால், நகரப்பதிப்பு நடு இரவும் கடந்து அச்சாகும்.
    நகரப்பதிப்பில் வெளியாகும் புத்தம் புதிய செய்திகள் மறுநாள் வெளியூர் பதிப்புகளில் இணைத்துக்கொள்ளப்படும்.
    எவ்வாறாயினும் இலங்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மலையக மாகாணங்களுக்கு உரிய முறையில் தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் வழங்கி மக்களின் அபிமான தினசரியாக வீரகேசரி விளங்கியது.
    அதற்குப்பின்னால் இருந்த கடின உழைப்பு பெறுமதியானது.
    இன்றுபோல் அன்று இருக்கவில்லை.
    அன்றைய கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பத்திரிகையாளர்களுக்கும் அச்சுக்கோப்பாளர்களுக்கும் பக்க வடிவமைப்பாளர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் கிடைத்ததா ? என்ற வினாவுக்கு பதில் இல்லை.
    1983 வன்செயல்களையடுத்து இலங்கையிலிருந்து தமிழர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல அய்ரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்தனர். இந்நாடுகளுக்குச் செல்வதற்கு விசா கெடுபிடிகள் இல்லாதிருந்தமையால், அந்த வாய்ப்பை நண்பர்கள் சேதுபதியும் வரதராஜாவும் பயன்படுத்தினர்.
    வீரகேசரி நிருவாகத்தில் ஊதியம் தொடர்பாக பலருக்கும் அதிருப்தி இருந்தது உண்மை. ஆனால், அதனை பலரும் வெளிப்படுத்தாமல் பத்திகள் எழுதியும் தொடர்கதைகளை புனைபெயர்களில் எழுதியும் மேலதிக நேர வேலை செய்தும் வாழ்க்கைப்படகைச்செலுத்தினர்.
    துணை செய்தி ஆசிரியராக இருந்த கார்மேகம் 1983 வன்செயலுக்கு முன்னமே சென்னைக்குச்சென்று தினமணியில் இணைந்தார்.
    பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் வன்செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.
    அந்த வெற்றிடத்திற்கு வந்திருக்கவேண்டிய செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ - அந்தப்பதவி கிட்டாத நிலையில் அதிருப்தியுற்று, மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்றார்.
    அதன்பின்னர் வீரகேசரியின் ஆசிரியராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் நூலகராகவும் பணியாற்றிய ஆ. சிவநேசச்செல்வன் வந்து இணைந்தார்.
    அவரது வருகையின் பின்னர் எனக்கும் நண்பர் வீ. தனபாலசிங்கத்திற்கும் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆசிரிய பீடத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது.
    நாம் இருவரும் துணை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டோம்.
    கார்மேகம் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு சாந்திவிஹார் ஹோட்டலில் நடந்தது. அதனை அன்று பத்திரிகை கலை இலக்கிய நண்பர்கள் என்ற அமைப்பை தினகரன் ஆசிரியர் இ. சிவகுருநாதன் தலைமையில் இயக்கிவந்த பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம் ஒழுங்குசெய்திருந்தார்.
    பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசத்திற்கு செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ தலைமையில் வீரகேசரி ஆசிரிய பீடத்திலேயே சிறிய அளவில் தேநீர் விருந்துபசாரத்துடன் பிரியாவிடை தரப்பட்டது. அவருடைய அமெரிக்கப்பயணம் அவசரமாக இருந்தமையும் அதற்கு ஒரு காரணம்.
    டேவிட்ராஜூவும் விலகினார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
    அடுத்து யார் விலகிச்செல்லப்போகிறார்கள் ? என்பதே ஆசிரியபீடத்தின் பிரதான பேசுபொருளாக விளங்கியது.
    செய்தி ஆசிரியர்களாக பணியாற்றிய டேவிட் ராஜூ மற்றும் நடராஜா, கார்மேகம், ஆகியோரும் மற்றும் துணை செய்தி ஆசிரியர்களான கண. சுபாஷ் சந்திரபோஸ், எட்வர்ட் ஆகியோரும் வரதராஜா நீதிமன்றங்களிலிருந்து எடுத்துவரும் செய்திகளை மக்களைக்கவரும் வகையில் பொருத்தமான தலைப்புகளை சூட்டி செம்மைப்படுத்துவர்.
    பல சந்தர்ப்பங்களில் வரதராஜா எழுதித்தரும் செய்திகளை செம்மைப்படுத்திய அனுபவமும் எனக்குண்டு. அதனால் அவருடன் நெருங்கிப்பழகும் நண்பர்கள் வட்டத்திலிருந்தேன். அவர் செய்திகள் மாத்திரம் எழுதவில்லை. மேலதிக ஊதியத்திற்காக பத்தி எழுத்துக்களும் மித்திரனில் தொடர்கதைகளும் எழுதுவார்.
    இவருடைய சகோதரர்தான் மொழிவாணன். அவரும் ஒரு பத்திரிகையாளர். ஆனால், அவர் Freelance Journalist ஆக வெளியிலிருந்து இயங்கினார். இன்றுவரையில் அவர் இலங்கையில் அவ்வாறு இயங்கிவருகிறார். எண்சோதிட பலன்களும் எழுதுவார்.
    வரதராஜா - வெளியூர் பயணங்கள் முடித்து திரும்புகையில் ஏதாவது புதினங்களுடன்தான் வருவார். அவற்றை பத்தி எழுத்துக்களாக தருவார். அவ்வாறு அவர் ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவியில் பயணித்துவிட்டு வந்து பயணிகள், இராணுவத்திற்கு பணையமாகியிருக்கும் அவலத்தை எழுதித்தந்தார்.
    தீவிரவாத இயக்கங்கள் இராணுவம் பயணிக்கும் வடபகுதி ரயிலை தாக்கிவிடும் அபாயம் இருந்தது. ஒரு பாரிய தாக்குதலும் நடந்திருக்கிறது. அதனை டெலோ இயக்கம் செய்ததாக செய்தி வெளியானது. இராணுவத்தினர் தம்மைப்பாதுகாக்க ஆனையிரவு மற்றும் வடபகுதி முகாம்களுக்குச்செல்லும்பொழுது, அந்த ரயில்களில் பயணிக்கும் பொதுமக்களை பணயமாக்கி வந்தனர். கிளிநொச்சியில் இறங்கவேண்டிய பயணிகள் இராணுவத்துடன் ஆனையிரவு முகாம் வரையில் அநாவசியமாக பயணித்து திரும்பினர்.
    அந்த அநாவசிய பயணத்திற்கு இலக்காகியிருந்த வரதராஜா எழுதித்தந்த செய்தியை மேலும் செம்மைப்படுத்துவதற்காக செய்தி ஆசிரியர் நடராஜா அந்தப்பிரதியை எனது மேசைக்கு அனுப்பியிருந்தார். நானும் செம்மைப்படுத்திய பின்னர், ஒரு தலைப்பிட்டு அவரிடம் கொடுத்தேன்.
    ' நடா ' என்று நாம் செல்லமாக அழைக்கும் நடராஜா, அதற்கு மிகவும் பொருத்தமான கவித்துவம் நிரம்பிய தலைப்பை சூட்டினார்.
    அந்தத்தலைப்பு:
    யாழ்தேவி, நீ யார் தேவி. ஓடுவதும் நிற்பதும் யாருக்காக?
    அந்தத்தலைப்பின் கீழே அதனை எழுதியவரின் பெயராக வீ.ஆர். வரதராஜா என்றுதான் இருக்கும்.
    ஆசிரியபீடம் என்பது ஒருவகையில் குழுநிலைப்பணியாகும். அதாவது Team Work.
    குழுநிலைப்பணிகள் , குழுவாதமாகவும் அணிதிரட்டும் பக்கவாதமாகவும் மாறிவிடக்கூடாது. அவ்வாறு மாறிவிட்டால் சிக்கல்தான். இந்த நிலைமைதான் அரசியல் கட்சிகளிடத்திலும் பொது அமைப்புகளிலும் நீடித்திருக்கும் நிரந்தர இலட்சணம்.
    வரதராஜாவுக்கும் சேதுபதிக்கும் வீரகேசரியின் அன்றைய கால கட்ட நிருவாகத்திலிருந்த அதிருப்தியை அன்று ரண்முத்து ஹோட்டலில் நாம் நடத்திய அவர்களுக்கான இராப்போசன விருந்துபசார பிரியாவிடை நிகழ்வில் காணமுடிந்தது.
    எம்மில் பலர் அவர்களின் சேவைகளைப்பாராட்டிப் பேசியதையடுத்து - ஒரு சகோதரி பாடல்கள் பாடி, நடனமும் ஆடினார். அவர் அங்கு ஓவியராக பணியாற்றியவர். அத்துடன் அவர் நாடகக்கலைஞருமாவார். அதனால் அவர் மேடைக்கூச்சமின்றி பாடி ஆடினார்.
    ஆனால், இறுதியாக தமது ஏற்புரைகளை வழங்கிய வரதராஜாவும் சேதுபதியும் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி அங்கிருந்த சில மேலதிகாரிகளை கூச்சப்படுத்தினர்.
    அவர்கள் வீரகேசரியிலிருந்து விடைபெறுவதற்கான காரணத்தை வெளிப்படுத்தினர். அந்தக்காரணங்களில் ஊதியம் (Salary ) ஊக்கமளிப்பு (Appreciation) முதலான வார்த்தைப்பிரயோகங்கள் காணப்பட்டன.
    நாம் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.
    அவர்கள் இருவரும் குடும்பமாகவே ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தனர். அதன்பின்னர் தொடர்புகள் அற்றுப்போனது.
    நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.
    எனினும் இந்தப்பிரிவுபசார சடங்குகளுக்குட்படாமல் நாட்டைவிட்டு வெளியேறிய நாள் முதலாக எந்த ஊதியமும் ஊக்கமளிப்பும் எதிர்பார்க்காமலேயே தொடர்ச்சியாக வீரகேசரிக்கும் இதர இதழ்கள் ஊடகங்களுக்கும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் இன்று நண்பர் வரதராஜாவின் மறைவுக்காக அஞ்சலிக்குறிப்பு எழுதுகின்றேன்.
    இதுவரையில் வீரகேசரி குடும்பத்தில் இணைந்திருந்த பலர் பற்றியும் எழுதிவிட்டேன். அவர்களில் சிலர் நினைவுகளைத்தந்துவிட்டு, நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர்.
    இம்மாதம் 22 ஆம் திகதி முதல் நண்பர் வரதராஜாவும் இந்தப்பட்டியலில் சேர்ந்துவிட்டார்.
    புலம்பெயர்ந்த பின்னர், வரதராஜாவின் எழுத்துக்களை ஜெர்மனியில் நண்பர் இந்துமகேஷ் வெளியிட்ட பூவரசு இதழிலும் நண்பர் குகநாதனின் பாரிஸ் ஈழநாடு, மற்றும் ஈழமுரசு முதலான இதழ்களிலும் அவ்வப்போது படித்திருக்கின்றேன்.
    உள்ளார்ந்த ஆற்றல் மிக்க எவரும் தாம் நேசித்த தொழிலை, உலகின் எந்தப்பகுதிக்குச்சென்றாலும் தொடருவார்கள் என்பதற்கு வரதராஜாவும் ஒரு சாட்சி.
    அவர் ஜெர்மனியிலிருந்தவாறு அய்ரோப்பிய நாடுகளில் ஒலித்த - ஒளிபரப்பான ஊடகங்களிலும் பேசியவர். தான் முன்னர் பணியாற்றிய வீரகேசரியின் வார வெளியீட்டிலும் அரசியல் பத்திகள் எழுதியவர்.
    1990 ஆம் ஆண்டளவில் நான் அவருடைய முகவரியை தேடி எடுத்து கடிதம் எழுதியிருந்தேன். அச்சமயம் அவுஸ்திரேலியாவில் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தையும் அவுஸ்திரேலியாவில் தொடக்கியிருந்தேன்.
    வெளிநாடுகளிலிருந்தும் அதற்கு ஆதரவு திரட்டும்பொருட்டு, நான் வரதராஜாவுக்கு எழுதிய கடிதத்திற்கு தாமதமின்றி அவர் பதிலும் எழுதியிருந்தார். இன்றும் அந்தக்கடிதம் என்வசம் கோப்பில் பத்திரமாக இருக்கிறது.
    அச்சமயம் அவர் விடுதலைப்புலிகளிலும் அதன் தேசியத்தலைவரிடத்திலும் தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். நான் அவுஸ்திரேலியாவில் தொடரும் பணியை வாழ்த்தியதுடன், " அந்தப்பணி எதிர்காலத்தில் அவசியமற்றுப்போகும் வகையில் விரைவில் தமிழ் ஈழம் மலர்ந்துவிடும் " என்றும் அவர் எழுதியிருந்தார்.
    அவருடைய நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது நம்பிக்கையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், எமது நட்பில் என்றைக்கும் நம்பிக்கையற்றுப்போகும் வகையில் நாம் நடந்துகொள்ளவும் இல்லை.
    அதனால்தான் எனது சக தோழன் பற்றிய அஞ்சலிக்குறிப்புகளை கண்ணீர் மல்க எழுதுகின்றேன்.
    வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் நடத்துகிறார்கள்.
    சிலர் அவ்வாறு நடத்தாமலேயே தொடர்ந்தும் ஊடகங்களுக்கு எழுதிவருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருந்த வரதராஜாவின் கை , இன்று நிரந்தரமாக ஓய்ந்துவிட்டது. வெளிநாட்டிலிருந்து ஊதியம் எதனையும் பெறாமல் தமது ஆத்ம திருப்திக்காக எழுதிக்குவித்தவர்களில் ஒருவர் வரதராஜா.
    தத்தமது குடும்பங்களுக்காக வெளிநாடுகளில் தமது ஆத்மார்த்த நேசிப்புத்தொழிலுக்கு மாற்றாக வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள்தான் இந்தத் தமிழ்ப்பத்திரிகையாளர் கூட்டம்.
    வரதராஜாவும் ஜெர்மனியில் ஒரு தொழிற்சாலையில் நீண்ட காலம் பணியாற்றினார். ஓய்வுபெறும் காலம் வந்துவிட்ட பின்னரும் சோர்வின்றி உழைத்தார். அவர் பணியாற்றிய வேலைத்தலத்தின் சுற்றுச்சூழல் அவருடைய சுவாசக்குழாய்களுக்கு பக்க விளைவுகளைத்தந்திருப்பதாக அறியமுடிந்தது.
    உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை, தொழில், மருந்து மாத்திரைகள், சுற்றுச்சூழல் என்பன மனிதர்களுக்கு பக்க விளைவுகளாக சில நோய்களை சொந்தமாக்கிவிடுகின்றன.
    அவ்வாறு ஒரு பக்கவிளைவை நண்பர் வரதராஜாவின் உடல் தாங்கியிருந்து, கடந்த 22 ஆம் திகதி அவருக்கு விடுதலை வழங்கியிருக்கிறது.
    ஏற்கனவே அவர் தமது மனைவியை இழந்துவிட்டிருக்கிறார். இன்று அவரும் மனைவி சென்ற இடத்திற்குச்சென்றுள்ளார்.
    அன்று சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நண்பர்கள் வரதராஜாவுக்கும் சேதுபதிக்கும் வீரகேசரி குடும்பம் பிரியாவிடை வழங்கியது.
    அன்று அவர்கள் இருவரையும் கட்டித்தழுவினேன்.
    அதன்பின்னர் அவர்களைப்பார்க்கக் கிடைக்கவில்லை.
    இன்று நினைவுகளினால் அவர்களின் ஆத்மாக்களை கட்டித்தழுவுகின்றேன்.
    புலம்பெயர் வாழ்க்கை இப்படித்தான் எமக்கு வாய்த்திருக்கிறது.

    கவிஞை நகுலா சிவநாதன்எழுதிய விண்ணின் துளியே!

    By: Unknown On: AM 2:44
  • Share The Gag
  • விண்ணில் இருந்து வடியும் நீரே!
    விரைந்து நீயும் புவிக்கு வாராய்
    மண்ணில் வளம் பெருக்கியே!
    மனித வாழ்‌வை செழிப்பாக்கிறாய்

    துளிதுளியாய் சேர்ந்து நீயும்
    துாயநீராய் வருகிறாய்
    இடி மின்னல் இணையாய் இன்று
    பின்னல் இட்டு வருகிறாய்

    மழையாய் புவிக்கு விரைகிறாய்
    மணிக்கணக்கில் புவியோட்டில் சேருகிறாய்
    விலையில்லா உன் சேவை இன்று
    விளைபயிருக்கு ஆனந்தம்

    ஓ! மழைத்துளியே!
    ஒன்று சேரும் உன் பாங்கு
    ஒற்றுமை உணர்வை கூட்டுது இங்கு
    நின்று நீயும் புவிக்கு வந்து
    உயிரின வளர்ச்சியை கூட்டு என்றும்


    ஆக்கம்  கவிஞை
    நகுலா சிவநாதன்



    ஜெசுதா யோ எழுதிய நடிகர்கள் நிறைந்த உலகம்!

    By: Unknown On: AM 2:24
  • Share The Gag
  • எப்பவும்
    எதையும்
    மற்நவரை
    கண்டு கதைததும்
    நம்பும் உள்ளங்கள்
    விரைவில் 
    ஏமாற்றப்படுவதும் உண்டு .../

    நடிகர்கள்
    நிறைந்த உலகம்
    உள்ளொன்று வைத்து
    புறம் ஒன்று பேசும்
    பேச்சாளர்
    மலிந்த மேடை.,,/

    வெளியில் அழகு 
    உள்ளம் அழுக்கு 
    வேஷம் போடும் 
    உலகமிது..

    ஆக்கம் ஜெசுதா யோ


    செவ்வாய், 24 மே, 2016

    எஸ்.ஏ-நிலான் கானிபாலிசம்‬ குறும்படத்தின் ஆரம்ப பூசை நிகழ்வு

    By: Unknown On: AM 1:45
  • Share The Gag
  • எஸ்.ஏ-நிலான்இயக்கத்தில் 5 வது குறும்படமாக உருவாகிவரும் ‪ படம்தான் கானிபாலிசம்‬ குறும்படம்,

      இதன்  ஆரம்ப நாள் பூசை நிகழ்வு இக்குறும்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் தொழிநூட்பகலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில்...! வர இருப்பதாக (எஸ்.ஏ-நிலான்) தகவல் தந்துள்ள ளார் இவர்கள் இந்த முன்னெருப்பு சிறப்புற ஈழத்துக் கலைஞர் சார்பில் எஸ்.ரி.எஸ் இணையம் வாழ்தி நிற்கின்றர்

    திங்கள், 23 மே, 2016

    வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010

    By: Unknown On: PM 12:05
  • Share The Gag
  • டென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு.
    இன்று புலம் பெயர் நாடுகளில் தமிழ் படைப்பாளிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது. அதேவேளை பெண் படைப்பாளிகளைப் பொறுத்தவரை அது இரட்டிப்பாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் எழுத்துத் துறையில் இருந்த பெண்களில் பலர் இப்போது இல்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் தாக்குப்பிடிக்கக் கூடியவாறு பலருடைய வாழ்வியல் சூழல் இல்லை. இந்த நிலையில் இடைவிடாது முயன்று கொண்டிருக்கும் டென்மார்க்கின் பெண் படைப்பாளி வேதா இலங்காதிலகத்தை சந்தித்தோம்
    கேள்வி : நீங்கள் கவிதையிலும், படைப்பிலக்கியங்களிலும் நாட்டம் கொள்ளக் காரணமென்ன ?
    வேதா : எனது தந்தையார் நகுலேஸ்வரர், பாட்டன் முருகேசு சுவாமிநாதன் ஆகியோருடைய காலத்து தாக்கம் எனது இளமைக்கால வாழ்க்கையோடு கலந்திருந்தது. அதன் காரணமாக படைப்பிலக்கியத்தில் எனது ஆர்வம் பெருகியுள்ளது என்று கருதுகிறேன்.

    கேள்வி : மூதாதையர் எப்படி உங்களிடையே கவிதைகளை ஊக்குவித்தார்கள். அதை கொஞ்சம் விளக்குங்கள் ?
    வேதா : முதலாவது எனது முன்னோர்கள் தமிழ் சார்ந்த வாழ்வு கொண்ட பெரியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் பழைய தமிழரசுக்கட்சி தொண்டர்களாகவும் இருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால தலைவர் கோப்பாய் கோமான் வன்னியசிங்கம் பின்னர் சிந்தனைச்சிற்பி கதிரவேற்பிள்ளை போன்ற தமிழ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையோராக இருந்தார்கள். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பொட்டு வைத்துத் தமிழ் உணர்வை பிரதிபலித்தார்கள். மேலும் அக்காலத்தே வெளியான பிரபல படைப்பாளிகளின் ஆக்கங்களை எல்லாம் எடுத்துவந்து வீட்டில் வைப்பார்கள். அதை வாசிப்பது எனது பொழுது போக்கு. குறிஞ்சிமலர் நாவலில் இருந்து அக்காலத்தே வந்த படைப்புக்களை எல்லாம் படித்தேன். பாரதியார் கவிதைகள் என்னை வெகுவாக பாதித்தன. கோப்பாய் தமிழ் உணர்வை தேக்கி வைத்த மண். அங்கிருந்து பல சிறந்த படைப்பாளிகள் உருவானார்கள்.
    கேள்வி : நீங்கள் அறிந்த கோப்பாய் படைப்பாளிகள் பற்றி நினைவில் உள்ளதா..
    வேதா : கோப்பாய் என்ற பெயரை தன்னில் தாங்கி கோப்பாய் சிவம் என்ற எழுத்தாளரை அறிந்துள்ளேன். அதுபோல வடகோவை வரதராசன் என்பவரையும் குறிப்பட வேண்டும். மேலும் கோவை மகேசனைவிட கோப்பாய்க்கு வேறென்ன புகழ் வேண்டும். இறுதிவரை தனது கொள்கை மாறாது இருந்த பத்திரிகையாளர். இலங்கையின் பல எழுத்தாளர்கள் கோவை மகேசனின் சுதந்திரனில் இருந்து வெளி வந்தவர்கள்தான். சமீபத்தில் நான் கோப்பாய் சென்றபோது கோப்பாய் எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் இரண்டு நூல்களை கொடுத்தார்கள். அவருடைய கணவன் சிவப்பிரகாசம் அதை என்னிடம் கொடுத்தார். ஈன்ற பொழுதில் என்ற சிறுகதைத் தொகுப்பும், உனக்கொன்று உரைப்பேன் என்ற சிந்தனைக் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தப் படைப்பாளிகள் வரிசையில் நானும் எழுத முயல்கிறேன்.. மேலும் எனது கணவர் இலங்காதிலகமும் இளமைக்காலத்தில் அதிகமாக கவிதைகளை எழுதுவார். அவரும் எனது முயற்சிகளுக்கு அன்று முதல் இன்றுவரை உறுதுணையாக இருக்கிறார்.
    கேள்வி : காதலைப் பாடும் கவிஞர்கள் நிஜ வாழ்விலும் காதலுக்காக உயிரும் விட துணிவதுண்டு.. நீங்கள் எப்படி ?
    வேதா : எனது கணவரின் தந்தையார் மலையகத்தின் தேயிலைத் தோட்டத்தில் தலைமைக் கிளாக்காக இருந்தவர். கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கே வந்தபோது என் கணவர் இலங்காதிலகம் எங்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். அவருடைய கவிதைகளை அப்போது படிப்பேன் காதல் மலர்ந்தது. நான் கவிஞரானேன், அவர் கணவரானார்.

    கேள்வி : பலருக்கு காதல் வீதியில் வரும், உங்களுக்கோ வீட்டிற்குள்ளேயே வந்துள்ளது.. மேலும் சிறீதரின் கல்யாணப்பரிசு படத்தில் வருவது போல இருக்கிறதே.. ?
    வேதா : கல்யாணப்பரிசுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் எமது காதல் பல எதிர்ப்புக்களின் மத்தியில் கைகூடியது. கல்யாணப்பரிசில் கைகூடவில்லை. அதனால்தான் எம் இருவருக்கும் இடையே நல்லதோர் புரிதல் இன்றுவரை நிலவுகிறது.
    கேள்வி : காதல் தோல்வியடைந்தால் எல்லாவற்றையும் அழிக்கும், வெற்றி பெற்றாலும் அதே இழப்புக்களை தரும் என்கிறார்கள் இது சரியா ?
    வேதா : ஆமாம்.. காதலித்த காரணத்தால் என்னை பாடசாலை போகக் கூடாது என்று நிறுத்திவிட்டார்கள். இதனால் அந்தக் காலத்தில் எச்.எஸ்.சி உயர் வகுப்பில் படித்த நான் ஒரு வருடத்திலேயே படிப்பை இழக்க நேர்ந்தது. ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்ற எனது கனவை அடித்து வாயில் போட்டுவிட்டது அந்தத் தடை. ஆனால் இரண்டாண்டு காலம் ஒரு நேர்சரியில் படிப்பித்துள்ளேன். பின்னர் டென்மார்க் வந்து படித்து பிள்ளைகள் பராமரிப்பு நிலைய பணியாளராகி அந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டேன்.
    கேள்வி : அப்படியானால் காதல் தவறு என்கிறீர்களா ?
    வேதா : இல்லை.. காதலித்து மணமுடித்த காரணத்தினால் இன்று என்னைப் புரிந்த கணவன் கிடைத்துள்ளார். இதைவிட காதலுக்கு வேறென்ன மரியாதை வேண்டும்.
    கேள்வி : அன்று ஆற்றிலே போட்ட படிப்பை இன்று டென்மார்க் குளத்திலே எடுத்துள்ளீர்கள் மகிழ்ச்சி. டென்மார்க்கிற்குள் புக முன்னர் கோப்பாயை கொஞ்சம் மனதில் வரைய முடியுமா ?
    வேதா : கோப்பாய் யாழ். குடாநாட்டில் புகழ் பெற்ற ஊர். பருத்தித்துறையில் இருந்து புறப்படும் யாழ்ப்பாணம் பிரதான சாலையில் உள்ள முக்கிய நகரம். வாழைத் தோட்டங்களால் நிறைந்த பூமி. விவசாயம், மாடு வளர்ப்பு, ரியூட்டரிகள், ஆலயங்கள் என்று சகலதும் சூழ்ந்த அழகிய மண். அங்குதான் மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்லம் இருக்கிறது. அது கடந்த சில காலமாக கவனிப்பாரின்றிக் காணப்படுகிறது. எனது கவிதைகள் எல்லாமே கோப்பாயின் அழகை சட்டையாகப் போட்டே ஊர்வலம் போகும். எனது தந்தையார் அப்பகுதியில் அதிக நிலத்திற்கு உடமையாளராக இருந்தார். இதனால் விவசாய வாழ்வின் சுகங்கள், வயல் வரப்புக்கள், தொழிலாருடன் பழகும் வாய்ப்புக்கள் என்று தாயகத்தின் மருத நில வாழ்வு மனதில் பூத்துக் குலுங்கும். சோளகக் காற்றுவந்து வாழையிலைகளை நார் நாராகக் கிழித்து நாதஸ்வரமிசைத்து, மேலே கிளம்பி காவோலையைச் சுழற்றி ஊளையிட்டு ஓடிப்போகும்.. என்ன சுகம்.. என்ன சுகம்.. இதுமட்டுமா ஐந்து லிங்கங்கங்கள் இருந்து புகழ் பெற்ற மண் கோப்பாய். வவுனியாவில் இருந்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தை உங்களுக்கு தெரியும். பிரிட்டீஸ் மகாராணிக்கு கணிதம் படிப்பித்த ஆசான். அவர் கோப்பாயில்தான் படித்தவர். அதுபோல இலங்கையின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் நாகலிங்கம், இதுபோல படித்த பஞ்சலிங்கங்களாகிய ஐந்து லிங்கங்கள் எழுந்த பூமி.
    கேள்வி : சமீபத்தில் கோப்பாய் போய் வந்தீர்கள் எப்படியிருக்கிறது.. ?
    வேதா : அன்று நான் பார்த்த அழகிய கோப்பாயை இன்று என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாமே தலைகீழாகிக் கிடக்கிறது. இதுதான் நமது கோப்பாயா என்று நம்மை நாமே கேட்க வேண்டிய அவலமே நிலவுகிறது.. மக்கள் இனம்புரியாத மௌனிகளாக வலம் வருகிறார்கள். மௌனவிரதம் இருப்பதைப் போல கொடுமை எங்கும் இருக்க முடியாது. உள்ளக்கதவை மூடிவிட்டு உன்னதம் இழந்து வாழ்கிறார்கள். அதேவேளை எனது காலத்தில் கீழ்வகுப்புக்களில் படித்த பல பெண்கள் இப்போது ஆசிரியைகளாகவும், அதிபராகவும், விரிவுரையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சியைப் பார்க்க மனதிற்கு மகிழ்வாகவும் இருக்கிறது.
    கேள்வி : கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதுகிறீர்கள்.. உங்களைப் போல மற்றவரால் எழுத முடியவில்லை என்ன காரணம் ?
    வேதா : எனது பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். நானும் கணவனும் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் நிலையை கடந்துவிட்டோம். இதனால் போதிய நேரம் இருக்கிறது. இதுபோல எல்லோர்க்கும் வாய்ப்பது கடினம்.
    கேள்வி : அப்படியானால் கணவன் பொறுப்புக்களைச் சுமந்தால் பெண்கள் படைப்பிலக்கியத்தில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும் என்கிறீர்களா ?
    வேதா : அது தவறானது.. ஒரு நல்ல படைப்பாளிக்கு தடையென்று எதுவும் கிடையாது. கடுமையைன நிலத்தை கிழித்துக் கொண்டு தாவரம் வெளியே வருகிறதே அதுபோலத்தான் படைப்பிலக்கியமும். அது வெளிவரவில்லை என்பதற்கு எந்தவொரு காரணத்தையும் கூற முடியாது. நானே அதிகமான குடும்பத்தின் சுமைகளைச் சுமக்கிறேன் அது எனது படைப்பை தடுக்கவில்லை. ஆனால் ஒரு விடயம் மிக முக்கியம் தொல்லை இல்லாமல் வாழக்கூடிய அமைதி வீட்டில் இருப்பது படைப்பை சுகப்பிரசவமாக்கும்.
    கேள்வி : தங்கள் மகள் இலாவண்யா டென்மார்க்கில் சிறந்த மேடைப்பாடகியாக இருந்தார். இப்போது அவருடய கலை முயற்சிகள் எப்படியுள்ளன ?
    வேதா : அவர் இங்கிலாந்தில் வாழ்கிறார். பிரபலமான வைத்தியசாலை ஒன்றில் தியேட்டர் கிளாக்காக வேலை பார்க்கிறார். தற்போது சைக்கோ தெரபி என்ற கல்வியையும் கற்று வருகிறார். அடுத்த ஆண்டு படிப்பு முடிகிறது. கலை என்று பேசவே நேரமில்லாத இங்கிலாந்தின் பரபரப்பு வாழ்வு.
    கேள்வி ; தங்களுடைய படைப்புக்கள் மக்களுக்கு நல்ல தகவல்களை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருப்பதை சகல படைப்புக்களிலுமே காண முடிகிறது ஏன் ?
    வேதா : அதுதான் என்னுடைய நோக்கம். மேலும் நான் பிள்ளை வளர்ப்பு தொடர்பாக ஒரு மொழி பெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளேன். அது விக்கிபீடியா, தமிழ் நூல்கள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. டேனிசில் வெளியான 0 – 14 வயதுவரை என்ற நூலும், இன்றைய காலத்து குழந்தைகள் என்ற நூலும் தமிழில் வரவே வேண்டுமென நினைத்து நான் எடுத்த முயற்சி அது. அதற்குப் பிறகு மொழி பெயர்ப்பு பணிகளில் நாட்டம் குறைந்து கவிதைகளில் முனைப்புக் காட்டினேன்
    கேள்வி : சமீபத்தில் டென்மார்க்கில் படித்த நூல்கள் பற்றி..
    வேதா : ஜீவகுமாரனின் யாவும் கற்பனையல்ல படித்தேன். நகைச்சுவையாக பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துரைத்துள்ளார். அதுபோல சக்திதாசன் கவிதைகளையும் படித்து ரசித்தேன். வேலணையூர் பொன்னண்ணாவின் தாயக நேசமிக்க படைப்புக்களையும் சுவைத்தேன். ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் படித்து ரசித்தேன். எல்லோரும் சினிமாபைத்தியங்கள்தான் அதில் இலக்கைத் தொட்ட ஒருவரைக் கண்டேன். அதுபோல இணையத்தில் பலருடைய ஆக்கங்களை படிப்பது எனது பொழுது போக்கு.
    கேள்வி : இனி நாங்கள் கேட்காமலே நீங்கள் பதில் கூறும் இடம்..
    வேதா : அலைகளின் பத்தாண்டு வளர்ச்சி என்னை திரும்பிப் பார்க்க வைக்கிறது. எல்லாமே அலைகளில் இருப்பதால் நான் தினசரி முதலில் படிப்பது அலைகள்தான். அலைகளில் உள்ள வஸந்தின் பாடல்கள், காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இந்திய தயாரிப்புக்களுக்கு இணையான தரம் அவருடைய கலைகளில் உள்ளது.
    கேள்வி : உங்கள் எதிர்கால கனவு.. ?
    வேதா : கவிதைத்துறையில் எனது மன இலக்கை தொடுவது.. முயற்சிக்கிறேன்.
    வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறோம்.



    இசையரங்கும் சப்பச்சி மாவடி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது (22‌. 05. 2016)

    By: Unknown On: AM 2:09
  • Share The Gag

  • சாவகச்சேரி சப்பச்சி மாவடி விநாயகர் ஆலயத்தில் 22. 05. 2016 அன்று இடம்பெற்ற
    பூங்காவனத்திருவிழா பத்தர்கள் கூடிச்சிறப்பாக நடந்தேறியுள்ளது இதில்
     எமது  இசைக்கலைஞர்களின் இசையரங்கும் நடந்தது என்பது முக்கியமானது


    கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கண்ணீருக்கு விலை...!

    By: Unknown On: AM 1:07
  • Share The Gag
  • உரிமை உண்மை
    நீதி நியாயம்
    விடுதலை சுதந்திரம்
    அமைதி மகிழ்ச்சி
    எனத் தொலைந்தவை
    எங்கள் மண்ணில்
    ஏராளம்... போர்
    எச்சம் தந்த மிச்சம்
    கண்ணீர் ஒன்று தான்.


    உண்ணாமல்
    உறங்காமல்
    உயிரோடு போராடி
    உயிர்ப்பான உறவாக
    பெற்றெடுத்த
    பிள்ளைகளைக்
    கணாமல் வீதிக்கு
    வீதி விம்மித் திரியும்
    அம்மாக்களின்
    கிடக்கைகளை யாரறிவார்.?


    கல்லறைக்கு காவு
    கொடுத்து கதறி
    அழும் கருவறைத்
    தெய்வங்களின்
    நம்பிக்கை நலன்
    கெட்டுப் போனதும்
    புரியாமல் புலம்பல்
    தாயக தேசத்தில்
    கேட்கின்றதே இவர்கள்
    கண்ணீருக்கு விலை.....?


     ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




    ஞாயிறு, 22 மே, 2016

    திரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார்

    By: Unknown On: PM 4:49
  • Share The Gag
  • வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும் அரசியல் ஆய்வாளர் ஊடகச்செம்மல் திரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் ஜெர்மனி ஒபெர்கவுசன் நகரில் இன்று 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தயாகச்செய்திகளைத் புலம்பெயர் நாடுகளிலுள்ள பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்குத் தொகுத்து வழங்கியவர். இவரது முழுப்பெயர் விஜயரத்தினம் வரதராஜா ஆகும்,

    பிரபல தமிழ்ப்பெரியார் கல்லடி வேலுப்பிள்ளையின் கொள்ளுப்பேரனாவார்
    பத்திரிகைத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்ற இவர் கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளராகவும் ஆய்வாளராகவும்
    கடமையாற்றி வந்தவர்


    .இவர் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் உதவிப்பொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.
    ஜெனிவாவிலிருந்து இயங்கும் சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்தில் 35 வருடகாலமாக அங்கத்தவராக இருந்தவர்.


    இவர் வீரகேசரி வெளியிட்ட நவீன விஞ்ஜானி, ஜோதி , மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 


    BBc .UNI , ரொயிற்றர் பொன்ற செய்தி நிறுவனங்களுக்கு செய்தி வழங்குனராக விளங்கினார்.இவர் தமிழருவி, ஈழமுரசு, ஈழநாடு .. ஐபிசி
    ரிரிஎன் போன்ற ஊடகங்களுக்கும் தாயக நிகழ்வுகளை செய்திகளாகவும், ஆய்வுகளாகவும் வழங்கியிருக்கிறார்.


    தமிழின விடுதலையில் ஆர்வங்கொண்ட இவர் பல கதைகள், கவிதைகள் போன்றவற்றையும் படைத்துள்ளார். 


    இவரின் மறைவு தமிழுக்கும் , தமிழினத்துக்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும். இவரின் மறைவால் துயருறும் குடும்பத்தாற்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். 

    "முகவரி இழந்த முச்சந்தி" எனும் கவிதை நூல் வெளியீட்டு(28.02.2016)

    By: Unknown On: PM 4:40
  • Share The Gag

  • மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் எனது தமிழ் முழக்கம்......
    தடாகம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்திய- இலங்கை எழுத்தாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் மற்றும் ஓட்டமாவடி றியாஸ் எழுதிய "முகவரி இழந்த முச்சந்தி" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் இன்று(28.02.2016) சிறப்பாக இடம் பெற்றவுள்ளது இதில்கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றனர் இதன் ஏற்பாட்டாளர்கள் ...

    கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய வெளி நாடு..

    By: Unknown On: AM 1:51
  • Share The Gag
  • நீ.
    நான்..
    நாம்..

    எனும் போது
    கிட்டியது சுகம்..


    அஞ்சாமல்
    துஞ்சாமல்
    மிஞ்சாமல்
    கெஞ்சாமல்
    கொஞ்சிக் கழித்த
    இனிய பொழுதுகள்..

    நாலு வருடம்
    ஒரு முறை
    கிரிக்கற்
    உலகக் கோப்பை.
    ஐந்து வருடம்
    ஒரு முறை
    ஒலிம்பிக் கிண்ணம்
    இது போல்
    வாழ்க்கையிலும்
    வரையறையுடன்
    ஆட்டம் ஆரம்பம்...!

    திரை கடல்
    தாண்டிய உன்
    திரவிய தேடல்
    நீ அனுப்பும்
    பணத்தை வழங்கும்
    வங்கி உன்
    பாசத்தை வழங்காது
    வந்து விடு என்
    நெஞ்சோடு தாங்கிடுவேன்

     ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




    சனி, 21 மே, 2016

    கவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய இயற்கையின் சீற்றம்

    By: Unknown On: PM 3:28
  • Share The Gag

  • இயற்கையின் சீற்றம்
    இலங்கையில் மழையின் தாண்டவமாட்டம்
    இறைவா இதுவா உன் தோற்றம்..
    இரங்கிட வேண்டும் உன் நாட்டம்...


    இன்னல் தருவது நீரோ...
    இதில் அவதியுருவது பாரோ...
    இதை தட்டிக் கேட்பார் யாரோ..
    இடையினில் வாழ்வதெம் கண்ணீரோ..

    இமை திறந்தால் ஊரே கங்கை
    இடம்பெயர்வோம் நாங்கள் எங்கே..
    இதயத்தில் இடிகள் இங்கே..
    இறைவா உனையே வணங்கிறோம் நாங்க


    ஆக்கம்
    கவித்தென்றல் 







    கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய குடும்பம் ஒரு சங்கீதம்...!

    By: Unknown On: AM 3:29
  • Share The Gag
  • விதண்டா வாதமும்\
    வீண் பிடி வாதமும்
    நான் என்ற அகங்காரமும்

    ஆண் என்ற ஆணவமும்
    குடும்ப ஆட்சிக்குள்
    நாற்காலி போட்டால்
    நடைப்பிணமாகிவிடும்..!


    சாதகம் பண்ணச்
    சாரீரம் சுத்தமாவது
    போல் சாதகமாய்
    அணுகுவதால் பாதகம்
    நிகழாது அமைதி
    ஆட்சி நடத்தும்.
    விட்டுக் கொடுப்பும்
    புரிந்துணர்வும்
    பரஸ்பரமும் காவாலரண்..!

    சுட்டெரிக்கும் வார்த்தைக்
    கலவை கொத்துக் குண்டுகளை
    விஞ்சிய பேரழிவாகும்.
    வருடிப் பார். வசந்தம்
    இதயத்தின் ஓரம் வீசும்.
    நெருங்கிப் பேசிப்பார்
    கோபமும் நொருங்கிப்போகும்...!

    சந்தோஷம் எனும்
    சாவி கொண்டு
    சந்தேகப் பூட்டினைத்
    திறந்து பார் ..! உன்
    நீண்ட மௌனத்தைக்
    கலைத்துப் பார் 
    மோகனம் கேட்கும்
    சமரசம் சாமரம் வீசும்
    குடும்பம் ஒரு சங்கீதமாகும்..!


     ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




    வியாழன், 19 மே, 2016

    ‎ஈழத்துப்பித்தன்எழுதிய சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி

    By: Unknown On: PM 4:59
  • Share The Gag
  • சத்தம் இன்றி - பெரும்
    யுத்தம் இன்றி
    சலசலப்பு ஏதுமின்றி
    சிணுங்கி வழிகிறாள்
    சிலநாளாய் வானமகள்
    முன்பெல்லாம்
    அவள் வரவு கண்டு
    ஆனந்தித்த பொழுதுகள் 
    அளவுக்குள் அடக்க முடியாதவை
    மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
    மமதையிலே திழைத்திருக்கும்
    மண் மணம் நாசி ஊடு புகுந்து
    மண்ணில் வாழ்ந்த நாளை
    மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்

    ஊர் போய் வந்த பின்னர்
    உறவுகள் நிலை கண்ட பின்னர்
    பெய்யெனப் பெய்யும் மழை
    பிய்ந்த கூரை வழி வழிந்து
    நிறைவில்லா வீடுகளை
    நிறைத்து நின்றதனை கண்டதனால்
    நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
    பொய்த்துத்தான் போகாயோ எனும்
    பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...


    ஆக்கம்

    ஈழத்துப்பித்தன்

    ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். (19.05.2016 )

    By: Unknown On: AM 5:37
  • Share The Gag
  • 19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது.
    யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்கு முன்னர் தனது இசை வித்துவத்தால் பல்லாயிரம் இரசிகர்களைக் கவர்ந்துகொண்டவர் யாழ் சீலன்.
    ''யாழ்ப்பாணத்தில் இசைவாணர் எம்.கண்ணன் அவர்கள் இருந்திருக்காவிட்டால் நான் இசைக்கலைஞனாகியிருக்கமாட்டேன். என் இசைக்கடவுள் கண்ணன் அவர்கள்'' எனக் கூறி வந்தவர் யாழ்.ரி.சீலன்.
    இவர் தொடாத வாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம். கிற்றார் வாத்தியம் இசைப்பதில் புகழ்பெற்றிருந்தவர், மேலும் கீ போட், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம், ஈற்றில் ஸ் ரீல் கிற்றார் போன்ற வாத்தியங்களை இசைப்பதில் மிகவும் கைதேர்ந்தவராக விளங்கி வந்த எங்கள் தேசத்தின் இசைச் சொத்து.
    கலாலயா இசைக்குழுவிலே தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தவர் தொடர்ந்து யாழ் நகரில் இயங்கிவந்த பல்வேறு இசைக்குழுக்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.
    ‘சீலன்ஸ்ரோன்’ என தனியாக ஓர் இசைக்குழுவையும் இவர் இயக்கியிருந்தார்.
    தாயக மண்ணை விட்டுப் புலம் பெயரும் வரை யாழ் சுண்டுக்குளி ராஜன்ஸ் இசைக்குழுவில் அங்கம் பெற்று கீ போட், கிற்றார் போன்ற வாத்தியங்களை ஒரே வேளையில் இசைத்து இரசிக உள்ளங்களை மகிழ்வித்து வந்தார்.
    பிரிட்டன் நாட்டுக்கு வருகை தந்த சீலன் அவர்கள் ரெய்ன்போ இசைக்குழுவின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துக்கொண்டார்.
    நாடக ஆசான் ஏ.சி.தாஸீஸியஸ் அவர்களின் நாடகங்களுக்கு இசையமைப்பதில் முழுமையான சிரத்தையோடு ஈடுபட்டுவந்தார்.
    ஐபிசி தமிழ் 1997ல் லண்டன் - வொக்ஸோல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் தனது ஒலியமைப்பு தொழில் நுட்பத்தை பகிர்ந்திருந்தார்.
    கலைஞர்களுடன் மிகவும் நேசத்துடன் உறவாடிவந்த யாழ் சீலன் அவர்களை கடந்த 07.05.2016 அன்று வைத்திய மனையில் பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன் - ஜேர்மனி, பாடகர் எம்.பாக்கியராஜா - டென்மார்க், இசைக்கலைஞர் எம்.குருநாதன் - பிரிட்டன், இசையமைப்பாளர் கே.சுந்தர் (குட்டி மாஸ்ரர்) - நோர்வே, - நோர்வே இசைக்கலைஞர் ஆர்.கணேஸ் , ஆகியோர் சகிதம் சென்று பார்க்க முடிந்தது.
    எம்மைக் கண்டதும் மிகவும் சந்தோசமடைந்தார்.
    அவரது கடைசி நிமிடங்களில் சந்தித்துக்கொண்டதில் எமக்கும் திருப்தி.
    ஈழத்து இசையுலகில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் யாழ்.ரி.சீலன்.
    வாழ்க யாழ்.ரி.சீலன் புகழ்.


    தகவல் SK Rajen























    9