வியாழன், 19 மே, 2016

Tagged Under:

‎ஈழத்துப்பித்தன்எழுதிய சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி

By: Unknown On: PM 4:59
  • Share The Gag
  • சத்தம் இன்றி - பெரும்
    யுத்தம் இன்றி
    சலசலப்பு ஏதுமின்றி
    சிணுங்கி வழிகிறாள்
    சிலநாளாய் வானமகள்
    முன்பெல்லாம்
    அவள் வரவு கண்டு
    ஆனந்தித்த பொழுதுகள் 
    அளவுக்குள் அடக்க முடியாதவை
    மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
    மமதையிலே திழைத்திருக்கும்
    மண் மணம் நாசி ஊடு புகுந்து
    மண்ணில் வாழ்ந்த நாளை
    மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்

    ஊர் போய் வந்த பின்னர்
    உறவுகள் நிலை கண்ட பின்னர்
    பெய்யெனப் பெய்யும் மழை
    பிய்ந்த கூரை வழி வழிந்து
    நிறைவில்லா வீடுகளை
    நிறைத்து நின்றதனை கண்டதனால்
    நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
    பொய்த்துத்தான் போகாயோ எனும்
    பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...


    ஆக்கம்

    ஈழத்துப்பித்தன்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக