வியாழன், 9 ஜூன், 2016

Tagged Under:

சுதர்சன் எழுதிய அம்மா....

By: Unknown On: முற்பகல் 5:54
 • Share The Gag
 • அம்மா....
  பிஞ்சு விரல் எடுத்து
  பல் படாமல் அன்பாய் 
  கடிப்பவளே
  மார்பின் இரத்தமதை

  எனக்கு கொடுத்து
  உயிர் வளர்த்தவளே
  உறங்காமல் 
  விளி திறந்து
  எனை உறங்க 
  வைத்த தேவதையே
  காலம் ஓடி நான் 
  வளர்ந்தாலும்
  தலை முடி கோதி
  ஓடி அணைப்பவளே
  நீயல்லோ 
  நடமாடும் தெய்வம்

  யார் வஞ்சிப்பினும்
  சுடு சொல் 
  கூறாது
  மகவினை காக்கும்
  உளம் கடவுள் 
  கொடுத்தானா
  அல்லது உன் 
  உதிரத்தின் 
  உணர்வதுவா

  நோய் நொடி
  எனை சேரா வண்ணம்
  தன் நோயின் 
  கொடூரத்தை காட்டாமல்
  புண்ணகைத்து
  மனதால் அழுவாய் 
  எனக்காக....

  ஆக்கம் சுதர்சன்

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக