வியாழன், 21 ஏப்ரல், 2016

Tagged Under:

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஒலிக்கூடம்....!

By: Unknown On: பிற்பகல் 4:51
 • Share The Gag
 • இசைச் சுரங்கம்
  நேர்த்தியான ராகம்
  சீரான சுருதி
  கட்டுக்குள் சுதி
  இந்தக் கூட்டுக்குள்
  லப் டப் எனும்
  தப்பாத தாளம்
  தப்பாமல் கேட்கும்..!.....

  நதி போன்று
  ஓடிக் கொள்ளும்
  குருதியை
  நாடி நாளம்
  எனும் இரு
  வழிப் பாதையால்
  வகுத்துச் செல்லும்
  நல்லது
  கெட்டதையும்
  நன்கறியும்...!

  இடையூறில்லாது
  நித்தம் கேட்கும்
  சத்தம்.! இதன்
  சத்தம் நின்றால்
  எல்லாமே சுத்தம்
  சுற்றம் சூழ்ந்து
  போடுவார் சத்தம்
  அன்றே ஒலிக்கூட
  வாழ்வுக்கு முற்று...!


  ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி
  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக