வியாழன், 21 ஏப்ரல், 2016

Tagged Under:

மீரா குகனின் கார்மேகம்

By: Unknown On: முற்பகல் 5:37
 • Share The Gag
 • பால்வெளி வீதியில்
  அந்தரித்த நிலையில்
  ஒரு கார்மேகம்
  இங்கும் அங்கும்
  திசை தெரியா திக்கில்
  அலைந்தபடியே
  அமைதியை தேடுகிறது.

  அல்லலுற்ற மனதை
  ஆசுவாசப்படுத்தியவண்ணம்
  பரந்து கிடக்கும் அண்டத்தில்
  தனக்கொரு இடம் கிடைக்குமோ
  என்ற ஒரு அழ்ந்த எதிர்பார்ப்பில்,
  சுடர் விடும் நிலவின் வெளிச்சத்தை
  மறைக்கவும் விரும்பாமல்
  தணல் என்று தகிக்கும்
  சூரியனின் வெப்ப கதிருக்கும்
  தன்னை இரையாக்காமல்....

  ஆனாலும் தனக்கென்று
  ஒரு இடம் தேடியே
  அமைதியின்றி பாவம்
  தடுமாறுகிறது
  உணர்வுகள் மட்டும்
  அதன் சொந்தம்
  கற்பனை தோற்றத்தின்
  மறு பிம்பம்
  இரவும் மங்கிய நேரத்தில்
  புன்னகையை இதழில் சுமந்தபடி
  காலமாய் காத்திருக்கிறது !
  ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக