புதன், 20 ஏப்ரல், 2016

Tagged Under:

நெடுந்தீவு அரவிந்தின் மலட்டுக்கணவன்

By: Unknown On: முற்பகல் 11:27
 • Share The Gag
 • உருப்பெருக்கமுடியா
  நீட்சியற்ற என்னாண்மையில்
  முயன்று முயன்று தோற்றுப்போகிறேன்
  உனக்கான திருப்திப்படுத்தல்களில்.

  எள்ளளவும் என்னைவிட்டகலா
  உன் முதன்மையான நேசத்தில்
  ஒரு இஞ்சளவேனும் வெறுப்புக்காட்டா உன் முகதாட்சண்யமற்ற
  தலைமுடிய கலையா
  ஒவ்வொரு விடியலிலும்
  கூனிப்போகும் என்னை
  உன்னதமான உன் நெற்றி முத்தமொன்றே நிமிரச்செய்கின்றது.

  இந்த உடல்குடையும் உன் உணர்வுகளை
  தணிக்கை செய்யாதென் இயலாப்பக்கங்களை
  மூன்றாம் பேருக்கும்
  தெரியாதுன் மெய்யன்பின்
  கருவூலங்களின் பொக்கிசமாய்
  கிடைத்த தூய்மையின்
  தெய்வம் நீ.


  ஆக்கம் நெடுந்தீவு அரவிந்

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக