செவ்வாய், 19 ஏப்ரல், 2016

Tagged Under:

ரதி மோகன் எழுதும் பனி விழும் மலர்வனம்(6)

By: Unknown On: முற்பகல் 6:51
 • Share The Gag
 • அத்தியாயம்-6
  இப்படியே மதுமதியின் மாமி மாமாவுடன் சண்டை பிடித்தே அவர்களின் கல்யாண வாழ்க்கை 25 வது ஆண்டை வருகிற மாதத்துடன் பூர்த்திசெய்கிறது. சங்கரும் சங்கீதாவும் இணைந்து பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கொண்டாட்டம் செய்வதற்கு பெரியதிட்டம் வகுத்து இருந்தனர்.. வேறு ஒருவரின் கொண்டாட்டத்திற்கு செல்வதுபோல் தாயையையும் தந்தையையும் அழைத்து சென்று சொக்க வைக்க வேண்டும் என்ற ஆவல் சங்கரிடம் நிறைய இருந்தது. " எப்படியும் இண்டைக்கு சங்கரோடை இதைப்பற்றி கதைக்கணும். .என மனதிற்குள் நினைத்தபடி தொலைபேசி இலக்கத்தை அழுத்தினாள்.. எதிர் முனையில்"" என்ன மச்சாள் ஏதாவது அவசரமோ"" சங்கீதா . " இல்லை... ஆனால் நீ இண்டைக்கு நேரத்தோடை வீட்டை வாறியா.. மாமா மாமி கல்யாண நாள் பிளானைப்பற்றி கதைக்கணும்.. ஒருக்கா உன்ரை அண்ணைக்கும் சொல்லுறியா"" .. "" ஹ ஹ நீங்க ஒருக்கா அவனுக்கு ஒரு கோல் (call ) எடுங்கோவன்.. இந்த பயம் இருக்கணும்"" நையாண்டியாக சிரித்தபடி "" சரி மச்சி நான் அவனுக்கு சொல்றன்" என்றாள்.
  அண்ணன் என்ற கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவன் என்றும் பெயரை சொல்லி அழைப்பது சங்கீதாவின் பழக்கம். அதை நாகரிகம் என கருதுபவள்.. இந்த விடயம் மதுமதிக்கு எள்ளளவும் ஏற்புடையதல்ல..,சங்கர் மேல் வெறுப்பு, கோபம் இருந்தாலும் உறவுமுறைக்கு மரியாதை கொடுப்பவள்.
  அவளால் கண்களை நம்ப முடியவில்லை... அண்ணனும் தங்கையும் சொன்ன நேரத்திற்கு வந்து காரில் இறங்கினார்கள். வந்ததும் வராததுமாய் அவளைப்பார்த்து " அடடா உனக்கும் கொஞ்சம் புத்தி கிடக்கு.. அப்பப்ப கொஞ்சம் நல்ல விசயம் செய்கிறாய்...சரி நன்றி நன்றி.. அம்மா அப்பா கோயிலால் வர முன்னம் பேசி முடிவெடுப்பம்" என்றவன்.. சுடுதண்ணீர் போத்தலில் இருந்த கோப்பியை ஒரு குவளையில் வார்த்துக்கொண்டிருந்தான். சங்கர் மேல் சுளீர் என்ற கோபம் வந்தபோதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மென்மையான புன்னகைக்குள் மறைத்தாள். சற்று நேரத்திற்கு முன்புதான் மதுமதியிடம் " மது பிள்ளைகள் வர 10 ஆகும் கோயிலுக்கு போட்டு இப்ப வாறன்" என்றபடி மாமி பிள்ளையார் கோயிலுக்கு போயிருந்தார்..
  டென்மார்க் ஹர்னிங் (Gerning)நகரில் பிரசித்தி பெற்றது சித்திவிநாயகர் ஆலயம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் நகரத்தில் ஆலயம் அமைந்திருக்கிறது... அங்கு குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் பூஜை நடைபெறும்.இரவு 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் பூஜை வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பமாவது வழக்கம். அதனால் மாமி சீக்கிரம் வந்து விடுவார் என்ற வேகம் இவர்களையும் வேகப்படுத்தியது. மாமி வெள்ளிதோறும் ஆலயத்திற்கு தவறாமல் போய் வருவார்கள்.
  சங்கர் அவச அவசரமாக ஒரு தாள் எடுத்து எல்லா குறிப்புக்களையும் நிகழ்வுசம்பந்தமாக குறித்து கொண்டான். எல்லாவிடயமும் பேசி முடிவு எடுத்து திருமண நாள் அதிகாலை நெருங்கிய நண்பர்களுடன் பூஞ்செண்டுடன் போய் பாடலுடன் பெற்றோரை எழுப்பி காலைச்சாப்பாடு (Rund stykker )வட்ட வடிவ பாண் வருபவர்களுக்கு எல்லாம் கொடுப்பது என தீர்மானித்தார்கள்.
  அந்த நேரத்தில் சங்கீதா" சங்கர் இப்பவே net இல் உடுப்பு பார்ப்பமே " என வினாவ. " ஓகோ நினைச்சன் கேட்பாய் என அம்மாக்கு சூப்பரா ஒன்று பாரன்... அதோடை உனக்கும் மதுவிற்கும் பார்.." என்றதும் .. மது முந்திகொண்டு "" சீ சீ எனக்கு வேணாம் நிறைய இருக்கு போனவாரம் ஒரு பார்ட்டிக்கு உடுத்த நல்ல பச்சை சாறி எனக்கு அது பிடிக்கும் உடுத்துக்கிறேனே...."" என்றாள் . அதுவும் சங்கரிடம் இருந்து அன்பளிப்பாக எதுவும் வாங்க அவளுக்கு பிடிக்கவில்லை. இடைமறித்த சங்கீதா"" ஐயோ மது உங்களுக்கு என்ன பைத்தியமா? உடுத்த சாறியையா திரும்ப உடுப்பது?? நான் ஒருதடவைதான் உடுத்துக்குவேன் அதற்கு பிறகு தூக்கிப்போட்டிடுவன்... உங்கடை கதையை விடுங்க.., சங்கர் ஒன்று மச்சிக்கும் ஒன்று பாரடா"" என்றதும், சங்கர் " சரி சரி எல்லாருக்கும்தான் பார்த்தாச்சு""என்றபடி தன் கைத்தொலைபேசியை கையில் எடுத்தபடி தன் அறைக்குள் நுழையவும் அழைப்பு மணி சத்தம் கேட்டது...
  ( தொடரும்)
  ரதி மோகன்
  ஓயாதகவியலைகள்

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக