வியாழன், 2 ஜூன், 2016

Tagged Under:

கவித்தென்றல்‬ எழுதிய நீதான் எந்தன் பொன்வானே..!

By: Unknown On: முற்பகல் 4:53
 • Share The Gag
 • ஆரஞ்சி நிறத்தழகு பெண்ணே - என்
  ஆவியை அறுத்தெடுக்கும் கண்ணே
  பூவிழி பார்வை எரிக்குதடி என்னை
  பூமியிலே நானும் தவிக்கிறனே பெண்ணே

  ஒளிகள் கொண்டு உன் உருவம் செய்தானோ -பல
  விழிகள் கொய்யும் உந்தன் மெய்தானோ
  மொழிகள் கூட உதிரும் தேன் தானோ
  கிளியே நீதான் எந்தன் பொன்வானோ

  மரபுக் கவிதை சொல்லுது உன் ஜாடை
  அரபுக் கடலிலும் வீசும் நீ பெண் வாடை
  இரவுப் பொழுதில் உறைந்திடும் நீரோடை - என்
  உறவைக் கொண்டாடிட வா நீராட....

  பதுமை கொண்ட உன் வெண்பணி கழுத்து
  உவமை சொல்லிடும் செந்தமிழ் எழுத்து
  உரிமை கொண்டிட உன்னை நீ நிறுத்து -என்
  இளமை உண்டிட நீ தான் என் விருந்து


                             ஆக்கம் வித்தென்றல் 

                                                  

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக