சனி, 25 ஜூன், 2016

Tagged Under:

ஈழத் தென்றல் எழுதிய இதயம் மரணத்தை தொட்டு மீள்கின்றது!

By: Unknown On: பிற்பகல் 12:24
 • Share The Gag
 • மரணத்தின் வாசம் ஒவ்வோர் இரவும்
  என் சுவாசப் பையை நெருங்கி செல்கின்றது
  இருகிக் கொள்ளும் தோள்களும்

  திணறும் இதயம் மரணத்தை தொட்டு மீள்கின்றது!
  இதயத்தின் அதிவேக துடிப்பும்
  தனிமையும் பயமும் முடிவின்
  அண்மிப்பை சொல்லி செல்கின்றன
  இதுவும் உண்மை சத்தியம்!


  இருக்கும் வரையிலான பொறாமையும்
  வெறுப்பும், தானென்ன அகங்காரமும்
  கேலியுடன் சிரித்துக் கொள்கின்றன!

  இது கூட, உண்மை சத்தியம்

  என் மறைவுக்கு பின்னும்
  என்னை பழி சுமத்திய உலகம்
  தன்னை உணர்ந்து கொள்ளுமா?


  இல்லை தொலைந்தால் இனி தொல்லையில்லை
  என்றே நிறைவு கொள்ளுமா?
  இது என் உள்ளத்தில் ஒலிக்கும் வேதனை!


  ஆக்கம்

  ஈழத் தென்றல்

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக