வெள்ளி, 17 ஜூன், 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர் எழுதிய செப்புக்குடமெடுத்து

By: Unknown On: AM 11:30
  • Share The Gag
  • செப்புக்குடமெடுத்து வந்தேன் 
    ஆத்து தண்ணி மொண்டு போக...
    எக்குத்தப்பா நனைஞ்சி நின்றேன் 
    ஐய்யா உன்னினப்பு வேக.....


    அன்பிருந்ததாலே வழுக்கி விழுந்தேன் நானே..
    வம்பிழுக்க வாயா உன் சிறுக்கி மவ தானே..
    தெம்பிருக்கும் வரை உன் தெப்பக்குளம் நானே..
    நம்பிருக்கும் நானுந்தன் மச்சமுள்ள மானே..

    முத்தெடுக்கும் வரைக்கும் வெட்கப்படுவேன் நானே...
    முக்குளித்து பாரேன் நான் சொக்கத்தங்கம் தானே....
    தத்தெடுக்க தவிக்கிறது தங்கக்குடம் தானா..
    குத்தகைக்கு நீயெடுத்து தேங்கிக் கொள்ளு தேனா..

    கும்பக்கரையோர கொய்யா கனி...
    இன்பம் சேர்க்க வந்து என்னை பறி..
    உப்புக்கரிக்காத இந்த தண்ணிக்கிளி...
    ஒப்புக்கொண்டு நீயும் வந்து என்னில் குளி..

    தப்பா தவிப்பா தெரியாது 
    தாமரையிலை தண்ணில மூழ்காது
    தண்ணில வேர்த்தா தெரியாது
    தனியா தவிக்கிறேன் நீ பாரு...

      ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக