வியாழன், 2 ஜூன், 2016

Tagged Under:

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய கொடுத்துப்பார்.....!..

By: Unknown On: முற்பகல் 4:04
 • Share The Gag
 • நம்பிக் கை
  பிடித்தவளுக்கு
  நல்லவனாயிரு
  நாணயமாயிரு
  வல்லவனாயிரு.
  வழித்துணையுடன்
  வாழ்க்கைக்கும்
  துணையாயிரு.!

  மனதைக் கொடு
  மனதைத் தொடு
  மகிழ்வைக் கொடு
  மதிப்புக் கொடு
  தட்டிக் கொடு
  விட்டுக் கொடு
  நம்பிக்கை கொடு.!

  உழைப்பைக் கொடு
  உழைப்பை மதி
  உண்மையைக் கொடு
  உறுதியைக் கொடு
  ஊக்கம் கொடு
  வெற்றியில் பங்கெடு.!

  குளப்பம் கலை
  விளக்கமாயிரு
  ஐயம் விரட்டு
  மகிழ்வைத் திரட்டு
  மனையாள் உன்
  நினைவோடு
  நிலைத்து நிற்பாள்...!


   ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
  நிழல்படம் 

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக