செவ்வாய், 14 ஜூன், 2016

Tagged Under:

ஈழத் தென்றல் கவிதைகள்எழுதிய பாமரனும் பார் ஆள்வோனும்

By: Unknown On: பிற்பகல் 12:27
 • Share The Gag
 • பாமரனும் 

  பார் ஆள்வோனும் 
  ஒன்றாமோ?
  பரதேசியும் 
  பகட்டாய் வாழும் 
  தனவந்தனும் ஒன்றாமோ?

  இரத்தம் 

  ஒரே நிறமானாலும், 
  ஒருவன் 
  பிறப்பில் கீழானவன்
  மற்றவன் 
  மேலானவன்!

  மேல்குடிக்கும் 

  கீழ் குடிக்கும் 
  ஏணி வைத்தாலும் 
  எட்டாதென்பதை 
  அறியாதது 
  நீ செய்த பாவம்!

  குனியக் குனியக் 

  குட்டும் போது 
  குனிந்தே நின்ற மூடமே
  நிமிர்ந்திடாதே
  என்றைக்கும் 
  அப்படியே கிட!

  குட்ட குட்ட 

  குனிந்தவனை 
  குட்டியே தீர்த்தவனே
  அப்படியே உன் 
  கொடுமையை 
  நிலை நிறுத்திக் கொள்!

  உனக்கும் 

  அவனுக்கும் 
  கடைசியில் 
  கிடைப்பது 
  நிச்சயமாய் 
  ஒரே கேடு தான்!

  அவன் சுவாசித்த 

  அதே காற்றை
  சுவாசிக்கும் 
  உணர்ச்சியற்றவனே 
  மரணம் அண்மித்தால்,

  உனக்கும் ஆறடி 

  அவனுக்கும் அதே கதி 
  கேடு கெட்ட 
  இரண்டு ஜென்மமும் 
  போய் சேரப் போவது 
  ஒரே குழி!


  ஆக்கம் 

                                                                ஈழத் தென்றல் கவிதைகள்

                                                  

  1 கருத்துகள்:

  1. ஈழத் தென்றல் என் கவிதை பதிவாகிய சில நிமிடங்களில் கவித் தென்றலின் பெயரில் பதிவாகிய மாயமென்ன சகோ!

   பதிலளிநீக்கு