திங்கள், 20 ஜூன், 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர் எழுதிய நிலவு சிரித்தது மனிதர்களை கண்டு !

By: Unknown On: PM 12:47
  • Share The Gag
  • என்னவென்பது இவர்கள் நிலையை..
    வருடம் ஒருமுறை இருக்கும் உபவாசம்
    பொருள் அறிந்து செயல் படுகின்றனரா?

    ஐம்புலன்கள் அடக்கும் செயல் நிலை 
    அது சொல்லும் அற்புதம் அறிந்தனரா?

    ஏழை வரியின் ஏற்றம் எதுவென்று 
    என்றேனும் இவர்கள் உணர்ந்தனரா?

    பெருநாள் என்ற ஒரு நாள் 
    எதற்கென்றாவது நினைத்தனரா?

    உபவாசம் சொல்லும் ஏழை பசியை 
    உணர்ந்து கொள்வீர் மானிடரே!

    புலன்கள் அடக்க அறிந்து கொண்டால் 
    வன்புணர்வுகள் மறையும் அறிவீரே!

    ஏழை வரியின் உன்னதமே 
    இல்லாதோர் வாழ்வு ஏற்றமுறவே!

    இறைவன் பொருத்தம் தேடி 
    பசித்திருப்பதிலும் இன்பம்..

    அவனை வணங்கி இரவுகளில் 
    விழித்திருப்பதும் இன்பம்..

    இறைவனை மனதில் இருத்தி 
    தனித்திருப்பதிலும் இன்பம்..

    பெயருக்காக கொடுக்கும் தானம். 
    இறை யச்சமில்லா வணக்க வழிபாடு,

    தொழுகை இல்லா பசித்திருந்த நோன்பு,
    கேளிக்கையில் திளைத்த வாழ்க்கை,

    பயனளிக்குமா என்று வானில் நின்று 

    ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக