ஞாயிறு, 19 ஜூன், 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர் எழுதிய உத்தமனென்று சொல்ல யாருமில்லை..

By: Unknown On: AM 2:54
  • Share The Gag
  • உத்தமனென்று சொல்ல யாருமில்லை..
    புத்தன் சொன்னதொன்றும் வேதமில்லை
    குத்தம் குறை காணும் உலகமிது...நீ
    சுத்தமென்று வாழ பழகிக்கொள்ளு...


    உறவு என்பது உலகில் உள்ளவரை..
    உயிர் துறந்துவிட்டால் உன் கூட யாருமில்லை
    இரவல் வாழ்வு நீ வாழும் வரை... நீ
    இறந்து போனால் உன் வாழ்வு என்ன நிலை...


    பொறுமை உலகில் புகழிடம் தரும்
    பெருமை உன்னை இழிவாக்கி விடும்
    அருமை பெருமை சொல்லும் ஒரு கூட்டம்
    திறமை இருக்கும் வரைக்கும் பாராட்டும்


    இரக்கமென்பது பிறப்பில் உள்ள குணம்
    இதயமின்றி வாழுதே சில குள்ள மனம்
    இறைவன் தந்த இந்த நல்ல வரம் - நீ்
    இரங்கி வாழ்ந்திட்டால் நன்மை தரும்


    பொறாமை, புகழ்ச்சி மனிதனின் இயல்பு
    பொய்யும் ,புரட்டுமின்றி வாழ்வது சிறப்பு
    உலகில் மனிதா ! நீ உன்னத படைப்பு.!
    உணர்ந்து வாழ்வதே இப்பிறப்பு..!!

    ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக