புதன், 15 ஜூன், 2016

Tagged Under:

கவிச்சுடர் சிவரமணியின் ‘’அவள் ஒரு தனித்தீவு ‘’ கதையும் கவிதையும் நூல் வெளியீட்டு 12,06.2016

By: Unknown On: முற்பகல் 5:40
 • Share The Gag
 • கவிச்சுடர் சிவரமணியின் ‘’அவள் ஒரு தனித்தீவு ‘’ கதையும் கவிதையும் நூல் வெளியீட்டு 12,06.2016. ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் பி.பகல் 2,00 மணிக்கு,

  கவிஞர் எஸ். ஆர் தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது மங்களவிளக்கினை கோணேஸ்வரா ஆலய மு. சன்முகரெத்தினக்குருக்கள் ஏற்றி வைத்தார்.பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்பிரதம அதிதி உரையினையும் ஆற்றிவைத்தார், நூல்வெளியீட்டினை நடத்திவைத்து முதல் பிரதி பெற்றுக்கொண்டமையை படத்தில் காணலாம்

  தலைமையுரையினை. ஆசிரியர் தனபாலசிங்கமும் வரவேற்பு உரையினை /வி. குணபாலா கலாசார உத்தியோகத்தரும் சிறப்புரையினை கலைமகள் கிதாயா ரிஸ்வி ( தடாகம் கலையிலக்கியவட்டம் ) அவர்களும்.நூல் விமர்சனத்தை திருமலை நவம் சிரேஷ்ட ஊடகவியலாளர் அவர்களும் .மேலும் சிறப்பு உரையும் வாழ்த்துபட்டயமும் வவுனியா தமிழ்விருட்சம் கண்ணன் வழ்ங்கினார்.

  அடுத்து வவுனியா விரிவுரையாளர் பார்த்திபன் அவர்களும் வாழ்த்திப்பேசினர். சிறப்பு நிகழ்வாக ஆசிரியர் முல்லைத்தீபன் தலைமையில் கவியரங்கமும் இடம்பெற்றது.அடுத்து நூல் ஆசிரியரின் ஏற்புரையும் தாய்த்தேச கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆஞ்சலோவினால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.

  இந்தவெளியீடு சிறப்புற்றமைக்கும் கவிச்சுடர் சிவரமணி இதுபோன்று இன்னும் பலபடைப்புக்களை படைத்து எழுத்துத்துறையில் நிறந்து சிகரம் தொடவும் ஈழத்துக்கலைஞர்கள்சார்பில் நம்மவர் கலைஞர்கள் இணையம்எஸ்.ரிஎஸ். வாத்திநிற்கின்றது ,

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக