புதன், 8 ஜூன், 2016

Tagged Under:

´உலகத்தமிழ் நாடக விழா-2016. பிரான்ஸ் -. 24, 25, 26.2016

By: Unknown On: பிற்பகல் 1:49
 • Share The Gag
 • ´உலகத்தமிழ் நாடக விழா-2016. பிரான்ஸ் -
  செப். 24, 25, 26.2016 ம் நாட்களில் பாரிசில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் நாடக விழா ஏற்பாட்டுக்குழுவினர் சார்பில் திருவாளர்கள் பரா, அரியநாயகம், ஏலையா முருகதாசன், சுதா ஆகியோர் எசன் தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் நுண்கலைகல்லூரி இயக்குனர் தமிழருவி நயினை விஜயன் அவர்களைச்சந்தித்தபோது........!
  சமூக விடுதலைக்கு வலிமைமிக்க ஊடகமான,நாடகக் கலையை இளம் தலைமுறைக்குக் கையளிப்போம் ´` என்ற தொனிப்பொருளில் 
  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24, 25, 26.9.2016, மூன்று தினங்கள் நடை பெறவுள்ளது.உலகத் தமிழ் அரங்கையும், அரங்கியலாளர்களையும்
  ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது அமையவுள்ளது.300 க்கும் அதிகமான கலைஞர்கள் 5 கண்டங்களிலிருந்தும் கலந்துகொள்ளவுள்ளதாக 
  தெரியவருகிறது.பிரபல நடிகர் திரு.நாசர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
  உலகத்தமிழ் நாடக விழாவுக்கான சிறப்பு மலருக்கான ஆக்கங்களை நீங்கள் அனுப்பி வைக்கலாம்.நாடகம் இசை, நடனம்,ஆகிய 
  ஆற்றுகையாளர்களின் படைப்புகள் பற்றிய உங்கள் பார்வைகள், பதிவுகள்,நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கான உங்கள் ஆக்கங்கள்,எமது தொன்மையான கலைவடிவங்களை ஊக்குவிக்கவேண்டிய எமது கடமைகள்,குறும்படங்கள் பற்றிய திறனாய்வுகள்,பதிவுகள்,வளர்ச்சிக்கான கருத்துக்கள்;உங்கள் ஆக்கங்களை அனுப்ப oudalmozhi@gmail.com எனும் முகவரிக்கு உங்கள் ஆக்கங்களை 30.6.2016 ற்கு முன்னராக அனுப்பிவையுங்கள். (info thamilaruvi-Germany)
  இன்டர்நேஷனல் தமிழ் நாடக விழா -2016.

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக