செவ்வாய், 7 ஜூன், 2016

Tagged Under:

மீரா குகன் எழுதிய சிட்டுக்குருவி

By: Unknown On: முற்பகல் 5:38
 • Share The Gag

 • பட்டு வண்ண சிட்டுக்குருவி
  பச்சை மரத்தில் தத்திப் பறந்து
  பார்ப்பவர் மனதை கொள்ளை கொண்டு 

  பாடி மயக்கிறாய் என்னை இன்று


  சின்னஞ்சிறிய உருவில் வந்து 
  சிட்டாய் வானில் சிறகடிக்கிறாய் 
  சிந்தையை உடன் கவர்கிறாய் 
  சிக்கலற்ற வாழ்வை எனக்கு உணர்த்துகிறாய்

  கலக்கம் என்பதும் உனக்கில்லையா
  கடிகாரம் பார்க்கும் வேலையும் உனக்கில்லையா 
  கவலைகளை என்றும் உணராமலே 
  காற்றில் பறக்கிறாய் சுதந்திரமாகவே

  உன்னைப் போலவே நானும் 
  உயர பறக்க ஆசை கொண்டேன் 
  உள்ளத்தில் இடர்கள் நெருடாமல் 
  உவகையில் சிரிக்க வேண்டும் எந்நாளுமே

  ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி


  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக