ஞாயிறு, 2 அக்டோபர், 2016

Tagged Under:

டென்மார்க் முருகன் ஆலயநவராத்திரி பூசைகள் ஆரம்பம்

By: Unknown On: முற்பகல் 11:35
 • Share The Gag

 • முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் நேற்றய தினம்மை சனிக்கிழமை ஆரம்பமாகியது
  ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
  இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அமைகின்றது, நவமி 10ம் திகதி முடிவடைகிறது.

  விரதம் இன்று 01ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும்.
  பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு முறையே நவராத்திரி பூசைகள் இடம் பெறுகிறது .
  ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுபெறுகின்றது.
  எனவு இம்முறை இலட்சுமிதேவிக்கு நான்கு நாட்கள் அமைகின்றது.
  மறுநாள் 11.10.2016 செவ்வாய்க்கிழமை விஜயதசமி – ஏடு தொடக்குதல் மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது.
  துர்க்கைக்குரிய இரண்டாவது நாள் சிறப்பு பூசை இன்று மாலை 6,00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது .
  இன்றைய சிறப்பு பூசையை திரு திருமதி மோகன் குடும்பம் ( சிவினிங்கன் )
  உபயமேடுத்து சிறப்பிக்கின்றார்கள் .
  நீங்களும் நவராத்திரி பூசைகளில் உபயமேடுத்து சிறப்பிக்க விரும்பினால் 300.kr செலுத்தி நீங்களும் உபயமேடுத்து சிறப்பிக்கலாம்
  இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
  தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக