வெள்ளி, 16 செப்டம்பர், 2016

Tagged Under:

ரதி மோகன் எழுதிய பாடி அழைக்கிறோம் வா அம்மா,..

By: Unknown On: முற்பகல் 4:03
 • Share The Gag
 • வெள்ளி மஞ்சள் நீராடி விரதமிருந்து
  தேவியே உனை சரணடைந்தோம்
  தோத்திரங்கள் பாமாலைகள்
  அபிஷேகித்து ஆராதனை செய்கின்றோம்...

  சிங்கத்தினை மேலேறி வருபவளே
  வீரத்தின் நாயகியே எம் தாயே
  திரிசூலத்துடன் எழுந்து வருவாயே
  தீயோரை அழித்து எமை காத்தருள்வாயே...

  மகிஷன் அசுரனை அழித்து
  பூலோக மாந்தரை காத்தவளே
  தேவரின் கோரிக்கையை ஏற்றவளே
  எம்மவர் அழும் ஓசை மட்டும்
  உன் செவியில் இன்னும் விழவில்லை...

  வாக்குமானவள் வாழ்வுமானவள்
  தோஷங்களை நீக்கியே அருளுபவள்
  பௌர்ணமி பூஜை உனக்கு சிறப்பாம்
  பாடி அழைக்கிறோம் வா அம்மா,...
   
  ஆக்கம்கவிஞை ரதி மோகன்
   

  1 கருத்துகள்:

  1. வணக்கம் ரதி !

   பாடி அழைத்துப் பசுந்தமிழ் போர்த்துகிறாய்
   நாடிவரு வாளன்னை நாட்டமுடன் - தோடியே
   கொஞ்சிடும் வண்ணம் கொடுத்தவரி அத்தனையும்
   நெஞ்சில் இனிக்கும் நிறைந்து !

   அருமை அழகு ரதி தொடர வாழ்த்துகள் !

   பதிலளிநீக்கு