புதன், 4 மே, 2016

கவிக்குயில் சிவரமணியின் நீறு பூத்த அக்னி

By: Unknown On: 11:11 AM
  • Share The Gag

  • மனம் எனும் ஏட்டில் 
    கொஞ்சம் மகிழ்ச்சிப்பூக்களை 
    தூவுகையில்
    நீறு பூத்த அக்னிதுண்டங்களை 
    வீசிப்பார்க்கிறது விதி
    சதிராடும் தாளத்திற்கேற்ப
    தாளம் மாறவும் மறுக்கிறது இதயம்
    இதுதான் ???வெறுப்பின் நொடி...!!
    கவிக்குயில் சிவரமணி


    ஜெசுதா யோவின் உணர்ந்தேன்

    By: Unknown On: 2:33 AM
  • Share The Gag
  • உன்னோடு பேசும் போது
    உணராத அன்பினை


    உன்னோடு பேசாத நாட்களில்
    உணர்ந்தேன் நானும் 


    உயிர் வலி அதுயென்பதை
    உனைவிட்டு பிரிந்தால் -.இந்த 
    உலகத்தை விட்டே பிரிந்திடவேனும்


    உன்னோடு வாழும் இந்த நாட்கள் 
    என் வாழ்வில் பொன்னான
    காலமே....//

    ஆக்கம் ஜெசுதா யோ


    jesu

    செவ்வாய், 3 மே, 2016

    மீரா குகனின் ஒளி அன்பும் ஒரு அதிர்ஷ்டமே

    By: Unknown On: 12:00 PM
  • Share The Gag
  • அன்பின் அதிர்ஷ்டம்
    உறவின் வரப்பிரசாதம்
    எளிதில் கிடைக்கப் பெறாத 
    அரிய பொக்கிஷம் 
    ஒப்பற்ற ஒரு உண்மை 
    உணர்வின் பெருமை 
    இருளின் வெளிச்சம் 
    வாழ்வின் அர்த்தம் 
    கிடைத்தும் துறந்தால் 
    வாழ்வே மாயம் 
    பற்றில்லா நாட்களில் 
    வெற்றிடம் நிச்சயம் 

     ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

    திங்கள், 2 மே, 2016

    கவிப்புயல் இனியவனின்: முள்ளில் மலர்ந்த பூக்கள்

    By: Unknown On: 6:41 AM
  • Share The Gag

  • எல்லாமே ...
    கடந்துபோகும் ....
    நீ மட்டும் ...
    விதிவிலக்கா ....?

    ஆயிரம் காலத்து ....
    பயிர் -திருமணம் ....
    காதலின் ஆயிரம் ....
    நினைவுகளை ....
    கொன்று நிறைவேறும் ...!!!

    வாழ்க்கை ஒரு ....
    நாடக மேடை ....
    காதலர் ....
    விட்டில் பூச்சிகள் ....!!!


    ஆக்கம் கவிப்புயல் இனியவன்

    ஞாயிறு, 1 மே, 2016

    கவிமகன்.இ எழுதிய நாமும் மனிதரே...!

    By: Unknown On: 8:33 AM
  • Share The Gag


  • வானம் முழுக்க மழை மேகம்
    நிலம் நிறைந்த ஈரம் - ஆனால்
    நாங்கள் நா நானைக்க 
    நீரின்றி கிடக்கிறோம்

    தேன் குடிக்கும் ஈக்கள் கூட்டம்
    ஊர் முழுக்க மொய்த்து கிடக்க
    உயிர் வாழ தீனி கேட்டு - உரிமைக்காய்
    இரைஞ்சி கிடக்கிறோம்
    எங்கள் கரங்கள் தேய்ந்து
    என்புகள் பாழடைந்து
    தேகமே புண்ணாக்கப்பட்டு - சாவுக்காய்
    தேம்பிக் கிடக்கிறோம்
    எங்கள் வீட்டு கூரைகளில்
    ஊடுருவும் நட்சத்திரங்கள் கூட
    வெளிப்பற்று இருட்டுக்குள் - ஒளிக்காய்
    துடிப்பற்று கிடக்கின்றோம்
    எங்கள் இதயங்கள்
    இரும்புகளால் இணைக்கப்பட்டு
    மின் மெழுகால் முலாம் - பூசி
    நிமிர்ந்த ரோபோக்களல்ல
    உங்களால் திருகப்படும்
    திசைகளில் ஆட நாமெல்லாம்
    சுருள்கள் நிறைந்த - உங்க
    சிறுமி விளையாட்டு பொம்மைகளல்ல
    வெடித்த கொப்பளங்கள்
    வடிக்கும் சீள்கள் குடித்து
    ஏப்பமிடும் உங்கள் சுரண்டல் -பசிக்கு
    இத்தாலிய பிக்‌ஷாக்களல்ல
    உங்களைத் தான் கேட்கிறோம்
    நாங்கள் நடந்த பாதைகளில்
    புற்களை வளர்த்து சிரிக்கும் - உங்கள்
    கொடூரங்களை விட்டுவிடுங்கள்
    லெனின் கண்ட கனவின்
    உடைசல்களையாவது எங்கள்
    வலிகள் மாற்றும் - புது
    மருந்தாக மாற்றுங்கள்
    வாழ விடுங்கள் எங்கள்
    உடலை உண்டு விட்டு
    கருகிய கரை என - உங்கள்
    வீட்டு தங்க குப்பை கூடையில் வீசாதீர்
    உயிருள்ள, உரிமையுள்ள,
    உணர்வுள்ள மானிடர் நாம்
    எம்முடல் நரம்புகளால் - நன்று
    கட்டப்பட்ட இரத்த கூடு.
    நெடிய வளர்ந்த மரங்களின்
    வேர்களிடையே நாங்கள் பதுங்க
    ஆசை கொள்ளவில்லை - உமைபோல்
    நாமும் துளிர்க்க விரும்புகிறோம்
    படர்ந்து பரந்து சூரிய ஒளியை
    எம்மிடமிருந்து பறித்து எம்மை
    முடக்கி விடாது முயல விடுங்கள் - நாம்
    முளைவிட்டு நிமிர்கிறோம்
    எங்கள் மீது பூசப்பட்ட முதலாளித்துவ
    சேற்றை கழுவ விடுங்கள்
    நாங்கள் நாங்களாகவே - நிமிர்ந்து
    மனிதர்களாக வாழ்கிறோம்
    இன்னும் ஒரு மே வரும் உம்மிடம் உரிமை கேட்கும் நாள் பிறக்கும்
    அமைதியாய் ஓர் நாள் விடுப்பு - அனுமதி
    தந்து சம்பளத்தை புடுங்கி கொள்வீர்.
    மறுநாள் எம்மில் ஊறும் - தேன்
    குடிக்க காத்திருபீர்
    நாமும் ஊற்றெடுக்கும் வியர்வையை
    துகிலுரித்து குருதி சிந்தி கிடப்போம்
    நீங்கள் மலர்ந்து காய்த்து பழமாகி
    விதையாகி மீண்டும் முளைத்து....
    எங்கள் ஈரத்தை உறிஞ்சி - உச்சமாய்
    நெடிந்துயர்ந்து செல்வீர்கள்.
    நாங்கள் எங்கள் வியர்வையை
    பரிசாக்கி காய்ந்த கரங்களின்
    புண்களுக்கு மருந்தாக எங்கள்
    மண்ணை பற்றி கொள்வோம்...
    ************************************

     ஆக்கம்  இரத்தினம்கவிமகன் k a

    கவிப்புயல் இனியவனின்: சிரித்து பேசியவள்

    By: Unknown On: 6:53 AM
  • Share The Gag
  • குங்குமம் போல் ....
    சிவந்த முகத்துடன் ....
    சிரித்து பேசியவள் ....
    குங்கும பொட்டோடு ...
    குனிந்து நிற்கிறாள் ....!!!


    கொன்றால் பாவம் ....
    அப்போ என்னை ...
    காதலால் கொன்றவள் ...
    நீயும் பாவி .....!!!

    உன் ..
    காதல் தோட்டத்தில் ...
    என்னை சருகாக ....
    ஏற்றுக்கொள் ....
    உரமாக என் காதலை ....
    வளர்க்கிறேன் ....!!!



    ஆக்கம் கவிப்புயல் இனியவன்

    குமுதினி ரமணனின்" உழைப்பாளிகள் தினம்.

    By: Unknown On: 6:43 AM
  • Share The Gag
  • சித்தமதை தினம்  உழைப்பில் தந்தவரை
       சிந்தையிலே கொள்ளும் ஓர்  நாளாம்.
    நித்தமவர் உடல்  வருத்தி பிறர் வாழ
       நித்திரை, பசி மறந்து  உழைத்தார்.
    முத்தமிட்டு அவர்கரங்கள் உயர்வாய் 
      முத்தமிழால் போற்றிடுவோம்எந்நாளும்.


    வறுமையது வாழ்வாகி நாளும்  துன்பம் 
         வளமின்றி பசியால் உழல்தல் நன்றோ.
    சிறுமையது பணம் பதுக்கும் என்றும் 
         சினமுறவே வெகுண்டெழுவர்  புரட்சி 
                      நன்றே.                           
    பெருமையது நமக்காய் உழைப்போர் வாழ்
         பெருமையுடன்  காத்தல் நல்லோர் 
                     பண்பே.


    தூய்மையது  திறம்படவே காப்போர்
                      வாழ்வு
         துன்பமாக  இழிவுடனே நோக்கல் 
                     பாவம்.  
    வாய்மையது சிறப்புறவே பெருமனதாய்
                     நோக்கில்
         வளமாக நம் வாழ்வைத்  தந்தவரே  
                       சிறந்தோர்.
    தாய்மை போலே தாய் நாட்டை   
            தரமாய்க் தமைக் கொடுத்துக்   
                 காப்போர்  

    தன்நிறைவாய்  காத்தல்  உயர்வே..

    ஆக்கம்   
    குமுதினி ரமணன் யேர்மனி: