புதன், 20 ஏப்ரல், 2016

உங்களிகன் கொண்டாட்டங்களை கொண்டாடிமகிழ வூப்பர் மண்டபம் வாருங்கள்

By: Unknown On: 2:29 AM
  • Share The Gag

  • நற்பணி செய்து வரம் வூப்பர் மண்டபத்தின் நிர்வாகக்குழு சிறப்பாக எம்மவர்கள் கொண்டாட்டத்துக்கு வூப்பர் மண்டபம்
    அமைத்துள்ளதும் அதில்  கலைநிகழ்வுகள், திருமணக்கொண்டாட்டங்கள், பிறந்தநாள் என பல்வகைக்கொண்டாட்டத்துக்கு நற்பணி வெய்துவரும்
    நிங்கள் அறிந்ததே,

    வூப்பர் மண்டபம் குழுவினருக்கு  ஒழுங்காக நிர்வாகத்துடன் நல்ல உபசரிப்புடன் உங்கள் விழாவுக்கு வருபவர்களை தங்கள் கொண்டட்டமென நின்று கவனித்து நற்சேவை செய்யும் இயைஞகளை இணைத்துசிறப்பாக செய்துவருகிறதும் நிங்கள் அறிந்ததே,


    அதில் நீங்களும் இணைந்து உங்கள் கொண்டாட்டத்தை  அங்கு சென்று கொண்டாடி அவர்கள் சிறப்பை கண்றியுங்கள் ,

    உபசரிப்பின் சிறப்பே  விருந்தினரின் மகிழ்வு  அந்த மகிழ்வை வூப்பர் மண்டபம் நிர்வாக குழுவினர் அளிக்கின்றனர்



     வூப்பர்  மண்டபமானது அம்மன் ஆலயத்தினது என்று நீங்கள் அறிந்ததே  இந்த மண்டப்தில் இணைவதால் ஆலய வளச்சிக்கும் தாயக உறவுகளின் நற்பணிக்கும் இதில் வரும் நிதி  பயன்படுத்தப்பட்டுவருகிறது அதில் நீங்களும்  இணைய உங்கள் கொண்டாட்டங்களுடன்  வூப்பர் மண்டபம் வாருங்கள் என அழைக்கின்றார்கள் வூப்பர் மண்டபம் நிர்வாக குழுவினர்

    செவ்வாய், 19 ஏப்ரல், 2016

    வல்வெட்டிதுறையில் (22.04.16)இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இன்னிசை மாமழை

    By: Unknown On: 4:33 PM
  • Share The Gag
  • எதிர்வரும்22திகதி இந்திரன்விழாவைமுன்னிட்டுவல்வெட்டிதுறை குச்சம்ஒழுங்கை சைனீஸ் விளையாட்டு கழக ஆதரவில்இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் "வவுனியாராகஸ்வரம்"இசைக்குழுவின் இன்னிசை மாமழையில் நனைந்திட எம் அன்பார்ந்த ரசிக சொந்தங்கள்,எமதுஇசைக்குழுவின்அன்புரசிகர்கள்,ஆதரவாளர்கள்,அன்பர்கள்நண்பர்கள்,எம் கறுப்புசரித்திரங்கள் எனஎமதுஏகோபித்த நல்உள்ளங்கள் அனைவரையும்
    அன்போடு வருக வருக என அழைத்து நிற்கிறோம்..

    ‎ஈழத்துப்பித்தனின்‬ ஒருநாள் யுத்த நிறுத்தமாம்

    By: Unknown On: 4:21 PM
  • Share The Gag
  • அருவி ஊற்றென
    அழுது வடித்தவள்
    அடங்கிக் கிடக்கிறாள்

    பொருமி வெடித்திட
    புழுங்கித் தவிக்கிறாள்
    தழுவித் தகித்தவள்
    தயங்கி நிற்கிறாள்


    ஒற்றைநாள்
    ஒருதலைப்பட்ச 
    யுத்த நிறுத்தமாம்
    சத்தம் இன்றி
    சலனம் இன்றி
    இப்போதான்
    சற்று சிரித்துச்
    சிவக்கிறாள்

    சிவக்கிறாள்
    சிரிக்கிறாள் இவளென
    சிந்தை தெளிந்து
    சிரிக்க முடியவில்லை
    ஒருதலைப்பட்ச
    ஒருநாள்
    யுத்த நிறுத்தம் தானாம்

    யுத்தம் எப்பவும்
    சத்தத்தோடு வெடிக்கலாம்
    பாதிப்பு முன்னதை விட
    பலமாயும் இருக்கலாம்
    யுத்த நிறுத்தம்
    காலவரையற்று
    நீடிக்கவும் படலாம்
    எதற்கும் தயாராய்த்தான்
    இருப்பை நிலை நிறுத்த
    எடுத்தடி வைக்கிறேன்...

    ஆக்கம் ஈழத்துப்பித்தன்


    கவிஞர்சுபாரஞ்சனின் மின் மினிப் பூச்சியாய்.

    By: Unknown On: 4:01 PM
  • Share The Gag
  • //இருள்மை// கொண்டு
    வரைந்த இரவில்.......

    //ஓளிர்மை//கொண்டு
    துடைக்கும்

    மின் மினிப் பூச்சியாய்........
    வெளிச்சக் கோடுகளை
    வரைகையிலே
    விடிந்து போகிறது.......

    அதிகாலையோ
    அவசரப்பட்டு நகர்கிறது
    வானவில் கனவுகளோடு.......

    கனவுகள் முடிக்கையிலே
    இரவு மீண்டும் 
    வரைகிறது..........


    ஆக்கம் 

    கவி
    ஞை சுபாரஞ்சன்


    கவித்தென்றல்‬ எழுதிய ஏட்டுக்கு எட்டாத கல்வி

    By: Unknown On: 7:34 AM
  • Share The Gag
  • உருகிய வெண்ணையாய் அவள் தேகம்
    உயிரினில் உருகுது அவள் மோகம்
    விலகிய சேலையும் இடைதனிலே
    விரகமெனும் நூலை எழுதியது விழியினிலே..

    பாமரனும் படிக்க நினைக்கும் நூலிது
    பகலவனும் பணிந்து போகும் கோளிது
    தாமரையும் நனைந்துவிடும் நாளிதழ்
    தலையணையும் எழுதிடும் ஓர் மடல்

    ஏட்டுக்கு எட்டாத கல்வியோ...
    நல்ல பாட்டுக்கும் சிக்காத பல்லவியோ..
    கூட்டுக்குள் தங்காத குருவியோ...
    வேட்கையை தீர்க்காமல் போறியா?

    ஆக்கம்
    கவித்தென்றல் 

    ரதி மோகன் எழுதும் பனி விழும் மலர்வனம்(6)

    By: Unknown On: 6:51 AM
  • Share The Gag
  • அத்தியாயம்-6
    இப்படியே மதுமதியின் மாமி மாமாவுடன் சண்டை பிடித்தே அவர்களின் கல்யாண வாழ்க்கை 25 வது ஆண்டை வருகிற மாதத்துடன் பூர்த்திசெய்கிறது. சங்கரும் சங்கீதாவும் இணைந்து பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கொண்டாட்டம் செய்வதற்கு பெரியதிட்டம் வகுத்து இருந்தனர்.. வேறு ஒருவரின் கொண்டாட்டத்திற்கு செல்வதுபோல் தாயையையும் தந்தையையும் அழைத்து சென்று சொக்க வைக்க வேண்டும் என்ற ஆவல் சங்கரிடம் நிறைய இருந்தது. " எப்படியும் இண்டைக்கு சங்கரோடை இதைப்பற்றி கதைக்கணும். .என மனதிற்குள் நினைத்தபடி தொலைபேசி இலக்கத்தை அழுத்தினாள்.. எதிர் முனையில்"" என்ன மச்சாள் ஏதாவது அவசரமோ"" சங்கீதா . " இல்லை... ஆனால் நீ இண்டைக்கு நேரத்தோடை வீட்டை வாறியா.. மாமா மாமி கல்யாண நாள் பிளானைப்பற்றி கதைக்கணும்.. ஒருக்கா உன்ரை அண்ணைக்கும் சொல்லுறியா"" .. "" ஹ ஹ நீங்க ஒருக்கா அவனுக்கு ஒரு கோல் (call ) எடுங்கோவன்.. இந்த பயம் இருக்கணும்"" நையாண்டியாக சிரித்தபடி "" சரி மச்சி நான் அவனுக்கு சொல்றன்" என்றாள்.
    அண்ணன் என்ற கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவன் என்றும் பெயரை சொல்லி அழைப்பது சங்கீதாவின் பழக்கம். அதை நாகரிகம் என கருதுபவள்.. இந்த விடயம் மதுமதிக்கு எள்ளளவும் ஏற்புடையதல்ல..,சங்கர் மேல் வெறுப்பு, கோபம் இருந்தாலும் உறவுமுறைக்கு மரியாதை கொடுப்பவள்.
    அவளால் கண்களை நம்ப முடியவில்லை... அண்ணனும் தங்கையும் சொன்ன நேரத்திற்கு வந்து காரில் இறங்கினார்கள். வந்ததும் வராததுமாய் அவளைப்பார்த்து " அடடா உனக்கும் கொஞ்சம் புத்தி கிடக்கு.. அப்பப்ப கொஞ்சம் நல்ல விசயம் செய்கிறாய்...சரி நன்றி நன்றி.. அம்மா அப்பா கோயிலால் வர முன்னம் பேசி முடிவெடுப்பம்" என்றவன்.. சுடுதண்ணீர் போத்தலில் இருந்த கோப்பியை ஒரு குவளையில் வார்த்துக்கொண்டிருந்தான். சங்கர் மேல் சுளீர் என்ற கோபம் வந்தபோதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மென்மையான புன்னகைக்குள் மறைத்தாள். சற்று நேரத்திற்கு முன்புதான் மதுமதியிடம் " மது பிள்ளைகள் வர 10 ஆகும் கோயிலுக்கு போட்டு இப்ப வாறன்" என்றபடி மாமி பிள்ளையார் கோயிலுக்கு போயிருந்தார்..
    டென்மார்க் ஹர்னிங் (Gerning)நகரில் பிரசித்தி பெற்றது சித்திவிநாயகர் ஆலயம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் நகரத்தில் ஆலயம் அமைந்திருக்கிறது... அங்கு குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் பூஜை நடைபெறும்.இரவு 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் பூஜை வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பமாவது வழக்கம். அதனால் மாமி சீக்கிரம் வந்து விடுவார் என்ற வேகம் இவர்களையும் வேகப்படுத்தியது. மாமி வெள்ளிதோறும் ஆலயத்திற்கு தவறாமல் போய் வருவார்கள்.
    சங்கர் அவச அவசரமாக ஒரு தாள் எடுத்து எல்லா குறிப்புக்களையும் நிகழ்வுசம்பந்தமாக குறித்து கொண்டான். எல்லாவிடயமும் பேசி முடிவு எடுத்து திருமண நாள் அதிகாலை நெருங்கிய நண்பர்களுடன் பூஞ்செண்டுடன் போய் பாடலுடன் பெற்றோரை எழுப்பி காலைச்சாப்பாடு (Rund stykker )வட்ட வடிவ பாண் வருபவர்களுக்கு எல்லாம் கொடுப்பது என தீர்மானித்தார்கள்.
    அந்த நேரத்தில் சங்கீதா" சங்கர் இப்பவே net இல் உடுப்பு பார்ப்பமே " என வினாவ. " ஓகோ நினைச்சன் கேட்பாய் என அம்மாக்கு சூப்பரா ஒன்று பாரன்... அதோடை உனக்கும் மதுவிற்கும் பார்.." என்றதும் .. மது முந்திகொண்டு "" சீ சீ எனக்கு வேணாம் நிறைய இருக்கு போனவாரம் ஒரு பார்ட்டிக்கு உடுத்த நல்ல பச்சை சாறி எனக்கு அது பிடிக்கும் உடுத்துக்கிறேனே...."" என்றாள் . அதுவும் சங்கரிடம் இருந்து அன்பளிப்பாக எதுவும் வாங்க அவளுக்கு பிடிக்கவில்லை. இடைமறித்த சங்கீதா"" ஐயோ மது உங்களுக்கு என்ன பைத்தியமா? உடுத்த சாறியையா திரும்ப உடுப்பது?? நான் ஒருதடவைதான் உடுத்துக்குவேன் அதற்கு பிறகு தூக்கிப்போட்டிடுவன்... உங்கடை கதையை விடுங்க.., சங்கர் ஒன்று மச்சிக்கும் ஒன்று பாரடா"" என்றதும், சங்கர் " சரி சரி எல்லாருக்கும்தான் பார்த்தாச்சு""என்றபடி தன் கைத்தொலைபேசியை கையில் எடுத்தபடி தன் அறைக்குள் நுழையவும் அழைப்பு மணி சத்தம் கேட்டது...
    ( தொடரும்)
    ரதி மோகன்
    ஓயாதகவியலைகள்

    குமுதினி ரமணனின் காந்தக்கண்

    By: Unknown On: 6:37 AM
  • Share The Gag

  • வி போன்ற விழியாளே.
    கவிதை நான் படிக்கவா.

    காந்தக்கண் மொழியழகி.
    கதை நூறு சொல்லவா.
    செவ்விதழ் பேச்சழகி.
    செந்தமிழில் பழகவா.
    பொன்சிரிப்பில் பூத்தவளே.
    பொன்னகைதான் தோற்றதடி.
    வானத்து நிலவோ.
    வசந்த மல்லிப் பூவோ.
    பார்வையாலே கொல்லுரியே.
    பாவம் நானும் விட்டு விடு
    ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி: