செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

Tagged Under:

ஈழத்துப்பித்தன்‬ எழுதிய சுந்தர சுவிஸ் நாட்டில் குடியேறினான்

By: Unknown On: முற்பகல் 5:45
 • Share The Gag
 • அழகான சுவிஸ் நாட்டின்
  அல்ப்ஸ் மலையின் தீரத்த்திலே
  அழகேசன் குடியேறினான்

  படியேறி வருகின்ற பக்தர்கள்
  குறை தீர்க்க பாசலிலே
  பாலகனாய் குடியேறினான்

  செந்தமிழர் குறை தீர்கக
  செவ்வரளி மலர் சூடும் - திருச்
  செந்தூரான் குடியேறினான்

  குஞ்சரி வள்ளியொடும்
  குறுநகை தேவயானையொடும்
  குமரேசன் குடியேறினான்

  ஈழத்து தமிழர்களின்
  இன்னல்கள் கண்டுமே
  ஈசன் மகன் குடியேறினான்

  மயூரத்தின் மீ தேறி
  மலைகளின் ஊடேறும்
  மயிலோன் குடியேறினான்

  சுந்தர சுவிஸ் நாட்டில்
  சூழும் பகை தொலைக்க
  சுப்பிரமணியன் குடியேறினான்

  எம் தமிழ் காவலன்
  ஏற்றம் மிகு பாசலில்
  எழிலோனாய் குடியேறினான்
   ஆக்கம்   ஈழத்துப்பித்தன்‬
   
   
   
  (பாசல் பதியிலுறை சுப்பிரமணிய சுவாமி மீது பாடப்பட்டது)

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக