ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

Tagged Under:

ஈழத்துப்பித்தன்‬ எழுதிய பாசல் பதி எங்கும் பக்தர் வெள்ளம்

By: Unknown On: PM 4:58
  • Share The Gag
  • பஞ்சமுகன் தேரில் ஏறும் அழகான காட்சி கான
    பாசல் பதி எங்கும் பக்தர் வெள்ளம்
    எம் தமிழர் குறை தீர்க்க வந்த செல்வனே
    ஈழ மண்ணிருந்து வந்தவர்க்காய் வந்த சொந்தமே

    வெற்றிகள் யாவும் வழங்கிடும் நாயகனே
    சிந்தையில் நிறைந்த சித்தி விநாயகனே
    நித்தமும் உந்தன் படியேறி வந்தோம்
    நீ மட்டும் எங்கள் துணை என்று நின்றோம்

    ஆடி ஞாயிறிலே அழகுத் தேர் ஏறி
    அவனித் தமிழர்க்கு அருள் சொரியும் பேரரசே
    முன்னை முதல்வனாய் அழகு சுவிஸ் பதியில்
    அள்ளி அருள் சொரிய கோவில் கொண்டவனே

    பஞ்ச முகத்தொடு பவனி வந்து
    வெஞ்சமரால் வெந்த எம் நெஞ்சமதில்
    குந்திக் கிடக்கும் குறை அகற்றி
    குவலயத்தில் மகிழ்ந்துலவ வைப்பவனே

    பாசல் பதியில் உறை சித்தி விநாயகனே
    பாசம் பொழிகின்ற தாயும் ஆனவனே
    நேச உறவுகளின் நெஞ்சம் நிறைந்தவனே
    நேரில் கண்டுருக வந்தோம் உன் வாசலிலே
    ஆக்கம்   ஈழத்துப்பித்தன்‬
     
     

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக