சனி, 13 ஆகஸ்ட், 2016

Tagged Under:

யாழ் வல்வெட்டித்துறையில் 13.08.2016, இடம்பெற்ற 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா (நிழல்படங்கள்)

By: Unknown On: பிற்பகல் 4:00
 • Share The Gag
 • யாழ் வல்வெட்டித்துறையில் 13.08.2016, இடம்பெற்ற 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா
  ஈழத்தில் வாழும் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் எழுதிய 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 13.08.2016, சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை அமரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
  நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராஜா தலைமை வகித்தார்.
  வரவேற்பு நடனத்தினை சிதம்பரேஸ்வரா நடனாலயப் பள்ளி இயக்குநர் செந்தூர்ச்செல்வன் வழங்கினார். தமிழ் மொழி வாழ்த்தினை மாணவிகள் கிசானி, லோஜினி, ரிதர்சனா ஆகியோர் இசைத்தனர். வாழ்த்துக் கவியினை கவிஞர் குடத்தனையூரான் சிவா வழங்கினார்.
  ஆசியுரையினை படைப்பாளர் சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நூலினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை சிறீதரன் ஜெயமாலா அவர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன.
  தொடர்ந்து நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுக உரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நிகழ்த்தினார். இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை காவ்ய பிரதீபா வன்னியூர் செந்தூரன் தொகுத்து வழங்கினார்.
  நூலின் ஆய்வுரையினை கவிஞர் பொலிகையூர் சிந்துதாசன் நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நிகழ்த்தினார். சிறப்புரையினை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆற்றினார். வாழ்த்துரையினை வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகநாதன் நிகழ்த்தினார்.
  ஒளிஅரசி சஞ்சிகை ஊடக அனுசரனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏற்புரையினை நூலாசிரியர் கம்பிகளின் மொழி பிறேம் வழங்கினார். இந்த நூலினை விஜய் அச்சுப் பதிப்பகம் அச்சேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
  கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் கடந்த வருடம் காய்ந்து போகாத இரத்தக் கறைகள் எனும் குறுநாவலை வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக