வியாழன், 14 ஜூலை, 2016

Tagged Under:

'மரிக்கார்' எஸ். ராமதாசுக்காக தயாநிதியின் கண்ணீர் அஞ்சலி..!

By: Unknown On: முற்பகல் 4:27
 • Share The Gag
 • கதை ஆசிரியனாய்
  நாடக இயக்குனனாய்
  நல்ல நடிகனாய்
  உற்ற நண்பணாய்
  நானிலம் போற்றும்
  நல்ல மனிதனாய்
  குடும்பத் தலைவனாய்
  சிறந்து விளங்கினாய்..!

  நகைச்சுவை மூலம்
  நாட்டில் ஒற்றுமை
  தளைக்க தவறாது
  உழைத்த உன்னதனே
  தமிழ் சிங்களம் இஸ்லாம்
  இணந்து வாழ்ந்தால்
  சிறப்புறும் எனும்
  மையக் கருத்தால்
  கோமாளிகள் எனும்
  தொடர் நாடகத்தை
  இலங்கை வானொலியில்
  தொடர்ந்து ஒளிபரப்பினாய்..

  உப்பாலி மரிக்கார் அப்புக்குட்டி
  எனும் பாத்திரப் படைபுக்களால்
  உலகையே வலம் வந்தாய்.
  ஈழத்து வரலாற்றில்
  நூறு நாட்கள் தொடர்ந்து
  ஓடிய வெற்றிப் படம் தந்தாய்.
  அதி கூடிய படங்களில்
  நடித்த சாதனையாளன் நீயானய்..!

  நேற்றுப் போல் எல்லாம்
  நெஞ்சோடு நினைவிருக்க
  தோற்று போனது வாழ்வு.
  அனாலும் வாழ்வை வென்றவன்
  மனித மனங்களை அழகுற
  வைத்தவன்,இன்று அகிலமே
  கண்ணீர் சொரிய நீ
  மட்டும் நெடும் பயணமானாய்.
  சென்று வா அமைதி உனை
  அணைத்துக் கொள்ளட்டும்.
  பிரிவால் துயருறும் அன்பு
  மனைவி நேசப் பிள்ளைகள்
  சதீஸ் பிரியா பேரக் குழந்தைகளுக்கு
  எங்கள் ஆறுதல் வார்த்தைகள்.
  வையம் உள்ள வரை
  உங்கள் நாமம் அழியாது.
  ஆத்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக