புதன், 13 ஜூலை, 2016

Tagged Under:

மாபெரும் சிறப்புக்கலைஞர் 'மரிக்கார்' எஸ். ராமதாஸ் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாட்....!

By: Unknown On: முற்பகல் 6:16
 • Share The Gag


 •  இன்று நண்பர் ராம்தாஸின் மகள் பிரியாவிடமிருந்து தொலைபேசியூடாக ஓர் அதிர்ச்சி தரும் தகவல் நண்பர் 'மரிக்கார்' எஸ். ராமதாஸ் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டதாக.
  நண்பர் ராமதாஸ் நம்மை விட்டுப் பிரிந்தது நாம் செய்த துரதிர்ஷ்டமே...இலங்கைக் கலையுலகம் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டது.

  'மரிக்கார்' ராமதாஸ் நல்லதொரு எழுத்தாளர், நல்லதொரு நடிகர், நல்லதொரு தயாரிப்பாளர், நல்லதோர் இயக்குனர் என வானொலி, மேடை, தொலைக்காட்சி, திரைப்படம் என இலங்கைக் கலையுலகில் வெற்றிகரமாய் வளம் வந்தவர். அதைவிட அனைவரின் கஷ்டங்களை அறிந்து உதவும் மனப்பான்மை கொண்ட நல்லதொரு மனிதர்...நல்ல நண்பர்.
  இறுதிக் கிரியைகளில் நம்மால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் அவரது குட்ம்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  நம் நெஞ்சங்களில் நீங்கி இடம் பிடித்துவிட்ட ராம்தாஸின் ஆத்மா சாந்தியடைவதாக.
  அவரது நாமம் தமிழ் மொழி உள்ளவரை தரணியெங்கும் வாழும்.

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக