வெள்ளி, 1 ஜூலை, 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர் எழுதிய எங்கள் பெயர் அநாதை

By: Unknown On: பிற்பகல் 1:32
 • Share The Gag
 • ஆதரவின்றி வாழ்கிறோம் ஆண்டவா - எங்கள்
  அநாதையென்ற பெயரை நீ மாற்றவா
  அன்புள்ளம் கொண்டு உன்னை போற்றவா
  அகிலத்தில் எங்களுக்கு ஒளியேற்றவா

  அன்னை வைத்த பெயர் ...
  அழகு என்று சொன்னவரன்று
  அநாதையென்று சொல்லும் போது
  அழுகை வருகிறதின்று

  உருளும் இந்த உலகினிலே...
  உருவமில்லா ஒருவன் நீயே..
  உருகும் எங்கள் நிலையை
  உணரும் ஒருவன் இறைவா நீயே

  குறைகள் யாவும் அறியும் இறைவா
  குமுறும் உள்ளம் எரியும் குரலை அறிவா
  குடலும் வயிறும் மனித உடலில் ஒன்றே
  குழந்தையில்லா பெண்மை உலகில் நன்றே

  ஏளனம் செய்யும் வாழ்வினிலே
  ஏழைகள் நாங்கள் தொலைவினிலே
  ஏங்கிறோம் தினந்தோறும் பிணியினிலே
  ஏகனே இரங்கிட செய்வாய் நல்ல மனங்களிலே

                                 ஆக்கம் வித்தென்றல் 


                                                  

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக